நாட்டாமைநாட்டாமை என்பது தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரின் நிர்வாகத் தலைவரைக் குறிக்கிறது. சில பகுதிகளில் நாட்டாமை என்றும் மணியம் என்றும் அழைக்கப்பட்டது.[1] கிராமங்களில் நிர்வாகத்தில் அதிகாரமுள்ள இந்த நாட்டமைக்காரர் மற்றும் மணியக்காரர் பதவிகள் பொதுவாகப் பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கப்பட்டன. கிராமங்களில் நடக்கும் சண்டை சச்சரவு, பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது, நீர்நிலைகளைக் கண்காணித்தல், வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பது மற்றும் ஊர்த் திருவிழாக்களை நடத்தல் போன்று அப்பகுதியை ஆளும் பணிகள் நாட்டாமைக்குரியதாகும்.[1][2] திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் நாட்டாமை முறை பின்பற்றப்பட்டது.[3] இந்தியா விடுதலை அடைந்த பின்னர் படிப்படியாக நாட்டாமையின் அதிகாரங்கள் வலுவிழந்து, மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் ஊராட்சி மன்றம் மூலம் கிராமங்களில் நிர்வாகம் நடைபெறுகின்றது. தற்போதும் சில இடங்களில் நாட்டாமையின் அதிகார வரம்பு சுருக்கப்பட்டு, சில கிராமங்களில் சாதிரீதியான குழுக்களுக்கு மட்டும் தலைவராக இருக்கிறார்கள். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia