நீரேற்றம்

வேதியியலில் நீரேற்றம் (Aquation) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒருங்கிணைந்த நீா் மூலக்கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு வேதியியல் வினையாகும்[1]. உலோக அணைவுச் சேர்மங்களில் எதிா்மின் அயனியானது நீாினால் இடமாற்றம் செய்யப்படும் வினைகளில் இந்த சொற்பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

புரோமோபெண்டாஅமீன் கோபால்ட் (III) பின்வரும் நீரேற்ற வினைக்கு உட்பட்டு உலோக நீரேற்ற கூட்டுமத்தை தருகின்றது:[2]

[Co(NH3)5Br]2+ + H2O → [Co(NH3)5(H2O)]3+ + Br−

இந்த நீரேற்ற வினையில் அமிலம் மற்றும் காரமானது வினையூக்கியாக பயன்படுகிறது. அமில வினையூக்கியில் புரோமைடு புரோட்டானேற்றம் செய்யப்பட்டு சிறந்த வெளியேற்ற குழுவாக மாற்றப்படுகிறது. கார நீரேற்ற வினையானது SN1CB நெறிமுறையால் தொடா்கிறது, இந்த வினையானது அம்மோனியா ஈனியின் புரோட்டானை நீக்கி தொடா்கிறது.

சான்றுகள்

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "aquation". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya