நவ நாகங்கள்இந்து தொன்மவியல் அடிப்படையில் ஒன்பது நாகங்கள் நவநாகங்கள் என அழைக்கப்பெருகின்றன. இவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள் என்றும், காசியபர் - கத்துரு தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. நாகங்கள்காசியபர் முனிவரின் தர்மபத்தினிகளில் ஒருவளான கத்துருவிற்கு நூற்றியைம்பது நாகங்கள் பிறந்தன. இவைகளில் முதலாவதாக பிறந்த ஒன்பது நாகங்கள், நவ நாகங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சில சில மாற்றங்களுடன் இந்த நாகங்களின் பட்டியலில் காணக்கிடைக்கின்றது. இவர்களில் ஆயிரம் நாவுடைய ஆதிசேஷன் தலைப்பிள்ளையாக கருதப்படுகிறார். அல்லது
வாசுகிஆதிசேசன் திருமாலை சரணடைய, வாசுகி பாம்பானது சிவனை நோக்கி தவமிருந்தது. வாசுகியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வாசுகி வேண்டியவாறு, தன்னுடைய கழுத்தில் நாகாபரணமாக இருக்க வரமளித்தார். ஆதிசேஷன்![]() ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, திருமால் இராமபிரானாக அவதரித்தவேளை, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர். ஆதாரங்கள் |
Portal di Ensiklopedia Dunia