நாட்டுப்பற்றாளர்களின் நாள்
நாட்டுப்பற்றாளர்களின் நாள் (Patriots' Day, அல்லது Patriot's Day அல்லது Patriots Day) மாசச்சூசெட்ஸ்[1], விசுகான்சின்[2], மெய்ன் [3]) மாநிலங்களில் சட்டப்படியான விடுமுறை நாளாகும். அமெரிக்கப் புரட்சியின் போது போராடிய அமெரிக்க ஆடவர்களையும் மகளிரையும் நினைவுகூறும் வண்ணம் இந்நாளைக் கொண்டாடுகின்றனர். 1775ஆம் ஆண்டில் நிகழ்ந்த அமெரிக்கப் புரட்சியின் முதல் போர்களான லெக்சிஙடன் மற்றும் கோன்கார்டு போர்களை நினைவுகூறும் வண்ணம் இது ஏப்ரல் 19ஆம் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. 1969 முதல் இது ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் திங்களன்று கொண்டாடப்படுகிறது. மாசச்சூசெட்சிலும் மெய்னிலும் இது பொது விடுமுறையாக உள்ளது; விசுகான்சினில் பள்ளிகளுக்கான விடுமுறையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாஸ்டன் மாரத்தான் இந்த நாளில் நடத்தப்படுகிறது. 1960 முதல் ஒவொரு ஆண்டும் பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டத்தில் தங்களிட போட்டியை பாசுடன் ரெட் சாக்சு அடிப்பந்ந்தாட்ட சங்கம் இந்நாளில் பென்வே பார்க்கில் விளையாடுகிறது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia