நிக்கொலா சார்கோசி
நிக்கொலா சார்கோசி (Nicolas Sarkozy, (IPA: [nikɔla saʁkɔzi] — ⓘ(முழுப்பெயர்:நிக்கொலா பால் ஸ்டெஃப்னெ சார்கோசி தெ நாகி-போக்சா) பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் (23-வது) முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார். மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் தலைவராக விளங்கினார். ஜாக் சிராக் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும் பின்னர் 2004 -2005 ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும் 2005-2007 காலத்தில் மீண்டும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1983 முதல்2002 வரை பிரான்சின் மிகுந்த செல்வம் கொழிக்கும் நகர்ப்புறமான நியுலி-சுர்-சீன் (Neuilly-sur-Seine) மேயராகவும் பணியாற்றியுள்ளார்.முந்தைய ராலி ஃபார் ரிப்ப்ளிக் கட்சி ஆட்சி புரிந்த பான்சுவா மித்தரோந்த் (François Mitterrand) அதிபராட்சியில் வரவுசெலவு அமைச்சராகவும் இருந்துள்ளார். பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட சார்கோசி விரும்பினார்.[1][2][3] வேலை ஒழுங்கை மீட்கவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.[1] ஐக்கிய இராச்சியத்துடனான (entente cordiale)உறவையும் [4] ஐக்கிய அமெரிக்காவுடனான உறவையும்[5] வலுப்படுத்த உறுதி பூண்டிருந்தார் பாரிசின் எலிசீ அரண்மனையில் 2 பிப்ரவரி 2008 அன்று கார்லா புரூனியுடன் காதல் திருமணம் புரிந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia