நாவண்ணன்
நாவண்ணன் (மருசலீன் சூசைநாயகம், மார்ச் 15, 1947 - ஏப்ரல் 15, 2006) ஓர் இலங்கைத் தமிழ் கவிஞர், ஓவியர், சிற்பவல்லுனர், நாடக நெறியாள்கையாளர் ஆவார்.[1] போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஓவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டவர். நாட்டுப்பற்றாளர். இவர் தனது கலைப்படைப்புகள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டி விட்டவர். சிங்கள அரசு தமிழீழத்திலே நிகழ்த்திய கொடுமைகளையும், கொடூரங்களையும் அதனதன் தன்மைகளோடு காலவரிசைப்படி பதிவு செய்தவர். போராட்ட வாழ்வில் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தவர். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதியநுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்கு ஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தவர். எழுத்துலகம்
புலிகளின் குரல் வானொலியில்புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடர் நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் வழங்கினார். ஏற்கெனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளையும் சேர்த்துத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக் குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தினார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை பல விடயங்களை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார். குடும்ப விபரம்இவருக்கு ஒரு மகன் ஐந்து மகள்கள். இவரது மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) போராட்டத்தில் இணைந்து மே 16, 1997 அன்று வவுனியா நெடுங்கேணியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் களமொன்றில் வீரச்சாவடைந்தார். விருதுகள்இவரது விடுதலைப் பணியைக் பெருமைப்படுத்தும் முகமாக 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசியவிருது இவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் வழங்கப்பெற்றது. தங்கப்பதக்கம்புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக 1998 இலும், கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இன்னொரு தடவையுமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் இரு தங்கப்பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.[2] பரிசுகள்லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயமிடம் இருந்து பரிசு பெற்றார்.[3][4] இவர் எழுதிய ஈழப்போராட்டப் பாடல்களில் சில
இவற்றுள் சில. இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்
எழுதி முடிக்கப்பட்ட வெளிவராத நூல்கள்
எழுதும் முயற்சியில் இருந்தது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia