நல்லாவூர் கிழார்நல்லாவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகத்திணைப் பாடல்கள் இரண்டு இவர் பாடியனவாக உள்ளன. அவை அகநானூறு 86, நற்றிணை 154 இவர் தரும் செய்திகள்அகநானூறு 86-ல்
வதுவை நன்மணத்தில் பொதுமக்கள் சடங்குவிருந்து
மணமேடை
திருமணச் சடங்கு
வாழ்த்து'கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகு' என்பர். முதல் இரவுபெற்றோர் தர 'பேர் இல் கிழத்தி ஆகு' என்று சொல்லி ஓரறையில் ஞெரேல் என மணமக்களைக் கூட்டுவிப்பர். மணமகள் குனிந்த தலையுடன் முகத்தைத் துணியால் மூடிக்கொண்டிருப்பாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு மணமகன் முகத்திரையை விலக்குவான். 'உன் விருப்பம் யாது' என்பான். அவள் மகிழ்ந்து அவனை வணங்குவாள். மதைஇய நோக்கோடு அவனைப் பார்ப்பாள். (பிறகு இணைவர்) சொல் விளக்கம்
நற்றிணை 184-ல்
நல்ல மழையில் அவன் வந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். இத்தகைய மழையில் வரக்கூடாது என்று தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். பெருமழை. பேரிடி முழக்கம். அதனைத் தாங்கிக்கொண்டும், கேட்டுக்கொண்டும் கானம் 'கம்'மென்று இருக்கிறது. உழுவை என்னும் வேங்கைப்புலி யானையை வலப்பக்கமாக வீழ்த்திவிட்டு உரறுகிறது. இத்தகைய அச்சம் தரும் இரவில் அவர் வராமல் இருந்தால் நல்லது. (திருமணம் செய்துகொண்டு உடனிருக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து) |
Portal di Ensiklopedia Dunia