நவின்சந்திரா ராம்கூலம்
நவீன்சந்திர ராம்கூலம் (Navinchandra Ramgoolam, பிறப்பு: 14 சூலை 1947) மொரிசியசு அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். 2024 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இவரது "மாற்றத்துக்கான கூட்டணி" பெரு வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாவது முறையாக மொரிசியசின் பிரதமரானார்.[3] மொரிசியசின் அரசியல் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இவர் உள்ளார். மொரிசியசுத் தொழிற் கட்சியின் தலைவராகவும் இவர் உள்ளார்.[4][5][6] ராம்கூலம் முதல் முறையாக திசம்பர் 1995 முதல் செப்டம்பர் 2000 வரை பிரதமராக இருந்தார், பின்னர் அக்டோபர் 2000 முதல் சூலை 2005 வரை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2005 சூலை 5 தேர்தலில், இவரது அலையன்ஸ் சோசியல் கூட்டணி வெற்றி பெற்றதை இரண்டாவது முறையாக பிரதமரானார். 2014 வரை பதவி வகித்தார்.[7] நவின் ராம்கூலம் போர்ட் லூயிஸ் நகரில் பிறந்தார். இவரது பெற்றோர் சிவசாகர் ராம்கூலம், சுசில் ராம்கூலம் ஆவர். அயர்லாந்தில் உள்ள டப்லினில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இவரது தந்தை மொரிசியசின் முதல் முதலமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும், ஆளுநராகவும் இருந்தவர்.[8][9][10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia