நிலைமாற்றி![]() ![]() நிலைமாற்றி (வேறுபெயர்கள்: இணைப்பு மாற்றி, தொடர்மாற்றி, ஆளி மற்றும் சுவிட்ச் ஆங்கிலத்தில்: switch) மின்பொறியியலில் மின்சுற்றினை இணைக்கவோ இணைப்பறுக்கவோ அல்லது (மின்னோட்டத்தினை மறிக்கவோ அல்லது திசைமாற்றவோ பயன்படும் ஒரு இயந்திரக் கருவி ஆகும்.[1][2] இணைக்கப்பட்ட நிலையிலுள்ள ஒரு மின்சுற்றை இணைப்பறுக்கவும், இணைப்புறுத்தக்க நிலையில் இருக்கும் ஒரு மின்சுற்றை இணைக்கவும் நிலைமாற்றி பயன்படுகின்றது. ஒரு மின்சுற்றினை ஒரு நிலையிலிருந்து வேறு ஒரு நிலைக்கு இக்கருவி மாற்றுவதால் நிலைமாற்றி எனப் பெயரிடப்பட்டிருக்கலாம். . வீடுகளில் நாம் மின் விளக்குகளை எரியவோ அல்லது அணைக்கவோ கைகளினால் அழுத்துவது நிலைமாற்றிகளைத்தான். மேலும் நிலைமாற்றிகள் நகரும் பொருட்களினால்(எ.கா கதவினால் இயக்கப்படும் சுவிட்ச்) இயக்கப்படலாம், வெப்பம், அழுத்தம் அல்லது ஒட்ட உணரிகளாலும் இயக்கப்படலாம். உணாத்தி மின்சாரம் மூலம் இயக்கப்படும் நிலைமாற்றி ஆகும். நிலைமாற்றி பரவலான மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டத்தினை கையாளும் வகையில் செய்யப்படுகின்றன; மிக பெரிய சுவிட்சுகள் மின்நிலையங்களிலுள்ள 'உயர் மின்னழுத்த சுற்றுகளை' தனிமைப்படுத்த பயன்படுத்தப்படலாம். நிலைமாற்றி ஒரு அடிப்படை தர்க்க படலை ஆகும். தொடர்பு சொல்லியல்மின்னணுக்களில், சுவிட்சுகள் தங்கள் தொடர்புகளுக்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு ஜோடி தொடர்புகள் "மூடிய" நிலையிலிருக்கும்பொழுது மின்னோட்டம் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு செல்கின்றது. எப்பொழுது காற்றிடை வெளிகளினால் தொடர்புகள் பிரிக்கப்பட்டு "மின்காப்பான்களினால் பிரிக்கப்படும்பொழுது அவை, "திறந்த" நிலையிலிருக்கிறது மற்றும் அவைகளுக்கிடையே இயல்பான மின்னழுத்ததின்பொழுது எவ்வித மின்னோட்டமும் இருக்காது. நிலைமாற்றிகளின் தொடர்பு வேறுபாடுகள் பற்றி விவரிக்க முனை("POLE"), திசை("THROW") போன்ற சொற்களும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. முனைகளின் எண்ணிக்கை என்பது மின்சாரத்தினால் பிரிக்கப்பட்ட சுவிட்ச்களின் எண்ணிக்கை ஆகும், இது ஒற்றை இயக்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. எ.கா ஒரு "2-முனை"(2-pole) சுஃவிட்ச் பிரிக்கப்பட்ட இரண்டு இணையான தொடர்புகளை கொண்டிருக்கிறது, இது ஒரே பொறிமுறையினால் இணைக்கவோ, பிரிக்கவோ செய்யப்படுகிறது. திசைகளின்(THROW) எண்ணிக்கை என்பது தனித்த மின்கம்பி பாதைகளின் எண்ணிக்கை ஆகும், திறந்த நிலையை(OPEN) தவிர்த்து ஒவ்வொரு முனைக்கும் தனித்த பாதையே தேர்ந்தெடுக்கமுடியும். ஒர் ஒற்றை-திசை நிலைமாற்றி திறந்த அல்லது மூடிய நிலையிலுள்ள ஒரு ஜோடி தொடர்புகளை கொண்டிருக்கும். ஒரு இரட்டை-திசை நிலைமாற்றியின் ஒருபுறமுள்ள ஒர் தொடர்பு மற்றொருபுறமுள்ள மற்ற இரண்டு தொடர்புகளுள் ஒன்றை இணைக்கும், ஒர் மும்மடி-திசை நிலைமாற்றி ஒருபுறமுள்ள தொடர்பானது மற்றொருபுறமுள்ள மூன்று தொடர்புகளுள் ஒன்றை இணைக்கும்.[3] நிலைமாற்றியின் தொடர்புகள் இயக்கப்படாதவரை ஒரே நிலையிலிருக்கும், அழுத்து பொத்தான்களின் தொடர்பு நிலைமாற்றியின் இயக்கத்தால் மூடியநிலைக்கு மாறும் வரை வழக்கமாக திறந்தநிலையிலிருக்கும் (Normally open; சுருக்கீடு "n.o." or "no"), அல்லது வழக்கமாக மூடியநிலையில் இருக்கும்(Normally closed; சுருக்கீடு "n.c." or "nc") மேலும் நிலைமாற்றியின் இயக்கத்தால் திறந்தநிலைக்கு மாறும். இரண்டு வகையான தொடர்புகளை கொண்டிருக்கும் நிலைமாற்றி முறைமாற்றும் நிலைமாற்றி எனப்படும்.
அதிக எண்ணிக்கையில் முனைகளையோ அல்லது திசைகளையோ கொண்டிருக்கும் சுவிட்ச்கள் "S" அல்லது "D"க்கு பதிலாக எண்களால் (எ.கா 3PST, 4PST போன்றவை) அல்லது சில சமயங்களில் ஆங்கில எழுத்துகளால் "T" ("triple") (அ) "Q" ("quadruple") விவரிக்கப்படும். இந்தக் கட்டுரை முழுவதும் SPST, SPDT போன்ற சொற்கள் தெளிவின்மையைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்டிருக்கும். சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia