நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் ஒரு மிக பிரம்மாண்டமான பல்கலைக்கழகம். இது சிங்கப்பூரின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஆசிய அளவில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. [4] வளாகங்கள்![]() இதன் முதன்மை வளாகத்திற்கு யுன்னான் வளாகம் என்று பெயர். இது 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஜுரோங் மேற்கு மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. பள்ளிகளும், கல்லூரிகளும்இந்த பல்கலைக்கழகத்தில் 15 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு துறைகளைக் கற்பிக்கின்றன. [5]
இங்கு கீழ்க்கண்ட பள்ளிகள் உள்ளன.
இங்கு இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்றில் உயிரியல் பாடங்களையும், இன்னொன்றில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களையும் கற்பிக்கின்றனர்.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து செயலாற்றுகிறது.
![]()
கல்விஇள நிலைக் கல்விஇங்கு 23,500 பேர் கல்வி கற்கின்றனர். இவர்களில் 80% பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். மீதமுள்ளோர் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாணவர்களுக்கான கல்விச் செலவில் பெருந்தொகையை சிங்கப்பூர் அரசு செலுத்துகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் 27 % கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும். [7] வேற்று நாட்டு மாணவர்களுக்கும் கட்டண சலுகை கிடைக்கும். அந்த சலுகையைப் பெற, சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும். [8] உயர்நிலைக் கல்விஇங்கு 10,000 மாணவர்கள் முது நிலைக் கல்வியும், முனைவர் படிப்பையும் மேற்கொள்கின்றனர். இங்கு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். சில துறைகளில் சேர்வதற்கு தகுதிகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஜி.ஆர்.இ, ஜிமேட் ஆகியன. ஆங்கிலம் பேசாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலத்திற்கான சிறப்புத் தேர்வில் (டோஃபெல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். [9] பட்டங்கள்இள நிலைப் பட்டங்கள்: [10]
முது நிலைப் பட்டங்கள்:
முனைவர் பட்டங்கள்:
முன்னாள் மாணவர்கள்
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia