நிதிஷ் குமார்
நிதிசு குமார் இந்தியாவின் அரசியலாளர் மற்றும் பிகார் மாநில முதலமைச்சர் ஆவார். இந்தியாவின் இருப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். ஐக்கிய சனதா தளம் என்ற அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் இவர் பதவியை விட்டு விலகினார். பிறப்பும் படிப்பும்நிதிசு குமார் பாட்னாவுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தியார்பூர் என்னும் ஊரில் பிறந்தார். அதே ஊரில் பள்ளிப் படிப்பு. பின்னர் பாட்னா அறிவியல் கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் பிகார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றார்.[1] அரசியல் பின்புலம்நிதிசு குமாரின் தந்தை கவிராஜ் ராம் லக்கன் சிங் இந்திய விடுதலைப் போராட்ட ஆவார். செயப்பிரகாசு நாராயணனின் இயக்கத்தினால் நிதிசு குமார் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கத்தில் பங்கு கொண்டு செயல்பட்டார். மேலும் சத்யேந்திர நாராயண் சின்கா, கர்ப்பூரி தாக்கூர், ராம் மனோகர் லோகியா, வி. பி. சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் தொடர்பும் நட்பும் கொண்டார். சான்றாவணம்
|
Portal di Ensiklopedia Dunia