நாய் சேகர்
நாய் சேகர் ( Naai Sekar ) என்பது 2021ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான அறிவியல் புனைகதை நகைச்சுவைத் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.[1] ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். இப்படத்தில் சதீஸ், பவித்ரா லட்சுமி (அறிமுகம்)[2][3], ஜார்ஜ் மரியன், சங்கர் கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, சிறீமன் உள்ளிட்ட துணை நடிகர்களுடன் நடித்துள்ளனர். ஒரு லாப்ரடர் ரெட்ரீவர் நாயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது.[4] படம் நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையைச் சுற்றி வருகிறது. ஒலிப்பதிவில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த ஒரு பாடலுடன் மூன்று பாடல்கள் இடம்பெற்றன.[5] இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[6][7] தலைப்பு சர்ச்சைலைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்கும் படத் தலைப்பை 'நாய் சேகர்' என்று திட்டமிட்டனர். 2006இல் வெளியான தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'நாய் சேகர்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[8] ஆனால் தலைப்பு ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. பல விவாதங்களுக்குப் பிறகு, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் படத்திற்கு 'நாய் சேகர்' என்றே தலைப்பிட்டு வெளியிட்டது.[9] எனவே வடிவேலுவின் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தலைப்பை நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என மாற்றம் செய்தனர்.[10][11] வெளியீடுபடத்தின் முன்னோட்டம் 1 சனவரி 2022 அன்று வெளியானது.[12] படத்தை தைப்பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சனவரி 13, 2022 அன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.[13] [14] திரையரங்குகளுக்குப் பிந்தைய தொலைக்காட்சி செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை முறையே சன் தொலைக்காட்சி மற்றும் நெற்ஃபிளிக்சு வாங்கியுள்ளது. நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia