நியூட்ரினோ
நியூட்ரினோ (Neutrino) அல்லது நுண்நொதுமி என்பது அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். இவை மென்மிகள் எனப்படும் அடிப்படைத்துகள் குடும்பத்தில் அடங்குகின்றன. அணுக்கருவில் உள்ள மின்மம் அற்ற பிறிதொரு துகள் நொதுமி (நியூட்ரான்) போன்று நியூட்ரினோக்களும் மின்மத்தன்மை அற்றவை. மின்காந்தப்புல விசையால் எதிர்மின்னி அல்லது நேர்மின்னி போன்றவை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன, ஆனால் நியூட்ரினோக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதனால் மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதில்லை. செப்டம்பர் 2011இல் ஒளியைவிட நுண்நொதுமிகள் விரைவாகப் பயணம் செய்யக்கூடியவை[1][2] என்று அறியப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன. இது மெய்யானால் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டைப் பற்றிய விளக்கம் வேறுபடக்கூடும். ஒக்டோபர் 2011லும் ஆய்வு நடத்தப்பட்டு நுண்நொதுமிகளே வேகம் கூடியவை என்று மீண்டும் நிறுவப்பட்டது, எனினும் பிறிதொரு குழுவினர் நவம்பர் 2011இல் இதே ஆய்வைச் செய்து இதில் வழு உண்டு என வாதாடினர்.[3]. எனினும், 2012 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், மேற்குறிப்பிட்ட பரிசோதனையின் போது நியூட்ரினோக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு நேரங்களை அளவிடும் அணுக் கடிகாரத்துடன் தளர்வாகப் பொருத்தப்பட்ட இழை ஒளியிய வடம் ஒன்றினால் இந்த வழு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது[4]. இதே பரிசோதனை இதே ஆய்வுக்கூடத்தில் 2012 மார்ச் மாதத்தில் மீண்டும் பரிசோதிக்கப்பட்டதில் நியூட்ரினோக்களினதும் ஒளியினதும் வேகங்களில் வேறுபாடுகள் இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது[5][6][7][8]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia