நாமசூத்திரர்நாமசூத்திரர்கள் தெற்கு மற்றும் மத்திய வங்காளத்தில் தோன்றிய, எந்த ஒரு இந்து சமய வர்ணத்திலும் சேராத அவர்ண சமூகமாகும்.[1] இந்த சமூகத்தினரை, முன்னர் பட்டியல் இன மக்களில் ஒரு பிரிவினராக சண்டாளர்கள் என அழைக்கப்பட்டனர்..[2] [3][4] [5] இம்மக்கள் பாரம்பரியமாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டதுடன், ஆறுகளில் படகோட்டிகளாகவும், மீன்பிடிப்பவர்களாகவும் இருந்தனர்.[6] நாமசூத்ரா என்பது சூத்திரர்களிடையே சிறந்தவர்கள் என்று பொருள்படும். இம்மக்கள் மத்துவர் போதித்த துவைத நெறியைப் போற்றும் வைணவர்கள் ஆவார். நாமசூத்திர மக்கள், கிருஷ்ணனரின் அவதாரமாகக் கருதப்படும் அரிசந்த் தாகூர் நிறுவிய மாத்துவ மகாசங்கத்தின் அங்கமானமானர்கள். அடையாள இயக்கம்நாமசூத்திரர் பெயர் மாற்றம்பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக இம்மக்கள் தங்களை நாமசூத்திரர்கள் என அழைத்துக்கொண்டனர். இதனால் இச்சமூகத்திற்கு பெரிய உத்வேகத்தை அளித்தது. பக்தி இயக்கத்தால் நாமசூத்ரர்கள் சமூகத்தில் சிறிது உயர்நிலை அடைந்தனர். நாமசூத்திரர்கள் தாழ்த்தப்பட்ட இந்து மற்றும் முஸ்லீம் நில உரிமையாளர்களுக்காக வேலை செய்ய மறுக்கத் தொடங்கினர், மேலும் உயர் சாதி இந்துக்களையும் புறக்கணித்தனர். [7][8][9] இதற்கிடையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கு இந்தியாவில் பிற சமூகங்களுடன், ஹரிச்சந்த் தாக்கூர் என்பவர் நிறுவிய வைணவ மத்துவா நம்பிக்கையின் அடிப்படையில், நாமசூத்ரா சமூகத்துடன் ஒத்திசைவைக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தது.[10] இந்திய விடுதலை இயக்கத்திலகாலனித்துவ வங்காளத்தில், நாமசூத்திரர்கள் இரண்டாவது பெரிய இந்து சாதியை அரிசந்த் தாகூர் உருவாக்கினர். [11] இவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் அதிகம் பங்கேற்கவில்லை..[12] 1905 வங்காளப் பிரிவினையின் போது நாமசூத்திரர்கள் பிரிவினைக்கு எதிராக போராடதால், பிரித்தானிய இந்திய அரசின் நன்மதிப்பை பெற்றனர். கிழக்கு வங்காளத்தில் நாமசூத்திரர்கள், முஸ்லீம்களுடன் ஒத்திசைவாக வாழ்ந்தனர். 1913 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நாமசூத்ரா சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விடுதி அமைக்கப்பட்டது. உள்நாட்டு ஆட்சி இயக்கத்தின் போது நாமசூத்திரர்கள் மிகவும் வேகமாக தேசிய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தனர். காலனித்துவ அரசாங்கத்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரத்தை பறிக்க, உயர் சாதித் தலைவர்களிடையே இந்த இயக்கத்தை அவர்கள் ஒரு திட்டமாகக் கண்டனர், மேலும் நாமசூத்திரர்களை, காங்கிரஸ் தலைவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சாதியிலிருந்து குரல் கொடுக்கும் ஒரு சிறிய குழு என்று கூறினர். இந்திய விடுதலைக்குப் பின்இந்தியாவுக்கு இடப்பெயர்வுஇந்தியப் பிரிவினை போது கிழக்கு பாகிஸ்தானில் வசதியுள்ள நாமசூத்திரர்களின் கூட்டம் உடனடியாக இந்தியாவுக்கு குடிபெயரந்தது. ஏழைகள் கிழக்கு பாகிஸ்தானிலேயே தங்கினர். அனைவருக்கும் சமத்துவம் என்ற முகமதலி ஜின்னா வாக்குறுதியளித்த போதிலும், கிழக்கு பாகிஸ்தான் "அரசியலிய்ல் அதிக இஸ்லாமியமயமாக்கலுக்கு" அரசு முயன்றதால், 1950-ஆம் ஆண்டுகளிலிருந்து இந்தியா மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தவர்களில் 95% நாமசூத்திரர்கள் என காவல்துறை புலனாய்வு அறிக்கை அளித்தது.".[13] இந்தியாவில் நிலை1950-க்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு புலம்பெயர்ந்த பெரும்பாலான நாமசூத்திரர் அகதிகள், உயிர்வாழ்வதற்கான எந்த வழியும் இல்லாமல் தானாகவே வேளாண்மை வேலைகளில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரப்பூர்வமாக் இவர்கள் அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், சிலர் சுதந்திரமாக நாடியா, பசிர்ஹாட் மற்றும் பல மாவட்டங்களில் குடியேறினர். நாமசூத்திர மக்களின் அன்னையாக கருதப்படும், மாத்துவா மகாசபையின் தலைவி வீணாபாணி தேவி ஆவார். கிழக்கு பாகிஸ்தானிலேயே தங்கிய நாமசூத்திரர்கள் பெரும்பாலும் உள்ளூர் முஸ்லிம்களுடன் போராட வேண்டியதாயிற்று. மேலும் அவர்கள் உள்ளூர் இந்து உயர் சாதியினருடன் சண்டையிட வேண்டியிருந்தது. இறுதியாக இந்திய அரசு 1956 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அகதிகளாக இந்தியாவிற்கு வந்த நாமசூத்திரர்களை ஒடிசா மற்றும் மத்திய பிரதேசத்தின் பழங்குடிப் பகுதிகளில், 78,000 சதுர மைல் வசிப்பிடமற்ற நீர்ப்பாசன நிலங்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அவர்களை மறுவாழ்வு செய்யும் தண்டகரண்யா திட்டத்தை அறிவித்தது. மேலும் நாமசூத்திர மக்களில் பலருக்கு அசாம், பிகார், ஒடிசா மற்றும் அந்தமான் தீவுகளில் புனர்வாழ்வளிக்கப்பட்டது. 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் நாமசூத்திர மக்களின் செல்வாக்குமேற்கு வங்களாத்தின் 6 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் 1.75 கோடி மத்துவா மகாசபையின் நாமசூத்திர வாக்காளர்கள் இருப்பதாக கருதப்படுகிறது. 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் இவர்களது வாக்குகளைக் ஈர்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசு முனைப்பு காட்டி வருகிறது.[14] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia