நாகப்பன் படையாட்சி

சாமி நாகப்பன் படையாட்சி (Sammy Nagappan Padayatchi, 1891 - 1909) தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓர் இந்திய தியாகி ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

சாமி நாகப்பன் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தில் 1891 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தோற்றம், பிறந்த ஊர் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. ஆனால் 1900களில் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு கூலி தொழிலாளியாக அழைத்து செல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். நாகப்பன் 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.[1]

சத்தியாக்கிரகத்தில் ஈடுபாடு

1909 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியுடன் நாகப்பன் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். முதல் சத்தியாக்கிரகப் பிரச்சாரத்தின் போது, அவருக்கு 10 நாட்கள் கடின உழைப்புடன் கூடிய தண்டனை விதிக்கப்பட்டது.[2][3]

இறப்பு

1909 சூன் 21 அன்று கடுமையான உழைப்புடன் கூடிய பத்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது நாகப்பனுக்கு சுமார் 18 வயது ஆகும். கோட்டையில் ஒரு இரவைக் கழித்த பிறகு, 26 கி.மீ தொலைவில் உள்ள ஜுக்ஸ்கி சாலை சிறை முகாமுக்கு நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சூன் 30 அன்று அவர் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டு, இரட்டை நிமோனியா மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாக சூலை 06 1909 ஆண்டு இறந்தார். அவரது உடல் முழுவதும் காயங்கள் நிறைந்திருந்தது. சிறையில் குறைந்தபட்சம் ஒரு வார்டனால் அவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அவரது நோய் சிறை அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டதாகவும், அவர் இன்னும் தனது கடின உழைப்புடன் கூடிய தண்டனையை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் சக கைதிகள் தெரிவித்தனர், இது இறுதியில் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது. அனைத்து ஆதாரங்களும் இருந்தபோதிலும், அதிகாரப்பூர்வ விசாரணை சிறை அதிகாரிகளை விடுவித்து, முகாமில் உள்ள பயங்கரமான நிலைமைகள் குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.[4]

நினைவு சின்னம்

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் நாகப்பன் படையாட்சியின் நினைவை போற்றும் வகையில் அவரின் உருவ படம் வைக்கப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. "Martyrs graves at Braamfontein". City of Johannesburg. Archived from the original on 2012-06-09. Retrieved 2013-10-21.
  2. "Rethinking Gender and Agency in the Satyagraha Movement of 1913" (PDF). Archived from the original (PDF) on 2012-01-25.
  3. "Forbes India Magazine - Print".
  4. "Swami Nagappen Padayachee | South African History Online".
  5. http://www.krepublishers.com/02-Journals/JSS/JSS-25-0-000-10-Web/JSS-25-1-2-3-000-10-Abst-PDF/JSS-25-1-3-071-10-1152-Hiralal-K/JSS-25-1-3-071-10-1152-Hiralal-K-Tt.pdf

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya