நிம்பாகெரா
நிம்பாகெரா (Nimbahera) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள சித்தோர்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சித்தோர்கார் நகரத்திலிருந்து 32 கி. மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரிலிருந்து 350 km (220 mi) கி. மீ (220 மைல்) தொலைவில் தென்மேற்கிலும் அமைந்துள்ளது. நிம்பாகோரா தொடருந்து மற்றும் சாலை இரண்டின் மூலமும் இணைக்கப்பட்டுள்ளது. இது அஜ்மீரை இரத்லாமுடன் இணைக்கும் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது. நிம்பாகெராவில் மேவதி சமூகத்தின் கணிசமான மக்கள் தொகை உள்ளது. புவியியல்நிம்பாகெரா 24°37′N 74°41′E/24.62 °N 74.68 °E/ புவியியல் கூற்றில் அமைந்துள்ளது.[1] மக்கள்தொகை2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நிம்பாகோராவின் மக்கள் தொகை 78,123 ஆகும்.[2] நிம்பாகோரா மக்கள் தொகையில் 19% பேர் 6 வயதிற்குப்பட்டவர்கள். பொருளாதாரம்நிம்பாகெரா கல், கட்டுமானப் பொருளாகவும், பைஞ்சுதை உற்பத்தியில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான சுண்ணக்கல்லிற்கு பெயர் பெற்றது. இதனால் இப்பகுதி பைஞ்சுதை தொழில்களுக்கு பொருத்தமான இடமாகவும், நல்ல வேலைவாய்ப்பின் ஆதாரமாகவும் உள்ளது. நிம்பாகெராவில் ஜே. கே. பைஞ்சுதை, நிம்பாகெரா & மன்க்ரோல், வொண்டர் பைஞ்சுதை மற்றும் நுவோகோ பைஞ்சுதை ஆகிய நான்கு சிமென்ட் ஆலைகள் உள்ளன. வொண்டர் பைஞ்சுதை தனது முதல் ஆலையின் மூலம் ஆண்டுக்கு 3 மில்லியன் டன் பைஞ்சுதையினை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia