நித்தியக் கிரியை

நித்தியக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் ஒன்றாகும். இவை சிவாலயங்களில் தினமும் நடைபெறும் கால பூசைகளை குறிப்பதாகும். நித்தியம் என்றால் எப்போதும் என்று பொருள். தொடர்ந்து நடைபெறுகின்ற கிரியைகளை நித்தியக் கிரியைகள் எனலாம்.

பரார்த்தக் கிரியைகளை நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகையாகப் பிரிக்கலாம். நித்தியக் கிரியை என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் கிரியைகளைக் குறிக்கும். உதாரணமாக நித்திய பூஜை, நித்திய அக்கினிகார்யம், நித்திய பலி, நித்திய உற்சவம் என்பனவாகும்

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் கால பூஜைகள் தினமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. சில ஆலயங்களில் ஐந்து கால பூஜைகள், சில ஆலயங்களில் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.[1]

ஆதாரங்கள்

  1. மலர், மாலை (22 ஜூன், 2018). "அண்ணாமலையார் கோவில் நடைபெறும் பஞ்ச பருவ பூஜைகள்". www.maalaimalar.com. {{cite web}}: Check date values in: |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya