நாகரத்தினம் கிருஷ்ணா![]() நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன. மாத்தாஹரி நாவல் கு. சின்னப்பாரதி அறக்கட்டளை விருதையும், சைகோன்-புதுச்சேரி நாவல், சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டு கடந்த் ஐந்து ஆண்டுகளில் சிறந்த நாவலுக்குரிய அட்ஷரவிருதையும் பெற்றுள்ளன. 2016ம் ஆண்டில் சிறந்த எழுத்தாளருக்கான மதுரை ஆயர் விருதையும் பெற்றுள்ளார் [1] வாழ்க்கைச் சுருக்கம்இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1] கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்து வருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதி வருபவர். எழுத்துலக வாழ்வுஎழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத் தொடங்கி தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். பிரான்சு நாட்டில் ' நிலா' என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் "நீலக்கடல்" தமிழக அரசின் பரிசினையும், இரண்டாவது நாவல் 'மாத்தா கரி' கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. 2022ல் வெளிவந்த இவரது சைகோன்-புதுச்சேரி நாவல், சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டு கடந்த் ஐந்து ஆண்டுகளில் சிறந்த நாவலுக்குரிய அட்ஷரவிருதையும் பெற்றுள்ளது. 2016ம் ஆண்டில் சிறந்த எழுத்தாளருக்கான மதுரை ஆயர் விருதையும் பெற்றுள்ளார். ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஆறு சிறுகதை தொகுப்புகள்; தமிழில் ஏழு நாவல்கள்; இரண்டு பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஒன்பது மொழிபெயர்ப்புகள்; பதினோறு கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு - De haute luttre (Editions Zulma) இவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய 'மாத்தா ஹரி' நாவல் 'Bavani, l'avatar de Mata- Hari என்ற பெயரில் பிரெஞ்சு மொழியிலும், இறந்த காலம் நாவல் ' Je vis dans le passé என்ற பெயரில் பிரெஞ்சிலும் (Edilivre), I Live in the Past என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டில் Tu connais la nouvelle? என்கிற பிரெஞ்சு இலக்கிய அமைப்பு Centre- Val de Loire மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மே 25-29 ஷத்தோதன் (Châteaudun) என்ற நகரிலும் ஜூன் 1-5 ழர்ழோ(Jarjeau) நகரிலும் நடத்திய தமிழ் இலக்கிய அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அ. கவிதை
ஆ. கட்டுரைகள்1. பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் (கட்டுரைகள்) (2005) 2. "சிமொன் தெ பொவ்வார் - ஒரு திமிர்ந்த ஞானசெருக்கு (கட்டுரைகள்)(2008) 3. எழுத்தின் தேடுதல் வேட்டை (கட்டுரைகள்)-(2010) 4. "மொழிவது சுகம்"[3] - கட்டுரைகள்(2012) 5. "கதையல்ல வரலாறு" - கட்டுரைகள் (2012) 6. "அல்பெர் கமுய் மரணத்தில் மர்மம்" -கட்டுரைகள் (2012) 7. "காப்காவின் பிராஹா" -பயணக் கட்டுரைகள் (2015) 8. "தத்துவத்தின் சித்திரவடிவம்" -கட்டுரைகள் (2015) 9. எழுத்தாளனின் முகவரி - கட்டுரைகள்(2020) 10. கதைமனிதர்கள் (2021) 11. தமிழ் நதி (மொழிவது சுகம்-2)(2022) இ. சிறுகதைகள்1. கனவு மெய்ப்படவேண்டும் (சிறுகதைகள்)(2002) 2. நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)(2005) 3. சன்னலொட்டி அமரும் குருவிகள் (சிறுகதைகள்)(2010) 4. சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது(அறிவியல் புனைகதைகள்))(2010) 5. "மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்"- சிறுகதைகள் (2015) 6. இடைத்தேர்தல்(2023) ஈ. நாவல்கள்1. நீலக்கடல் (தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருதுபெற்ற நாவல்) 2005) 2. மாத்தா ஹரி (நாவல்) (2008)-கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசு 3. "கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி" (தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருதுபெற்ற நாவல்) - நாவல் (2012) 4. "காஃப்காவின் நாய்க்குட்டி" - -நாவல் (2015) 5. Bavâni l'Avatar de Mata Hari நாவல்- 2015 (பிரெஞ்சு மொழியில்) 6. ரணகளம் - நாவல் (2018)[4] 7. இறந்தகாலம் - நாவல் (2019) 8. Je vis dans le passé (2021) நாவல் (இறந்த காலம் பிரெஞ்சு மொழியில்) 9. சைகோன் - புதுச்சேரி - நாவல் (2022) 10. I Live in the past - Auroville (2022) (இற்ந்தகாலம் ஆங்கில மொழிபெயர்ப்பில்) உ. மொழி பெயர்ப்புகள் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்1. போர் அறிவித்தாகிவிட்டது- நவீன பிரெஞ்சு சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு)-(2005) 2. காதலன் (l'Amant)- மார்கெரித் துராஸ்(Marguerite Duras) -பிரெஞ்சு நாவல்-(மொழிபெயர்ப்பு)(2008) 3. வணக்கம் துயரமே(Bonjour Tristesse) - பிரான்சுவாஸ் சகான்(Françoise Sagan) பிரெஞ்சு நாவல்--(மொழிபெயர்ப்பு -2009) 4. உயிர்க்கொல்லி ( சிறுகதைகள்- மொழிபெயர்ப்பு-2011) 5. மார்க்சின் கொடுங்கனவு(le cauchemar de Karl Marx) -டெனிஸ்கோலன்(Denis colin) -(மொழிபெயர்ப்பு-2011) 6. "உலகங்கள் விற்பனைக்கு" -அதிர்வுக்கதைகள்- (மொழிபெயர்ப்பு-2011) 7. "குற்ற விசாரணை(le Procès -verbal) "-லெ.கிளேஸியொ(Le Clèzio) - பிரெஞ்சு மொழிபெயர்ப்பு -நாவல் (2013) 8. புரட்சியாளன் (l'Homme révolté)- அல்பெர் கமுய்(Albert Camus) -2016 9. மாப்பசான் சிறுகதைகள் தமிழிலிருந்து பிரெஞ்சு மொழியில்1. " De haute Lutte" அம்பை சிறுகதைகள் தமிழிலிருன்து பிரெஞ்சு மொழியில் Dominique Vitalyos என்பவருடன் இணைந்து. (2015) அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia