நான் தான் பாலா
நான்தான் பாலா (Naan Than Bala) 2014இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை கண்ணன் இயக்கினார். எஸ் எஸ் எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜே. ஏ. லாரன்ஸ் தயாரித்திருந்தார் இதில் விவேக் (நகைச்சுவை நடிகர்) படத்தின் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தார் [1] 2014 சூன் 13 அன்று வெளிவந்தது. கதைச் சுருக்கம்பாலா (விவேக்), ஏழை புரோகிதர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அக்ரகாரத்தில் வசித்து வருகிறார். தன்னுடைய வயதான தாய் தந்தையரை கவனித்துக் கொண்டு அங்கேயுள்ள பெருமாள் கோவிலில் பூஜை செய்து வருகிறார். சூழ்நிலை காரணமாக பூச்சி என்ற கொலைகாரனின் தந்தையை சிறைக்கு செல்லாமல் காப்பாற்றுகிறான். இதனால் அவனது பெற்றோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் .பாலா அக்ரகாரத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பூச்சியுடன் தனது புதிய வாழ்க்கையை தொடங்குகிறான். அங்கே வைசாலி என்பவரைச் சந்திக்கிறாள்.பூச்சியைப் பற்றிய உண்மையை பாலா தெரிந்து கொள்கிறான். இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிறது. காவலர்கள் பூச்சியை துரத்துகின்றனர் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை கூறுகிறது. நடிகர்கள்விவேக் - பாலா தயாரிப்புகண்ணன் இந்தக் கதைக்காக விவேக்கை அணுகி பின்னர் 2013 சூன் மாதம் படம் தொடங்கப்பட்டது.[2] இப்படத்தின் ஒப்பந்தம் ஆனவுடன் விவேக் கும்பகோணத்தித்திலுள்ள ஒரு பெருமாள் கோவிலில் சென்று பூஜை செய்வது பற்றி பயிற்சி மேற்கொண்டார்.[3] ஆர். கண்ணன் சேட்டை (திரைப்படம்) என்ற திரைப்படத்தை எடுத்டு வருவதாக பத்திரிக்கைகளில் தவறான தகவல் வந்தது. ஆனால் அது வேறொரு கண்ணன் என்பது பின்னர் தெரிய வந்தது.[4] இப்படக்குழு டிசம்பர் 2013 இல் சென்னை கமலா திரையரங்கில் மணிரத்னம், பாரதிராஜா, கைலாசம் பாலசந்தர் மற்றும் ஏ. ஆர். ரகுமான் போன்றோரைக் கொண்டு பாடல் வெளியீட்டினை மிக பிரமாண்டமாக நடத்தினர்.[5][6] இசை
வெளியீடுஇப்படத்தின் தொலைக்காட்சி உரிமை ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது விமர்சனம்பரத்வாஜ் ரங்கன் நான் தான் பாலா நாடகத் தன்மையுடன் உள்ளதாக எழுதினார்.[7] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 5 க்கு 2 மதிப்பெண் வழங்கியது.".[8][9] மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia