நிகண்டுநிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் முற்காலத்தில் உரிச்சொற்பனுவல் என்ற பெயரால் அழைக்கப்பட்டன, ஆயினும் நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது[1]. WORDS MEANING: சொல்விளக்கம்நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும். நிகண்டு என்பது தமிழ்ச்சொல். வரலாறுஇக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே சொற்களுக்கு பொருள் எடுத்துக்கூறும் மரபும் நூற்களும் தமிழில் நெடுங்காலம் உண்டு. இவ்வாறு சொற்களுக்குப் பொருள் கூறும் நூலே நிகண்டு எனப்படுகிறது. நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்:
நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன. பண்டைய காலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. இவை பாடல்களாக உள்ளன. பாடல்களில் சொற்கள் பொருள் பொருள்நோக்கில் பாகுபடுத்தப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எ.கா: தேவர்-பெயர், மக்கள்-பெயர், இயற்கைப்பொருட்பெயர், செயற்கைப்பொருட்பெயர், செயல் பற்றிய பெயர்கள், பண்பு பற்றிய பெயர்கள் என அவை சொற்களைப் பாகுபடுத்திக் கொண்டுள்ளன. பாடல்களின் அடிகள் பொதுவாக எதுகைத்தொடையாக அமைவது வழக்கம். எனவே சொற்களின் வரிசையும் இரண்டாம் எழுத்து அடுக்கு எதுகை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளன. நிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன. காலவரிசைப்படி நிகண்டுகள் பட்டியல்நிகண்டுகளின் தொகுப்புமுறைநிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதற்குப் பின்னர் தோன்றிய நிகண்டுகள் சொற்களை அடுக்கும்போது முதலெழுத்தை அடுத்து நிற்கும் எதுகை எழுத்து அடிப்படையைக் கையாளுகின்றன. முதலெழுத்து அடுக்குமுறை ஏட்டைப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்ள ஏத்ததாக அமையும். எதுகை எழுத்தடுக்கு முறைமை நூற்பாக்களை மனனம் செய்து மனத்தில் பதிய வைத்துக்கொள்ள ஏதுவாக அமையும். [5] இவற்றையும் பார்க்கஉசாத்துணைகள்
மேற்கோள்கள்
தொகைப்பெயர் உதாரணம்
|
Portal di Ensiklopedia Dunia