நந்தினி சத்பதி
நந்தினி சத்பதி (Nandini Satpathy) (ஜூன் 9, 1931 – ஆகஸ்ட் 4, 2006) இந்திய அரசியல்வாதியும், எழுத்தாளரும், ஒரிசாவின் முதலமைச்சராக (ஜூன் 1972 முதல் டிசம்பர் 1976 வரை) இருமுறை பதவி வகித்தவருமாவார். இளமைப் பருவம்1931 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதியில் பிறந்த நந்தினி இந்தியாவின் கட்டாக்கைச் சேர்ந்த பிதாபூர் என்ற ஊரில் வளர்ந்தார். இவர் காளிந்தி சரண் பாணிகிரகியின் (Kalindi Charan Panigrahi) மூத்த மகளாவார். இவரது நெருங்கிய உறவினரான பகவதி சரண் பாணிகிரகி (Bhagavati Charan Panigrahi) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஒடிசாவில் நிறுவியவர். அரசியல் பணிரேவன்ஷா கல்லூரியில், ஒடியா மொழிப்பாடத்தில் முதுகலைப்பட்டப் படிப்பினைப் பயின்று கொண்டிருந்தபோது நந்தினி தனது கல்லூரியின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் செயற்படத் தொடங்கினார். ஒடிசாவில் கல்லூரிப் படிப்பிற்கான செலவினங்கள் அதிகரித்ததை எதிர்த்து 1951 இல் மாணவர் போராட்டம் தொடங்கியது. பின்னர் அது தேசிய இளைஞர் போராட்டமாக மாறியது. நந்தினி சத்பதி தலைமை தாங்கி நடத்திய ஒரு போராட்டத்தின்போது காவற்துறையின் தாக்குலுக்கு ஆளாகி சிறைக்குச் செல்லவும் நேர்ந்தது. சிறையிலிருந்தபோது மாணவர் அமைப்பின் மற்றொரு தலைவரும் பின்னாளில் அவரது கணவருமாகிய தேவேந்திர சத்பதியைச் சந்தித்தார். தேவேந்திர சத்பதி இருமுறை ஒடிசா மாநில மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். 1962 இல் இந்திய தேசிய காங்கிரஸ் ஒடிசாவில் வலுவான நிலையில் இருந்தது. ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மொத்த 140 இடங்களில் 80 இடங்கள் காங்கிரஸ் வசம் இருந்தது. அச் சமயம் இந்திய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை தேசிய அளவில் எழுந்தது. இதன் தாக்கத்தால் மகளிர் மன்றத் தலைவியாக இருந்த நந்தினி சத்பதியை ஒடிசா சட்டப்பேரவை, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது. இருமுறை அப் பதவியில் இருந்தார். இந்திரா காந்தி பிரதம மந்திரியான பின் அவரது அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பிஜு பட்நாயக் மற்றும் சிலர் காங்கிரசிலிருந்து விலகியதால் 1972 இல் மீண்டும் ஒடிசா திரும்பி ஒடிசாவின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.[2] ஜூன் 25, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை ஆட்சியின் போது ரமா தேவி, நபக்ருஸ்ன சௌத்ரி (Nabakrusna Choudhuri) போன்ற பல முக்கிய தலைவர்களை இவர் சிறையிலடைக்க வேண்டியிருந்தது. எனினும் பிற மாநிலங்களில் சிறையிலடைக்கப்பட்ட முக்கிய நபர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது ஒடிசாவின் எண்ணிக்கை குறைவாக இருந்தது என்பதும், நெருக்கடி நிலையின்போது இந்திராகாந்தி அனுசரித்த கொள்கைகளுக்கு இவர் எதிர்ப்புத் தெரிவிக்க முனைந்ததும் குறிப்பிடத்தக்கது.[3] டிசம்பர் 1976 இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[2] 1977 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஜெகஜீவன்ராம் தலைமையில் அமைந்த எதிர்ப்புக் குழுவில் இவரும் ஒருவராவார். அக்குழு பின்னர் ’’ஜனநாயக காங்கிரஸ்’’ (Congress for Democracy-CFD) என்ற கட்சியாக உருவெடுத்தது. 1989 இல் ராஜீவ் காந்தியின் வேண்டுகோளின்படி மீண்டும் காங்கிரசில் இணைந்தார். அப்போது, தொடர்ந்து 15 ஆண்டுகாலம் நடந்த காங்கிரசின் ஆட்சியின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சி ஒடிசாவில் மோசமான நிலையில் இருந்தது. ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினராக 2000 வரை பணியாற்றிய பின் அரசியலிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்து 2000 இல் நடந்த தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. இலக்கியப் பணிசத்பதி ஒரியா மொழி எழுத்தாளருமாவார். இவரது படைப்புகள் பல பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒரியா இலக்கியத்தில் இவரது பங்களிப்பிற்காக 1998 இல் சாகித்திய பாரதி சம்மன் விருது (Sahitya Bharati Samman Award) வழங்கப்பட்டது.[4][5] எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினின் ’லஜ்ஜா’வை ஒரியா மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.[6] மரணம்ஆகஸ்டு 4, 2006 ஆம் ஆண்டில் புவனேஸ்வரத்திலுள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார்.[7] அறக்கட்டளை2006 இல் அவரது நினைவாக ’திருமதி நந்தினி சத்பதி நினைவு அறக்கட்டளை (SNSMT)’ தொடங்கப்பட்டது. ஒடிசாவில் செயல்படும் முன்னணி சமூகநல அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். நினைவுமறைந்த நந்தினி சத்பதியின் பிறந்த நாளான ஜூன் 9 தேதியானது அவரது நினைவாக ஒடிசாவில் ’நந்தினி திவாஸ்’ அல்லது ‘தேசிய மகள்களின் நாள்’ (Nandini Diwas-National Daughters' Day) என அனுசரிக்கப்படுகிறது.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia