நிர்மலம்மா

நிர்மலம்மா
பிறப்பு18 சூலை 1920
மச்சிலிப்பட்டணம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு19 பெப்ரவரி 2009
(88 வயதில்)
ஐதராபாத்து, இந்தியா
பணி
  • Actress
  • producer
செயற்பாட்டுக்
காலம்
1956–2002

நிர்மலம்மா (Nirmalamma, 18 சூலை 1920 - 19 பிப்ரவரி 2009) என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். இவர் 1000 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார். பல படங்களில் பாட்டி வேடங்களில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டார். நிர்மலம்மா இரண்டு நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.[சான்று தேவை]

துவக்க கால வாழ்க்கை

இவர் பிரித்தானிய இந்தியாவின் மெதராசு மாகாணத்தில் இருந்த மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தார்.

திரைப்பட வாழ்க்கை

இவரது முதல் படம் 1943 இல் வெளியான கருட கர்வபங்கம் ஆகும்.[1] நிர்மலம்மா, தெலுங்கு திரையுலகில் என். டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, எஸ். வி. ரங்கராவ், ராஜேந்திர பிரசாத், பி. பி. ஸ்ரீனிவாஸ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா மற்றும் பல பிரபல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எஸ். வி. கிருஷ்ணா ரெட்டி, ஈ. வி. வி. சத்தியநாராயணா ஆகிய இயக்குநர்களின் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் தோன்றிய கலைஞர்களில் இவரும் ஒருவர். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது திரைப்பட வாழ்க்கையில், இவர் 700 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் 'மயூரி' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதைப் பெற்றார். 'சங்கராபரணம்', 'யமகோலா', 'பதஹரல்ல வயசு', 'சுவாதி முத்யம்', 'மாவி சிகுரு', 'சுப சங்கல்பம்' சின்னோடு பெத்தோடு, படரெல்லா வயசு, கனகமஹாலட்சுமி ரிக்கார்டிங் டான்ஸ் ட்ரூப், கேங் லீடர், மாயலோடு, எகிரே பவுரமா, ரெண்டில்லா பூஜாரி, தேவதா ( ஷோபன் பாபுவின் படம் ), சின்னராயுடு, தளபதி, அலிபாபா அர்தானூன தொங்கலு, சீதாராம காரி அப்பாயி, மாமகாரு, ஆ ஒக்கடி அதக்கு, கார்தவ்யம், சாலக்கி மொகுடு மற்றும் சடஸ்தாபு பெல்லம் போன்ற படங்களில் இவரது பாத்திரங்கள் மறக்க முடியாதவை.

இவர் நிர்மலா ஆர்ட்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, ரேலங்கி நரசிம்ம ராவ் இயக்கிய ராஜேந்திர பிரசாத் நடித்த சாலக்கி மொகுடு சதஸ்தபு பெல்லம் என்ற படத்தை தயாரித்தார்.

பிரபல இயக்குனர் எஸ். வி. கிருஷ்ணா ரெட்டி இயக்கிய பிரேமகு ஸ்வாகதம் தான் இவர் கடைசியாக நடித்த படமாகும். தெலுங்கு திரையுலகின் வைரவிழா கொண்டாட்டமே இவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியாகும். அங்கு பிரபலங்கள் தெலுங்கு சினிமாவின் பல தலைமுறை நடிகர்களுக்கு அம்மா/பாட்டியாக நடித்ததற்காக இவரை நினைவு கூர்ந்தனர்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவருக்கு சொந்த குழந்தைகள் இல்லை. ஆனால் கவிதா என்ற மகளை தத்தெடுத்தார். [2]

விருதுகள்

நந்தி விருதுகள் [3]

  • 1984 சிறந்த துணை நடிகை - மயூரி
  • 1999 சிறந்த குணச்சித்திர நடிகை - சீதாராம ராஜு

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

இது அவரது படங்களின் பகுதி பட்டியல்.

தமிழ் படங்கள்

மேற்கோள்கள்

  1. "Cine 'baamma' Nirmalamma is dead". The New Indian Express. Retrieved 10 July 2023.
  2. "The Hindu : Andhra Pradesh / Hyderabad News : Nirmalamma passes away". The Hindu. Archived from the original on 26 February 2009. Retrieved 12 January 2022.
  3. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. Retrieved 21 August 2020.(in Telugu)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya