நவான்சகர்
நவான்சகர் (Nawanshahr), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான சண்டிருக்கு வடமேற்கே 89.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17 வார்டுகளும், 10,073 குடியிருப்புகளும் கொண்ட நவான்சகர் நகரத்தின் மக்கள் தொகை 46,024 ஆகும். அதில் 23,835 ஆண்கள் மற்றும் 22,189 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.10 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 931 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.00 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 35.38 % மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 78.45%, சீக்கியர்கள் 18.05%, இசுலாமியர் 1.27%, கிறித்தவர்கள் 0.37%, சமணர்கள் 0.64% , பௌத்தர்கள் 0.65% மற்றும் பிற சமயத்தினர் 0.57% வீதம் உள்ளனர்[1] போக்குவரத்துநவான்சகர் தொடருந்து நிலையம்[2]அமிர்தசரஸ், லூதியானா, ஃபிரோஸ்பூர், ஜலந்தர், தில்லி போன்ற நகரங்களுடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia