நியூ இங்கிலாந்து

ஐக்கிய அமெரிக்காவில் நியூ இங்கிலாந்து பகுதி (சிவப்பில்)

நியூ இங்கிலாந்து (New England, புதிய இங்கிலாந்து) ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பாகும். இந்நிலப்பகுதியில் ஆறு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவை மேய்ன், வெர்மான்ட், நியூ ஹாம்சயர், மாசச்சூசெட்ஸ், கனெடிகட், மற்றும் றோட் தீவு ஆகும். நியூ இங்கிலாந்து எனப்படும் வலயம் அரசியல் பிரிவல்ல. இதன் தென்மேற்கே நியூயார்க் மாநிலமும் வடமேற்கே கியூபெக்கும் கிழக்கே நியூ பிரன்சுவிக்கும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வட அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் முதன்முதலில் குடியேறிய குடியேற்றங்களில் ஒன்றான நியூ இங்கிலாந்தில் 1620இல் இங்கிலாந்திலிருந்து வந்திறங்கிய சமயப் பயணர்கள் பிளைமவுத் குடியிருப்பை அமைத்தனர். பத்தாண்டுகள் கழித்து இதற்கு வடக்கே பாசுடனில் குடியேறிய தூய்மைவாத கிறித்தவர்கள் மாச்சசூசேட்சு வளைகுடா குடியிருப்பை ஏற்படுத்தினர். அடுத்த 130 ஆண்டுகளில் நியூ இங்கிலாந்தில் நான்கு பிரெஞ்சுப் போர்கள் நடந்துள்ளன. துவக்க காலங்களில் இப்பகுதியின் பொருளாதாரம் மீன்பிடித்தலை அடிப்படையாக கொண்டிருந்தது.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

அரசியல்
வரலாறு
நிலப்படங்கள்
பண்பாடு
இணைய மடலாடற் குழுக்கள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya