நிலக்கோட்டை

நிலக்கோட்டை
நிலக்கோட்டை
அமைவிடம்: நிலக்கோட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°13′32″N 77°48′58″E / 10.2256134°N 77.8160072°E / 10.2256134; 77.8160072
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் நிலக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி நிலக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். தேன்மொழி (அதிமுக)

மக்கள் தொகை 22,197 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://www.townpanchayat.in/nilakottai

நிலக்கோட்டை (ஆங்கிலம்:Nilakkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகும். நிலக்கோட்டை நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,197 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 9.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும் (தனி), திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°10′N 77°52′E / 10.17°N 77.87°E / 10.17; 77.87 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 320 மீட்டர் (1049 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,611 வீடுகளும், 22,197 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 86% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 912 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,913 மற்றும் 1,636 ஆகவுள்ளனர்.[6]

தொழில்

இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளர். பூ பறித்தல், பூ தொடுத்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் மல்லிகை மற்றும் இதர மலர்களுக்கு என்று தனியாக வணிக வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது .

கோவில்கள்

நிலக்கோட்டையில் பாளையக்கார மன்னர் கூளப்ப நாயக்கரால் கட்டப்பட்ட மிக பழமையான ஸ்ரீநரசிங்க பெருமாள் கோவில் உள்ளது . நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் புகழ் பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் கோவில் உள்ளது.

வரலாறு

வரலாற்று ஆய்வின் படி நிலக்கோட்டையை உருவாக்கியவர் கூளப்ப நாயக்கர். பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன் உருவாக்கினார். பின்னர் 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர் நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. நிலக்கோட்டைபேரூராட்சியின் இணையதளம்
  5. "Nilakkottai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Town Nilakottai Panchayat Population Census 2011
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya