நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா (Neora Valley National Park) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலுள்ள டார்சிலிங் மாவட்டத்தில் இருக்கும் காலிம்பாங் உட்பிரிவில் அமைந்துள்ள ஒரு பெரிய பூங்காவாகும். 1986 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இப்பூங்கா 88 சதுர கி.மீ. பரப்பளவிற்கு விரிந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் பெரிய உயிரியல் மண்டலங்களில் ஒன்றாக இப்பூங்காவும் உள்ளது. சிவப்புப்பாண்டாக்கள் வாழும் நிலப்பகுதி என்று இப்பகுதி மிகுந்த சிறப்பைப் பெற்றுள்ளது. மற்றும், தொந்தரவுகள் ஏதுமற்ற முரட்டுத்தனமான, அணுக இயலாத இயற்கையான காட்டுப் பிரதேசத்தில் சிவப்புப் பாண்டாக்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அதிகமான பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் இந்த பூங்கா மிகமுக்கியமான ஒரு விலங்கியல் மண்டலம் என்ற சிறப்புடன் காணப்படுகிறது.[1] புவியியல்![]() நியோரா பள்ளத்தாக்கில் உள்ள காட்டில் சூரிய ஒளி கூட தரையைத் தொடுவது கடினம் என்பது போன்ற அடர்த்தியான வளர்ச்சி மிக்க காடாக உள்ளது. இப்பூங்காவின் பெரும்பகுதி இன்னும் சென்றடைய முடியாத பகுதியாகவே உள்ளது. இதனால், இயற்கை ஆர்வலர்களுக்கும் மலையேறுகின்றவர்களுக்கும் காலிம்பொங் மலைகளின் இன்னும் பெயர் தெரியாத நிலப்பரப்புகளை ஆராய்வதற்கான சவாலுடன் இப்பூங்காவிற்குள் பயணம் செய்கின்றனர். இயற்கையான காடு, அடர்ந்த மூங்கில் தோப்புகள், வண்ணமயமான உச்சிகளுடன் ரோடோடென்ரான் மரங்கள், பசுமையான பள்ளத்தாக்கு, வளைந்து நெளிந்து செல்கிற நதிகள் மற்றும் பின்னணியில் பனி மூடிய மலைகள், நீரோடைகள் என ஒர் அழகிய இயற்கைச் சூழல் இங்கு அமைந்துள்ளது. ராச்செலா தண்டா என்னும் இடத்தில், இப்பூங்கா கடல்மட்டத்திலிருந்து 10600 அடிவரை உயர்ந்துள்ளது. சிக்கிம் மற்றும் பூட்டான் எல்லையில் உள்ள இப்பகுதியே நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்காவின் உயரமான பகுதியாகும். நியோரா நதி காலிம்பொங் நகரத்திற்கான முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது. பல்லுயிர்ப் பெருக்கம்இப்பூங்காவின் பறவை வளமானது ஏ1,ஏ2,ஏ3 பிரிவுகளுடன் மேற்கு வங்கத்தின் முக்கியமான பறவைப் பகுதிகள் தளத்தின் IN-WB-06 என்ற குறியீட்டுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.[2] இயற்கை வரலாறுஉயிரிக்குழுமம்[3]இந்த வனவிலங்கு சரணாலயத்தின் உள்ளே, சூழல் மண்டலத்திற்குத் தக்கபடி முதன்மை உயிர்க்குழுமங்கள் உள்ளன:
இவையாவும் பூட்டான் – நேபாளம் - இந்திய மலைப்பாங்கான பகுதியின் 1000 மீட்டர் முதல் 3,600 மீட்டர் உயர அடிவாரத்தில் குறிப்பிடத்தக்க வகை காடுகளாக உள்ளன. தாவரயினம்[4]நியோரா பள்ளத்தாக்கு நாட்டில் எஞ்சியிருக்கும் இயற்கைக் காடுகளில் ஒன்றாகும். வெப்பமண்டல, துணை வெப்பமண்டல, துணை மிதவெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு ஒரு புகலிடமாக இப்பகுதி திகழ்கிறது. ரோடோடென்ரான், மூங்கில், ஓக், தாவரங்களை, பெரணிகள் மற்றும் சால் போன்ற இனங்களின் மலரகமாக இப்பகுதி இருக்கிறது. விலங்கினம்இந்திய சிறுத்தை, புனுகு இனங்கள், கருப்புக் கரடி, கரடி, தங்கநிறப் பூனை, காட்டுப்பன்றி, சிறுத்தைப் பூனை, காட்டாடு, மான், இமாலய பறக்கும் அணில் போன்ற பாலூட்டிகள் இப்பகுதியில் உள்ளன. இவை அனைத்தையும் விட மிகவும் கவர்ச்சியான சிவப்பு பாண்டாவும் இங்கு உள்ளது. மற்ற அருகிவரும் பாலூட்டி விலங்கினங்களுக்கு மத்தியில் சிறுத்தைப்புலிகள் எப்போதாவது காணப்படுகின்றன[5]. இன்னும் இப் பூங்காவில் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. பறவைகள்பல்வேறு பேரினத்தைச் சேர்ந்த பறவைகள்[6][7]' இப் பூங்காவில் காணப்படுகின்றன. நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா பறவைகளுக்கான சொர்க்கமாக கருதப்படுகிறது. இந்திய நாட்டிற்கேயுரிய சில தனிச்சிறப்பு மிக்க பறவைகள் குளிர்கால மாதங்களில் இங்கு காணப்படுகின்றன. 1600 மீ மற்றும் 2700 மீ இடையிலான பகுதி பசுமைமாறா காடுகள் பலபறவைகளுக்குப் புகலிடமாக உள்ளன.
நியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் உள்ள சில வனத்துறை அலுவலகங்கள்
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia