நீர்முள்ளி
நீர்முள்ளி அல்லது நிதகம் அல்லது இக்குரம் அல்லது காகண்டம் (Hygrophila auriculata, (முந்தையப்பெயர்) : Hygrophila schulli) மருத்துவ மூலிகையாகப் பயன்படும் செடியாகும். முழுச் செடியும் மருத்துவ குணமுடையதாகும். பெயர்இத்தாவரமானது இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்டது. இது நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர் பெற்றது. மேலும் இந்தத் தாவரத்திலிருக்கும் முட்களைக் குறிக்கும் வகையில் ‘முண்டகம்’ எனவும் அழைக்கப்படுகிறது.[2] விளக்கம்இது வயல்கள், குளம், குட்டைகளில் நிமிர்ந்து வளரக்கூடியது. இதன் இலைகள் ஈட்டி வடிவமுடையவை. இதன் கணுக்களில் நீண்ட முட்கள் காணப்படும். இதன் பூ ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடையது. இதன் விதைகள் பழுப்பு நிறத்தவை. மருத்துவ குணங்கள்நீர்முள்ளிக் குடிநீர் உட்கொள்ள சிறுநீர் எரிவு, சிறுநீர்க் கட்டு, கால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும். மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia