நருஹித்தோ
நருஹித்தோ (Naruhito, ஜப்பானிய மொழி: 明仁, பிறப்பு: 23 பிப்ரவரி 1960) ஜப்பான் நாட்டின் பேரரசர் ஆவார். இவரது தந்தை அக்கிஹித்தோ முடிதுறந்ததைத் தொடர்ந்து இவர் 1 மே 2019 நாளன்று செவ்வந்தி அரியணையை ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் ரெய்வா ஊழி தொடங்கியது. ஜப்பானியப் பாரம்பரிய ஆட்சிமுறை வம்சாவளியினர் வரிசையில் இவர் 126வது பேரரசர் ஆவார்.[1] பிறப்பும் கல்வியும்நருஹித்தோ, 23 பிப்ரவரி 1960இல் தோக்கியோ பேரரச அரண்மனையில் உள்ள மருத்துவமனையில் பிறந்தார்.[2] இவருக்கு 4 வயதான போது ஜப்பானில் மதிப்புமிக்க கக்குஷுயின் கல்விமுறையில் சேர்ந்து தொடக்கக்கல்வியைப் பயின்றார். பிறகு கக்குஷுயின் பல்கலைக்கழகத்தில் பயின்று மார்ச் 1982இல் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3] தனிப்பட்ட வாழ்க்கைநருஹித்தோ, 9 சூன் 1993இல் மசாகோ ஒவாடா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1 டிசம்பர் 2001இல் இளவரசி அய்கோ பிறந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia