நந்தினி ராய்
நீலம் கௌரானி (Neelam Gouhrani) தொழில் ரீதியாக நந்தினி ராய் ( Nandini Rai ) என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பணிபுரியும்[3] ஓர் இந்திய நடிகையும், வடிவழகியுமாவார். 2010 ஆம் ஆண்டின் "மிஸ் ஆந்திரப் பிரதேசம்" பட்டத்தை வென்ற [4] பின்னர் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. சொந்த வாழ்க்கைநந்தினி சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1][2] ஐதராபாத்தில் உள்ள செயின்ட் அல்பன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 2005 இல் பட்டம் பெற்றார். இலண்டனில் வணிக நிர்வாகத்தில் முதுநிலையை முடித்துள்ளார். 80 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பொருட்களின் விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.[5] தொழில் வாழ்க்கைபல அழகுப் போட்டிகளில் வென்றுள்ளார்.. குறிப்பாக, மிஸ் ஐதராபாத் 2008, மிஸ் ஆந்திரப் பிரதேசம் 2010, மிஸ் பாண்டலூன்ஸ் ஃப்ரெஷ் பேஸ் ஆஃப் ஏபி 2009 மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ் ஆஃப் ஏபி 2010.[5] போன்றவற்றைக் கூறலாம் இவர் ஃபேமிலி பேக் என்ற இந்தி படத்திலும், தெலுங்கு படமான மாயாவிலும் நடித்துள்ளார். மற்றொரு தெலுங்குத் திரைப்படமான மொசகல்லக்கு மொசகாடுவில் நடித்துள்ளார்.[5] 2012 இல், பாலிவுட் படமான லாக் இன் படத்திலும் காணப்பட்டார்.[2] ஏ. சஜீத்தின் குட்பை டிசம்பர் என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[5] 2014 இல், குஷி குஷியாகி[6] என்ற தனது முதல் கன்னடப் படத்தில் நடித்தார். அதில் ஆடை வடிவமைப்பாளராக நடித்திருந்தார்.[7] தனது முதல் தமிழ் படமான கிரஹணம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தெலுங்கு படமான சுடிகாடு 2 க்கு ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் அவர் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.[8] நடிகர் நானி தொகுத்து வழங்கிய உண்மைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.[4] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia