நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை நான்காம் அனஸ்தாசியுஸ் (Pope Anastasius IV, 1073[1] – 3 டிசம்பர் 1154), கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 1153 ஆம் ஆண்டு சூலை 9 முதல் 1154 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். உரோமை குடிமகனான இவரின் தந்தை பெனடிக்டுஸ் தே சுபுரா ஆவார்.[2] இவர் திருத்தந்தை இரண்டாம் பாஸ்காலால் 1114க்கு முன்னர் கர்தினாலாக உயர்த்தப்பட்டிருக்கக்கூடும்.[3] In 1127 or 1128 திருத்தந்தை இரண்டாம் ஹோனோரியுஸ் இவரை உரோமை புறநகர ஆலயங்களுள் ஒன்றான சபினாவின் கர்தினாலாக நியமித்தார்.[4] 1130 மற்றும் 1153 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற திருப்பீடத் தேர்தல்களில் இவர் பங்கேற்றார். எதிர்-திருத்தந்தை இரண்டாம் அனகிலேத்துஸை எதிர்த்தவர்களுள் இவரும் ஒருவர். திருத்தந்தை இரண்டாம் இன்னசெண்ட் பிரான்சுக்கு தப்பி ஓடியபோது, இவரே இத்தாலியின் முதன்மை குருவாக இருந்தவர். திருத்தந்தை மூன்றாம் யூஜின் இறந்தபிறகு, இவர் திருத்தந்தையாக ஜூலை 1153இல் தேர்வானார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நோயுற்றவராகவும் 80 வயதான முதியவராகவும் இருந்தார். அத்தேர்தலின் போது இவரே அனைவரிலும் மூத்த கர்தினாலும், கர்தினால் குழுவின் முதல்வராகவும் இருந்தார். இவர் திருத்தந்தை ஹேட்ரியனின் சகோதரனுடைய மகன் என்னும் கருத்து 16-ஆம் நூற்றாண்டு முதல் சிலரால் ஏற்கப்பட்டாலும், இது இப்போது ஆதாரமற்றதாய் கருதப்படுகின்றது. பிரடெரிக் பார்பரோசா என்பவர் மற்றொரு சார்லமேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆல்பஸ் மலையைக் கடந்து இத்தாலிக்குள் பெரிய போர்ப்படையுடன் செல்ல தயாரானார். இவர் இத்தாலிக்குள் வரும் வேளையில் திருத்தந்தை மரணமடைந்தார். 1154 டிசம்பர் 3-ல் இவருடைய ஆட்சி ஒன்றரை ஆண்டுக் காலம் மட்டுமே நீடித்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia