நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
நரிட்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் , Narita International Airport, (成田国際空港 Narita Kokusai Kūkō?) (ஐஏடிஏ: NRT, ஐசிஏஓ: RJAA), அல்லது தோக்கியோ நரிட்டா வானூர்தி நிலையம் சப்பானில் தோக்கியோ பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் சிப்பா பிரிபெக்சரில் உள்ள நரிட்டா நகரில் தோக்கியோ தொடருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 57.5 km (35.7 mi) தொலைவிலும் நரிட்டா தொடருந்து நிலையத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 7 km (4.3 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.[3] ![]() நரிட்டா நிலையம் சப்பானின் பெரும்பான்மையான பன்னாட்டு வான்பயணச் சேவைகளை மேற்கொள்கிறது; ஆசியாவிற்கும் அமெரிக்காக்களுக்கும் இடையேயான வான் போக்குவரத்திற்கு முதன்மை இணைப்புப் பாலமாகவும் விளங்குகிறது. 2007ஆம் ஆண்டில் இந்த நிலையத்தை 35,478,146 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.[4] இது சப்பானின் இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[4]சப்பானின் வான் சரக்கு மையங்களில் மிகவும் நெருக்கடி மிகுந்ததாக உள்ளது.[5] உலகளவில் மிகுந்த வான் சரக்கு கொண்டு செல்லும் வானூர்தி நிலையங்களில் ஒன்பதாவதாக உள்ளது.[5] சப்பானின் தேசிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனமான சப்பான் ஏர்லைன்ஸ், ஆல் நிப்பான் ஏர்வேஸ், நிப்பான் கார்கோ ஏர்லைன்ஸ், மற்றும் குறைந்த கட்டண வான்பயணச் சேவையாளர்களான ஜெட்ஸ்டார் சப்பான் மற்றும் ஏர் ஆசியா சப்பான் நிறுவனங்களுக்கு பன்னாட்டு முனைய மையத்தளமாக விளங்குகிறது. மேலும் அமெரிக்க வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களான டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்சுக்கு ஆசியாவிற்கான முனைய மையமாக அமைந்துள்ளது. இதனையும் காண்கமேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia