நிலஉறைநில உறை (land cover) என்பது புவியின் மேற்பரப்பில் உள்ள இயற்கை பொருட்களைக் குறிப்பதாகும். நிலஉறை என்பது புல்வெளிகள், மரங்கள், பயன்படாத நிலம், நீர் போன்றவற்றை உள்ளடக்கியது. சூழ்நிலையியலாளர் பிரடரிக் எட்வர்டு கிளமெண்ட் புவிஉறை என்ற பதத்தை தாவர வளர்ச்சியின் காரணமாகப் பயன்படுத்தினார்.[1]:52 இதை நிலமேலாண்மைத் துறை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது..[2] நிலஉறை பற்றிய தகவலைப் பெற இரண்டு முதன்மை வழிமுறைகள் உள்ளன. அவைகள் நில அளவு ஆய்வு மற்றும் தொலைதூர உணர்வு படங்களைப் பகுத்தாய்வு செய்தல் போன்றவையாகும். நிலஉறை அல்லது நிலஉள்ளடக்கு என்பது நிலப்பயன்பாட்டிலிருந்து வேறுபட்டது. நிலப்பயன்பாடு என்பதை “மக்கள் சமூக பொருளாதார செயல்பாடுகளுக்கு எவ்வாறு நிலத்தைப் பயன்படுத்துகின்றனர்“ என்று விவரிக்கலாம். நகர பயன்பாடு மற்றும் விவசாய நிலப்பயன்பாடு என நிலப்பயன்பாட்டை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருசில இடங்களில் மாற்றுநிலப்பயன்பாடு மற்றும் பல்வகை நிலப்பயன்பாடு காணப்படுகிறது. நிலப்பயன்பாடு/ நிலஉறை என்ற இணை குறித்தும் அதன் தொடர்பு குறித்தும் ஃபிஷ்சர் என்பவர் 2005-ம் ஆண்டு நிலப்பயன்பாடு மற்றும் நிலஉறை –முரண்படுதல் (அ) நிரப்பி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia