நாமக்கோழி
நாமக்கோழி (Eurasian coot, அறிவியல் பெயர்: Fulica atra, புலிக்கா அட்ரா) என்பது ஒரு நீர்ப்பறவை. இது ராலிடே குடும்பத்தைச்சேர்ந்த வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கோழி ஆகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது.[3] இது மெல்லிய கறுத்த உடலையும், பளபளப்பான கறுப்பு தலையையும் கொண்டிருக்கும். இதன் நெற்றிக் கேடயம் நாமம் போல வெண்மையாக இருக்கும். இதன் அலகு வெள்ளையாக இருக்கும். பாலினங்களிடையே பெரிய வேறுபாடு இல்லை. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நாம்கோழி இனங்கள் காணப்படுகின்றன. என்றாலும் தென் அமெரிக்காவில் வாழும் நாமக்கோழி இனங்கள் பெரியவை. வகைபிரித்தல்1758 ஆம் ஆண்டில் சுவீடிய இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் அவரது சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பில் யூரேசிய நாமக்கோழியை அதன் தற்போதைய இருசொல் பெயரான ஃபுலிகா அட்ராவின் என்ற பெயரின் கீழ் முறையாக விவரிக்கப்பட்டது.[4] இதற்கு வைக்கப்பட்ட இருசொல் பெயர் லத்தீன் மொழியிலிருந்து வந்தது: ஃபுலிகா என்றால் "நாமக்கோழி", மற்றும் அட்ரா என்றால் "கருப்பு" என்பது பொருளாகும்.[5] இதில் நான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[6]
![]() விளக்கம்![]() யூரேசிய நாம்கோழியானது வாத்தின் அளவில் முக்கால் பங்கு இருக்கும். இது சுமார் 36–38 செமீ (14–15 அங்குலம்) நீளமும், இறக்கையுடன் 70–80 செமீ (28–31 அங்குலம்) அகலமும் இருக்கும். ஆண்களின் எடை சுமார் 890 கிராம் (31 அவுன்ஸ்) மற்றும் பெட்டைகள் 750 கிராம் (26 அவுன்ஸ்) எடை இருக்கும்.[7] வெள்ளை அலகு மற்றும் வெள்ளை நாமக் கேடையம் தவிர இது பெரும்பாலும் கருப்பு நிறத்தில் உள்ளது.[8] விழிப்படலம் இரத்தச் சிவப்பு, கால்கள் மங்கிய பச்சை நிறத்தில் இருக்கும். தண்ணீரில் நன்கு நீந்தும் இனமான, நாமக்கோழிகளின் நீண்ட வலுவான கால்விரல்களில் வலையமைப்பைக் கொண்டுள்ளது. ஆணும் பெண்ணும் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும்.[9] இளம் வயது நாம்கோழிகள் வளர்ந்த பறவைகளை விட வெளிறியவையாக இருக்கும். இளம் பறவைகள் வெண்மையான நெஞ்சும் மார்பு கொண்டவையாக நாமக் கேடையம் இல்லாமல் இருக்கும். வயது முதிர்ந்த பிறகு சுமார் 3-4 மாதங்களில் கறுப்பு இறகுகள் உருவாகின்றன, ஆனால் நாமக் கேடையம் ஒரு ஆண்டில்தான் முழுமையாக உருவாகிறது. யூரேசிய நாமக்கோழிகள் மேயும்போது 'சக், சக்' என மெல்லோலி எழுப்பி தன் கூட்டதோடு தொடர்பு கொள்ளும். இரவில் இவை உரத்தத குரலில் கரகரப்பாகவும் ஒலித்தும் கத்தும் பழக்கம் உடையது. பரவலும் வாழ்விடமும்பழைய உலகின் பெரும்பாலான பகுதிகளில் நன்னீர் ஏரிகள், குளங்கள் போன்ற இடங்களில் நாமக்கோழிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இது ஐரோப்பா, ஆசியா, ஆத்திரேலியா, ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இனம் அண்மையில் நியூசிலாந்தில் அதன் வாழிட எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. இவை ஆசியாவின் பெரும்பகுதியில் குளிர்காலத்தில் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி வலசை செல்கிறது. நடத்தைஇவை எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இவை நீரில் கூட்டமாக நீந்தியும் முக்குளித்தும் விளையாடிக் கொண்டிருக்கும். ஆளரவம் கேட்டதும் நீரின் மேல் தாவித் தாவி நீந்தும். சற்று தொலைவு நடந்தும் சற்று தொலைவு பறந்தும் நடு ஏரியை அடைந்துவிடும். இவை சற்று தொலைவு நீரில் இறக்கையால் அடித்துக்கொண்டு தத்தித் தாவிய பின்னரே மேலெழும்பி பறக்கவல்லவை. இவை நீர்த்தாவரங்கள், நெல், புழு பூச்சிகள், சிறு மீன்கள் போன்றவற்றை உண்ணும். இனப்பெருக்கம்இவை நீர்ப் பரப்பிலிருந்து சிறிது உயரத்தில் நாணல் புதரின்மீது நீர்த்தாவரங்களால் கூடு அமைக்கும். ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடுகட்டும் இவை அடைகாத்து குஞ்சுகளை பேணும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்கின்றன. முட்டைகள் நாள்தோறும் இடபடுகின்றன இவ்வாறு ஆறு முதல் 10 முட்டைகளை இடப்படுகின்றன. முட்டையானது மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் செம்பழுப்பு, ஊதா, கறுப்புக் கோடுகளோடும் புள்ளிகளோடும் காணப்படும். முட்டைகள் 53 மிமீ × 36 மிமீ (2.1 அங் × 1.4 அங்குலம்) அளவும், 38 கிராம் (1.3 அவுன்ஸ்) எடையும் கொண்டிருக்கும். இனப்பெருக்க காலத்தில் மிகுந்த ஆரவாரம் செய்யும் இவை அப்போது யாராவது கூட்டை நெருங்கினால் கழுத்தை நீட்டி இறக்கையை உயரத் தூக்கி கோபம் காட்டும். அடைகாக்ககும் காலம் 21 முதல் 24 நாட்களாகும். குஞ்சுகள் கருப்பு முடியால் மூடப்பட்டிருக்கும். கண்ணிற்கும் அலகின் அடிப்பாகத்திற்கும் இடைப்பட்ட பகுதி சிவப்பாக இருக்கும். அலகு வெள்ளை முனையுடன் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.[10] குஞ்சுகள் முதல் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பெட்டைகளின் அரவணைய்யில் இருக்கும். அந்த நேரத்தில் ஆண் பறவை உணவு கொண்டுவருகிறது. குஞ்சுகளை பாதுகாக்க ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தளங்களையும் ஆண் உருவாக்குகிறது. கூட்டை விட்டு வெளியேறும்போது, பெற்றோர் இருவரும் தனித்தனியாக குழுவைக் கவனித்துக்கொள்கின்றன சிலசமயங்களில் குஞ்சுகள் பிரிந்துவிடும் ஆபத்து உள்ளது. குஞ்சுகள் சுமார் 30 நாட்களுக்குப் பிறகே தானே உணவு தேட முடியும். மேலும் 55 முதல் 60 நாட்களில் சிறகு முளைக்கும். யூரோசிய நாமக் கோழிகள் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருகம் செய்கின்றன. ஆனால் பிரிட்டன் போன்ற சில பகுதிகளில் இவை சில நேரங்களில் இரண்டுமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை ஒன்று முதல் இரண்டு வயதில் இனப்பெருக்கம் செய்யத் துவங்குகின்றன.[11] குஞ்சு இறப்பானது முக்கியமாக வேட்டையாடிகளை விட பட்டினியால் ஏற்படுகிறது. பெரும்பாலான குஞ்சுகள் குஞ்சு பொரித்த முதல் 10 நாட்களில் இறந்துவிடுகின்றன. அவை உணவுக்காக பெரியவர்களை அதிகம் சார்ந்திருக்கும் போது இது ஏற்படுகிறது.[12] உணவின்மை போன்ற அழுத்தத்தினால் நாமக்கோழிகள் தங்கள் குஞ்சுகளிடம் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும். உணவுக்காக கத்தும் குஞ்சுகளை கடிக்கும். அவை கத்துவதை நிறுத்தும் வரை மீண்டும் மீண்டும் கடிக்கும். கத்துவது தொடர்ந்தால், கடுமையாக கடிக்கப்பட்டு குஞ்சு கொல்லப்படும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia