நாஞ்சில்

நாஞ்சில் என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒரு சங்ககாலத்து ஊர் ஆகும். குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்கள் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும்.

பெயர் விளக்கம்

நாஞ்சில் என்பது நாஞ்சில்(கலப்பை) போல் தோற்றம் தரும் ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு நாஞ்சில்நாடு. அதன் தலைநகரம் நாஞ்சில். (புறம் 137)

நாஞ்சில் வள்ளுவன்

நாஞ்சில் வள்ளுவன் இவ்வூரில் வாழ்ந்த சங்ககாலத்துக் கொடைவள்ளல். இவனை வல்வேல் கந்தன் என்று ஒரு புலவர் பாராட்டுகிறார். இவனை (ஒருசிறைப் பெரியனார்,ஔவையார், கதப்பிள்ளையார், மருதன் இளநாகனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர்.

தற்காலப் பெருமக்கள்

தற்காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயரின் முன் “நாஞ்சில்” என்ற அடையாளமொழியை சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. எ.கா. நாஞ்சில் நாடன், நாஞ்சில் மனோகரன், நாஞ்சில் சம்பத்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya