நாம்சாய்

நாம்சாய்
மாவட்டத் தலைமையிடம்
நாம்சாய் தங்கத் தூபி
நாம்சாய் தங்கத் தூபி
நாம்சாய் is located in அருணாசலப் பிரதேசம்
நாம்சாய்
நாம்சாய்
ஆள்கூறுகள்: 27°40′08″N 95°52′17″E / 27.66894°N 95.87135°E / 27.66894; 95.87135
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்நாம்சாய் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நாம்சாய் நகராட்சி மன்றம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,246
 • அடர்த்தி60.46/km2 (156.6/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
792103
தொலைபேசி குறியீடு03806
வாகனப் பதிவுAR-20
இணையதளம்https://namsai.nic.in/

நாம்சாய் (Namsai), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நாம்சாய் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடகிழக்கே 302 கிலோ மீட்டர் தொலைவிலும், அசாம் மாநிலத்தின் தின்சுகியாவிற்கு வடகிழக்கே 74 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. நவோ-திகிங் ஆற்றின் கரையில் நாம்சாய் நகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3,145 குடியிருப்புகள் கொண்ட நாம்சாய் நகரத்தின் மக்கள் தொகை 14,246 ஆகும். அதில் 7,487 ஆண்கள் மற்றும் 6,759 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.73% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.61%ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 20.74% உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 74.08%, இசுலாமியர் 5.76%, சமணர்கள் , பௌத்தர்கள் 13.81%, கிறித்தவர்கள் 4.09%, சீக்கியர்கள் மற்றும் பிற சமயத்தினர் 2.25% வீதம் உள்ளனர்.[1]


நாம்சாய் நகரத்தில் பேசப்படும் மொழிகள் (2011)[2]

  பழங்குடி ஆதி மொழி (4.02%)
  பிற மொழிகள் (42.80%)

மேற்கோள்கள்

  1. Namsai Town Population Census 2011
  2. "C-16 Population by Mother Tongue". Retrieved December 20, 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya