நிகழ்காலத்திற்கு முன்நிகழ் காலத்திற்கு முன் (Before Present (BP) என்பதை தற்போதைய ஆண்டுகளுக்கு முன் அல்லது தற்போதைக்கு முந்தைய காலம் அல்லது தற்காலத்திற்கு முந்தைய ஆண்டுகள் என்றும் அழைக்கப்படும். இது நடைமுறையில் தொல்லியல், புவியியல் மற்றும் பிற அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு நேர அளவாகும்.[1] மேலும் இது அணு ஆயுத சோதனைகள், செயற்கையாக வளிமண்டலத்தில் உள்ள கார்பன் ஐசோடோப்புகளின் விகிதத்தை மாற்றுவதற்கு முந்தைய காலத்தை குறிக்க அறிவியல் அறிஞர்கள் இதனை பயன்படுத்தினர். [2][3] பயன்பாடுநிகழ் காலத்திற்கு முன் என்ற அளவுகோல் சில நேரங்களில் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு அல்லாத புவி அடுக்குப் படுகையியல் மூலம் நிறுவப்பட்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.[4][5] இந்த பயன்பாடு வான் டெர் ப்ளிச்ட் & ஹாக்,[6] பரிந்துரைத்ததில் இருந்து வேறுபடுகிறது. அதைத் தொடர்ந்து குவாட்டர்னரி சயின்ஸ் விமர்சனங்கள்[7][8] இரண்டும் வெளியீடுகள் "a" ("ஆண்டுக்கு", இலத்தீன் மொழிக்கான அலகைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரியது. சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த காலகட்டங்களுக்கான அளவீடு செய்யப்படாத தேதிகளுக்கான சொற்களஞ்சியமாக நிகழ் காலத்திற்கு முன், கிமு மற்றும் கிபி என்ற சிறிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.[6] கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உள்ள பனி மற்றும் காலநிலை மையம் கிபி 2000க்கு முன்பு என்பதற்கு "b2k" என்ற குறியீட்டை முன்மொழிந்துள்ளது. இது கிரீன்லாந்து நாட்டின் ஐஸ் கோர் குரோனாலஜி 2005 (GICC05) கால அளவை அடிப்படையாகக் கொண்டது.[7] அலகு மாற்றம்கிரிகோரியன் நாட்காட்டியின் 1 சனவரி 1950 நாளை மையமாகக் கொண்டு நிகழ் காலத்திற்கு முன் சகாப்தம் கணக்கிடப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia