நல்லாட்சி

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒரு தேவை நல்லாட்சி ஆகும். பொது வளங்களைப் பொறுப்புடனும் செயற் திறனுடனும் பயன்படுத்தி, ஊழலைத் தவிர்த்து, மனித உரிமைகளைப் பேணி, சட்ட ஆட்சி செய்து, வாழ்வுத் தரத்தை மேம்படுத்துவது நல்லாட்சியால் முடியும். எவ்வளவு வளம் இருந்தும் நல்லாட்சி இல்லாவிடில் அந்த வளங்கள் வீணடிக்கப்படும், நல்வாழ்வு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கிட்டாது. நாடுகளின் முன்னேற்றம் வளர்ச்சி தொடர்பான கட்டுரைகளில் நல்லாட்சி என்ற சொல் அதிகம் புழங்குகிறது. நல்லாட்சிக்கு 8 பண்புகள் உண்டு என கூறப்படுகிறது. அவையானவை:

  • குடிமக்கள் பங்களிப்பு (பச்சாயர்த்து/ஊர் நிலை, மாவட்டம், மாநிலம், நடுவர் என அனைத்து நிலைகளிலும்); சார்பான்மை மக்களாட்சி
  • சட்ட ஆட்சி (சட்டம் சார்பற்று ஆக்கப்பட்டு, சமூக அந்தஸ்து பலம் பாக்காமல் சமமாக நிலைநிறுத்தப்படல்)
  • வெளிப்படைத்தன்மை
  • விரைந்த செயற்பாடு (responsiveness)
  • இணக்காப்பாட்டை விரும்பும் தன்மை
  • சமத்துவ, அனைவரையும் உள்வாங்கும் பண்பு
  • தகுதி, செயற்திறன் (effectiveness and efficiency)
  • பொறுப்பான்மை (accountability)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya