நிதியியல்
தனிநபர்களும் வணிக அமைப்புகளும் பணத்தை வங்கியில் வைப்பு செய்வதை நிதியியல் அடிப்படையாய் கொள்கிறது. வங்கி அப்பணத்தை தனிநபர்களுக்கோ அல்லது பெருநிறுவனங்களுக்கோ நுகர்வு அல்லது முதலீட்டுக்கென கடனாய் வழங்குகிறது. அக்கடன்களுக்கு வட்டி வசூலிக்கிறது. கடன்கள் பெருகிய முறையில் மறுவிற்பனைக்குரிய வகையில் வடிவம் கொடுக்கப்படுபவையாக ஆகியிருக்கின்றன. அதாவது ஒரு முதலீட்டாளர் ஒரு வங்கியிடம் இருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கடனைப் பெறுகிறார். கடன் பத்திரங்கள் என்பவை நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டாளர்களுக்கு நேரடியாய் விற்கப்படுகிற கடனாகும். அந்த கடனுறுதியை வைத்திருக்கும் முதலீட்டாளர் தொடர்ந்து வட்டி பெற்று வரலாம் அல்லது அந்த கடன் பத்திரத்தை ஒரு இரண்டாம் நிலை சந்தையில் விற்பனை செய்யலாம். கடன் வழங்குவதன் மூலம் நிதியாதாரத்திற்கான முக்கிய வழிவகையாளர்களாக வங்கிகள் உள்ளன என்றாலும் தனியார் பங்கு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள், கூட்டு சாகச நிதிகள் (ஹெட்ஜ் ஃபன்ட்ஸ்), மற்றும் பிற அமைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. முதலீடுகள் என்று அறியப்படும் நிதியியல் சொத்துகள், நிதி அபாய மேலாண்மையில் எச்சரிக்கையான கவனம் செலுத்துவன் மூலம் நிதி மேலாண்மை செய்யப்படுகின்றன. பரிவர்த்தனை மையங்களில் சொத்துகளின் பல வடிவங்களும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பொது பரிவர்த்தனை நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் பங்குகள் போன்ற கடன்களும் இதில் அடங்கும்.[நம்பகமற்றது ] உயர் நிலையில் இருக்கும் கடனளிக்கும் அமைப்புகளாக மத்திய வங்கிகள் செயல்படுகின்றன. இவை பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அது வசூலிக்கப்படும் வட்டி விகிதங்களை பாதிக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கையில், வட்டி விகிதங்கள் குறைகின்றன.[3] நிதித் துறையின் முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் துறைகள்செலவை விட வருவாய் அதிகமாகக் கொண்டிருக்கும் ஒரு ஸ்தாபகம் உபரி வருவாயை கடனாக அளிக்கலாம் அல்லது முதலீடு செய்யலாம். இன்னொரு பக்கத்தில், தனது செலவைக் காட்டிலும் வருவாய் குறைந்திருக்கும் ஒரு ஸ்தாபகம் தனது செலவினங்களைக் குறைப்பதற்கு, அல்லது வருவாயை அதிகரிப்பதற்கு அவசியமான மூலதனத்தை கடன் பெறுவதன் மூலமோ அல்லது பங்குகளை விற்பதன் மூலமோ திரட்டிக் கொள்ள முடியும். கடன் கொடுப்பவர் கடன் வாங்குபவரைக் கண்டறியலாம்; வங்கி போன்றதொரு நிதி இடைத்தரகு அமைப்பை அணுகலாம்; அல்லது பங்கு பத்திர சந்தையில் பத்திரங்கள் அல்லது பங்குகளை வாங்கலாம். கடன் கொடுப்பவர் வட்டி பெறுகிறார். அதனைக் காட்டிலும் அதிகமான தொகையை வட்டியாக கடன் வாங்கியவர் செலுத்துகிறார். வித்தியாசப்படும் பணம் நிதி இடைத்தரகு அமைப்புக்கு செல்கிறது. நிறைய எண்ணிக்கையிலான கடன் கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்களின் நடவடிக்கைகளை ஒரு வங்கி கூட்டாய் கொண்டிருக்கிறது. கடன் கொடுப்பவர்களிடம் இருந்து வைப்புத்தொகைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு வங்கி, அதன் மீது வட்டி வழங்குகிறது. அதன் பின் அந்த வங்கி இந்த வைப்புத்தொகைகளை கடன் வாங்குபவர்களுக்கு கடனாய் வழங்குகிறது. பல்வேறு அளவுகளில் இருக்கும் பல்தரப்பட்ட கடன் கொடுப்பவர் வாங்குவோரின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க வங்கி உதவுகிறது. இதன் மூலம் வங்கிகள் வெளியில் பணப் பாய்வை சீர்படுத்தும் அமைப்புகளாக செயல்படுகின்றன. நிறுவன நிதியியலுக்கு ஒரு குறிப்பிட்ட உதாரணமாக ஒரு நிறுவனம் தனது பங்குகளை முதலீட்டு வங்கிகள் போன்ற ஸ்தாபன முதலீட்டாளர்களுக்கு விற்பதைக் குறிப்பிடலாம். பொதுவாக அவர்கள் அதனை பொதுமக்களிடம் விற்கிறார்கள். அந்த பங்குகள் அதனை யார் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த நிறுவனத்தில் பகுதி உரிமைத்துவத்தை வழங்குகிறது. XYZ நிறுவனத்தில் இருந்து நீங்கள் ஒரு பங்கினை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு வெளியில் (அதாவது முதலீட்டாளர்களிடம்) 100 பங்குகள் இருக்கிறதென்றால், நீங்கள் இப்போது நிறுவனத்தின் 1/100 உரிமையாளர். ஆம், பங்குரிமைக்கு பதிலாக நிறுவனம் பணம் பெற்றுக் கொள்கிறது. அதனை அது தனது வர்த்தக விரிவாக்கத்திற்கு பயன்படுத்துகிறது; இந்த செயல்முறை "பங்கு நிதியாக்கம்" என்று அழைக்கப்படுகிறது. பங்கு நிதியாக்கத்துடன் கடன் பத்திரங்களின் விற்பனையும் (அல்லது வேறு எந்த வகையான கடன் நிதியாக்கமும்) சேர்ந்து நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. நிதியியல் தனிநபர்களால் (தனிநபர் நிதியியல்), அரசாங்கங்களால் (பொது நிதியியல்), வணிக நிறுவனங்களால் (பெருநிறுவன நிதியியல்) பயன்படுத்தப்படுவதோடு பள்ளிகள் மற்றும் வருவாய் சாராத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலமும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றின் இலக்குகளும், அந்த ஸ்தாபக அமைப்பைக் கருத்தில் கொண்டு பொருத்தமான நிதி சாதனங்கள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சாதிக்கப்படுகின்றன. நிதியியல் வணிக மேலாண்மையின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். முறையான நிதி திட்டமிடல் இல்லாவிட்டால் ஒரு புதிய நிறுவனம் வெற்றி பெறும் சாத்தியம் குறைவு. தனிநபரானாலும் ஒரு அமைப்பானாலும், பணத்தை (புழக்க சொத்து) நிர்வகிப்பது என்பது பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு அத்தியாவசியமானதாகும். தனிநபர் நிதியியல்தனிநபர் நிதியியல் பின்வரும் கேள்விகளில் இருந்து எழுப்பப்படுகிறது:
தனிநபர் நிதி முடிவுகள், கல்விக்கு செலவளிப்பது, நில முதலீடு மற்றும் மகிழுந்துகள் போன்ற நீண்ட கால பயன்பாட்டுப் பொருட்களுக்கு நிதியாதாரம், சுகாதார காப்பீடு மற்றும் சொத்து காப்பீடு போன்ற காப்பீடுகளை வாங்குவது, ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்வது மற்றும் சேமிப்பது ஆகியவை அடங்கியதாய் இருக்கும். வங்கிக் கடனுக்கு அல்லது பிற கடன்பாடுகளுக்கு பணம் செலுத்துவதையும் தனிநபர் நிதியியல் முடிவுகள் அடக்கியிருக்கலாம். பெருநிறுவன நிதியியல்நிர்வாக அல்லது பெருநிறுவன நிதியியல் என்பது ஒரு பெருநிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் பணியாகும். சிறு வணிகத்தில், இது சிறு மற்றும் குறு நிறுவன நிதியியல் என்று குறிப்பிடப்படுகிறது. நீண்ட கால நிதிகள் உரிமையாளர் பங்குகள் மற்றும் நீண்டகால கடன் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன. இவற்றுக்கிடையிலான சமநிலை தான் நிறுவனத்தின் மூலதனக் கட்டமைப்பை உருவாக்குகிறது. குறைந்த கால நிதியாதாரம் அல்லது செயல்பாட்டு மூலதனம் பெரும்பாலும் வங்கிகள் கடன் மூலம் வழங்கப்படுகின்றன. நிதி சம்பந்தமான மற்றொரு வணிக முடிவு முதலீடு அல்லது நிதிய மேலாண்மை குறித்ததாகும். ஒரு முதலீடு என்பது ஒரு சொத்தினை அதன் மதிப்பு அப்படியே இருக்கும் அல்லது அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையில் கையகப்படுத்துவது ஆகும். முதலீட்டு மேலாண்மையில், – ஒரு துறையைத் தெரிவு செய்யும் போது, – ஒருவர் என்ன , எவ்வளவு மற்றும் எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதனைச் செய்ய, ஒரு நிறுவனம் செய்ய வேண்டியவை:
நிதி மேலாண்மை கணக்கியல் செயல்பாட்டின் பிரதி ஆகும். ஆயினும், நிதி கணக்கியல் என்பது நிதி வரலாற்று தகவல்களை தெரிவிப்பது குறித்து தான் அதிக கவலை கொள்கிறது. நிதி முடிவு என்பது நிறுவனத்தின் வருங்காலத்தை நோக்கி செலுத்தப்படுகிறது. மூலதனம்நிதியியல் அர்த்தத்தில், மூலதனம் என்பது பொருட்கள் உற்பத்தி செய்ய அல்லது சேவை வழங்குவதற்கு தேவையான நிதியாதாரத்தை வணிகத்திற்கு அளிக்கும் பணமாகும். நிதிநிலை அறிக்கை ஏன் உருவாக்க வேண்டும்நிதிநிலை அறிக்கை என்பது வணிகத்தின் திட்டத்தை ஆவணப்படுத்தும் ஒரு ஆவணமாகும். வணிகத்தின் நோக்கம், அமைத்த இலக்குகள், நிதி முடிவுகள், விற்பனை இலக்கு, அதற்காகும் செலவு, வளர்ச்சி, திட்டமிட்ட விற்பனையை சாதிக்க அவசியப்படும் முதலீடு, மற்றும் முதலீட்டுக்கு அவசியமான நிதி ஆதாரம் ஆகிய விவரங்களை இது அடக்கியிருக்கும். அத்துடன் நிதிநிலை அறிக்கை நீண்ட காலத்திற்கானதாக அல்லது குறுகிய காலத்திற்கானதாக இருக்கலாம். நீண்ட காலத்திற்கான நிதிநிலை அறிக்கைகள் 5-10௦ ஆண்டுகள் வரை கால விரிவு கொண்டிருக்கும். இவை நிறுவனத்திற்கு ஒரு தொலைநோக்கு பார்வையை அளிக்கும்; குறுகிய கால நிதிநிலை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட வருடத்தில் கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டை வரைவதற்கு உருவாக்கப்படும் நிதிநிலை அறிக்கை ஆகும். மூலதன நிதிநிலை அறிக்கைஆலோசிக்கப்படும் நிலையான சொத்து அவசியங்கள் குறித்தும் செலவினங்கள் எவ்வாறு நிதியாதாரம் பெறும் என்பது குறித்தும் இது அக்கறையுறுகிறது. மூலதன நிதிநிலை அறிக்கைகள் பெரும்பாலும் வருடந்தோறும் சரிசெய்யப்படுகின்றன. அத்துடன் இவை ஒரு நீண்ட கால மூலதன மேம்பாட்டுத் திட்டத்தின் பாகமாக இருக்க வேண்டும். ரொக்க நிதிநிலை அறிக்கைஒரு வணிகத்தின் செயல்பாட்டு மூலதன அவசியங்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு, எல்லா சமயங்களிலும் குறுகிய கால செலவினங்களை சமாளிப்பதற்கு போதுமான நிதி இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். ரொக்க நிதிநிலை அறிக்கை என்பது அடிப்படையாக ரொக்கத்தின் அனைத்து எதிர்பார்ப்பு ஆதாரங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த ஒரு விரிவான திட்டமாகும். ரொக்க நிதிநிலை அறிக்கையில் பின்வரும் ஆறு முக்கிய பிரிவுகள் உள்ளன:
நடப்பு சொத்துகளின் நிர்வாகம்கடன் கொள்கைகடன் வாடிக்கையாளருக்கு பொருட்களையும் சேவைகளையும் இப்போது வாங்கிக் கொண்டு பின்னொரு தேதியில் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. கடன் வர்த்தகத்தின் அனுகூலங்கள்
கடன் வர்த்தகத்தின் குறைபாடுகள்
கடன் வடிவங்கள்
கடன் நிபந்தனைகளை பாதிக்கும் காரணிகள்
கடன் வசூல்தவணை கடந்த நிலுவைக் கணக்குகள்
திறம்பட்ட கடன் கட்டுப்பாடு
கடன் தகுதிநிலை மீதான தகவல் ஆதாரங்கள்
கடன் பிரிவின் கடமைகள்
தடித்த எழுத்துக்கள்'சாய்ந்த எழுத்துக்கள்'சாய்ந்த எழுத்துக்கள்'சாய்ந்த எடிலிருந்து பாதுகாக்கவும் கண்காணிக்கவும் செய்கிறது.
இது கையிருப்புகளை உரிய நேரத்தில், உரிய விலையில் மற்றும் உரிய அளவுகளில் கொள்முதல் செய்வதைக் குறிப்பிடுகிறது. கையிருப்புசேகரத்திற்கு பல அனுகூலங்கள் உள்ளன. பின்வருவன அவற்றின் சில உதாரணங்கள்:
கையிருப்புசேகரத்தில் சில பாதகங்கள் உள்ளன. பின்வருவன அவற்றின் சில உதாரணங்கள்:
இது ஒரு வருடத்தில் எத்தனை முறைகள் கையிருப்பின் சராசரி அளவு விற்றுத் தீர்கிறது என்பதைக் குறிக்கிறது.
ரொக்கம்ரொக்கத்தை பராமரிப்பதற்கான காரணங்கள்
போதுமான ரொக்கத்தின் அனுகூலங்கள்
நிலையான சொத்துகளின் மேலாண்மைதேய்மானம்தேய்மானத் தொகை என்பது ஒரு சொத்தின் கொள்முதல் காலத்தில், அதன் பயனுள்ள ஆயுட்கால சமயத்தில் அந்த சொத்துக்கு ஆகும் தேய்மான செலவை கணக்கீடு செய்வதாகும். பொருந்தும் கோட்பாட்டை செயல்படுத்த இது வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. காப்பீடுகாப்பீடு என்பது ஒரு தரப்புக்கு ஏற்படும் இழப்பினை இன்னொரு தரப்பு இழப்பீடு மூலம் ஈடு செய்வதாகும்.
பகிர்ந்த சேவைகள்ஒரு ஸ்தாபனத்திற்குள்ளாக நிதி வசதிகளை பகிர்ந்த சேவைகளாக குவிப்பதையும் ஒருங்குபடுத்துவதையும் நோக்கிய ஒரு நடவடிக்கை இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏராளமான தனித்தனியான நிதியியல் துறைகளைக் கொண்டிருக்கும் ஒரு ஸ்தாபனம் ஒரே வகை வேலைகளை பல்வேறு இடங்களில் இருந்து மேற்கொள்வதற்குப் பதிலாக மையப்பட்ட வடிவத்தை உருவாக்கலாம். அரசு நிதியியல்நாடு, மாநிலம், மாநகரம் அல்லது நகர நிதியியல் பொது நிதியியல் என அழைக்கப்படுகிறது. இது பின்வரும் அம்சங்களில் அக்கறை கொள்கிறது:
நிதியியல் பொருளாதாரம்நிதியியல் பொருளாதாரம் என்பது, விலைகள், வட்டி விகிதங்கள் மற்றும் பங்குகளின் விலைகள் போன்ற நிதியியல் மாறிகளுக்கு இடையிலான இடையுறவுகளை கற்கும் பொருளாதார பிரிவாகும். இது உண்மையான பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வேறுபட்டதாகும். நிதியியல் பொருளாதாரத்தில், தூய நிதியியலுக்கு மாறாய், உண்மையான பொருளாதார மாறிகள் நிதியியல் மாறிகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மீது தான் கவனம் குவிக்கப்படுகிறது. இக்கல்வி கையாளும் அம்சங்கள்:
நிதியியல் கணிதம்நிதியியல் கணிதம் என்பது நிதியியல் சந்தைகள் தொடர்பான செயல்பாட்டு கணிதத்தின் முக்கிய பிரிவாகும். நிதியியல் கணிதம் என்பது கணிதத்தின் கருவிகளை, முக்கியமாக புள்ளியியலின் கருவிகளைக் கொண்டு நிதித் தரவுகளை கற்கும் பிரிவாகும். இத்தகைய தரவுகள் பத்திரங்கள்-பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் போன்றவற்றின் நகர்வுகள் மற்றும் அவற்றின் உறவுகளாய் இருக்கலாம். இன்னொரு பெரிய துணைப்பிரிவு காப்பீடு கணிதமாகும். பரிசோதனை நிதியியல்பரிசோதனைமுறையாக கவனிப்பதற்கு அவசியமான பல்வேறுபட்ட சந்தை அமைப்புகள் மற்றும் சூழல்களை ஸ்தாபிக்க பரிசோதனை நிதியியல் நோக்கம் கொண்டுள்ளது. அத்துடன் முகவர்களின் நடத்தை, அதனால் விளையும் வர்த்தக பாய்வுகளின் பண்புகள், தகவல் விரவல் மற்றும் திரட்டல், விலை அமைப்பு வகைமுறைகள், மற்றும் பண வருவாய் செயல்முறைகள் ஆகியவற்றை விஞ்ஞானக் கண் கொண்டு ஆராய அவசியமான உருப்பெருக்கியை இது வழங்குகிறது. எந்த அளவுக்கு நடப்பு நிதியியல் பொருளாதார சித்தாந்தம் பொருத்தமான கணிப்புகளை மேற்கொள்கிறது என்பதை பரிசோதனை நிதியியல் ஆய்வாளர்கள் ஆராய முடியும். வர்த்தக செயற்கைதூண்டல் முறை மேற்கொள்வதன் மூலமோ, அல்லது செயற்கையான போட்டிச் சந்தை போன்ற அமைப்புகளை ஸ்தாபித்து மக்களின் நடத்தையை படிப்பதன் மூலமாகவோ இந்த ஆராய்ச்சியை அவர்கள் தொடரலாம். நடத்தை நிதியியல்முதலீட்டாளர்கள் அல்லது மேலாளர்களின் உளவியல் எவ்வாறு நிதியியல் முடிவுகளையும் சந்தைகளையும் பாதிக்கிறது என்பதை நடத்தை நிதியியல் ஆராய்கிறது. நிதியியலின் மையமாக ஆகும் வகையில் கடந்த சில தசாப்தங்களில் நடத்தை நிதியியல் வளர்ச்சி கண்டுள்ளது. நடத்தை நிதியியல் பின்வருவன போன்ற பாடங்களை உள்ளடக்கியிருக்கும்:
நடத்தை நிதியியலில் அளவுரீதியான நடத்தை நிதியியல் (குவான்டிடேடிவ் பிஹேவியரல் ஃபைனான்ஸ்) என்று ஒரு வகை இருக்கிறது. இது மதிப்பீட்டுடன் தொடர்புள்ள நடத்தை சாய்வுகளை புரிந்து கொள்ள கணிதரீதியான மற்றும் புள்ளிவிவரரீதியான வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இந்த முயற்சியில் குண்டுஸ் கஜினால்ப் (கணித பேராசிரியர் மற்றும் 2001-2004 காலத்தில் நடத்தை நிதியியலுக்கான சுற்றிதழின் ஆசிரியராய் இருந்தவர்) தலைமையில் வெர்மான் ஸ்மித் (பொருளாதாரத்திற்கு 2002 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்றவர்), டேவிட் போர்டர், டோன் பலேனோவிச், விளாடிமிரா இலிவா, அஹ்மத் துரான் உள்ளிட்டோர் இணைந்து ஒரு பகுதி பணியாற்றியுள்ளனர். ஜெஃப் மதுரா, ரே ஸ்டர்ம் மற்றும் மற்றவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை நிதிகளில் குறிப்பிடத்தக்க நடத்தை விளைவுகளை விளங்கப்படுத்தியுள்ளது. தொட்டுணர முடியாத சொத்து நிதியியல்தொட்டுணர முடியாத சொத்து நிதியியல் என்பது காப்புரிமைகள், வர்த்தக சின்னங்கள், நன்மதிப்பு, மரியாதை போன்ற தொட்டுணர முடியாத சொத்துகளை கையாளும் நிதிப் பிரிவு ஆகும். தொடர்புபட்ட தொழில்முறை கல்வித்தகுதிகள்நிதியியல் துறைக்கு இட்டுச் செல்லத்தக்க, தொடர்புபட்ட பல நிதியியல் தொழில்முறை கல்வித்தகுதிகள் உள்ளன:
கூடுதல் பார்வைக்குகுறிப்புதவிகள்
புற இணைப்புகள்![]() விக்கிப்பல்கலைக்கழகத்தில் நிதியியல் பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.
|
Portal di Ensiklopedia Dunia