நீ. பி. அருளானந்தம்
இலங்கையின் இலக்கிய இயங்கு தளத்தில் மிகப் பிரபலமான எழுத்தாளராக அறியப்பட்டவரானவர் நீ. பி. அருளானந்தம் என்பவராவார். இவர் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார் குளம் என்னும் இடத்தினைப் பிறப்பிடமாக கொண்டவர். நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையாவினதும் சுவாம்பிள்ளை லூர்தம்மா என்பவர்களின் மகனாகப் பிறந்தவர். இவர் நாவல், சிறுகதை, கவிதை என பல்துறை சார்ந்த இலக்கிய தளத்திலும் பிரவேசித்ததாகி அவை சம்பந்தமான இருபத்து நான்கு நூல்கள் வரையாக இற்றைவரை வெளியிட்டிருக்கிறார். நீ. பி. அருளானந்தத்தின் தாயாரான லூர்தம்மாவினது தாயார் பெயர்- றோசமுத்து. இவரின் தந்தையாரின் பெயர்- சூசைப்பிள்ளை. வவுனியாவில் உள்ள அதன் நகரத்தோடு ஒன்றிய சூசைப்பிள்ளையார்குளம் என்கின்ற இடமானது சூசைப்பிள்ளை எனும் அவருடைய நாமத்தை கொண்டதாகவே சூசைப்பிள்ளையார்குளம் என வழங்கி வருவதாக இருக்கின்றது. நீ.பி.அருளானந்தம் பெற்றோனிலா தம்பிமுத்து தம்பதிகளது பிள்ளைகள் : சுரேஸ் ஜோக்கிம், ரமேஸ் பிலிப், மேரி சுமித்திரா, சத்தியசீலன், திருமகள். இவர்களிலே இரண்டாவது மகன் ரமேஸ் பிலிப் என்பவர் காலமாகிவிட்டார். நீ.பி.அருளானந்தத்தின் வம்சாவழி தலைமுறை பற்றியும் அவரது துணைவியாரின் வம்சாவழி பற்றியும் “மானியம் பதியார் சந்ததி முறை எனும் சந்ததி நூலானது விபரம் அளிப்பதாக உள்ளது. யாழ்ப்பாண சரித்திரத்தை கூறுகின்ற “யாழ்ப்பாண வைபவ கௌமுதிஎனும் அந்நூலின் ஆசிரியரான க.வேலுப்பிள்ளை யாழ்ப்பாண வைபவ கௌமுதி எனும் அவரது இந்த புத்தகத்தை முடிக்க ஆதாரமாயெடுத்தாண்ட நூல்களில் முக்கியமானவைகளில் “மானியம் பதியார் சந்ததி முறை” எனும் இந்நூலினையும் அவரது அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். மானியம் பதியார் சந்ததி முறை எனும் நூலில் நீ. பி. அருளானந்தத்தின் பரம்பரை பற்றிய குறிப்பு நீக்கிலாப்பிள்ளை பிலிப்பையா அருளானந்தம்: (வாரித்தம்பி ஆராட்சியர் - கதிர்காமர் - வாரித்தம்பி முருகர் - தில்லையம்பலம் விதான் - மரியாம்பிள்ளை - நீக்கிலாப்பிள்ளை - பிலிப்பையா) பெற்றோனிலா தம்பிமுத்து (துணைவியாரது பரம்பரை) (வாரித்தம்பி ஆராட்சியர் - கதிர்காமர் - வாரித்தம்பி முருகர் - தில்லையம்பலம் விதான் - சந்தியா குப்பிள்ளை - தம்பிமுத்துப்பிள்ளை - கென்றிதம்பிமுத்து - பெற்றோனிலா தம்பிமுத்து) இவரது தந்தையாரான பிலிப்பையா என்பவர் நாட்டுக்கூத்து அண்ணாவியாரும் எழுத்தாளருமானவர். இவர் கலைத்துறையினை சார்ந்தவராவார். நீ. பி. அருளானந்தத்தின் துணைவியாரான, அச்சுவேலி தென்மூலையை பிறப்பிடமாகக் கொண்ட பெற்றோனிலா தம்பி முத்து எனப்படுபவரும் இலங்கையின் மிகப் பிரபலமான புகழ் பூத்த கலைப் பாரம்பரியம் மிக்கதான குடும்பத்தினை சேர்ந்தவராகும். பெற்றோனிலா தம்பி முத்துவின் பேரனானவர் புலவர் ச.தம்பிமுத்துப் பிள்ளையாவார். யாழ்ப்பாண சரித்திர வரலாற்று நூல்களை எழுதியவரும், பன்மொழி அறிஞரும் சொற்பிறப்பியல் அகராதியை உருவாக்கியவருமான சுவாமி ஞானப்பிரகாசியாரது வளர்ப்புத் தந்தையானவர் தான் புலவர் ச.தம்பிமுத்துப் பிள்ளையாகும். தம்பிமுத்துப் பிள்ளையின் பேரனும் பெற்றோனிலா தம்பிமுத்துவின் சகோதரருமானவரே பொயற் தம்பிமுத்து எனப்படுபவர். இருபதாம் நூற்றாண்டிலே, ஆங்கில இலக்கிய கதிக்கு ஏதாவது காத்திரமான பங்களிப்புச் செய்த ஆங்கிலேயர் அல்லாதவர், மியேறி ஜேம்ஸ் துரைராசா தம்பிமுத்து எனப்படுகின்றவர். இவர் நவீன ஆங்கில இலக்கிய வரலாற்றிலே புகழாரம் சூட்டப்பட்ட ஆங்கில மொழி புலவராகும். தம்பிமுத்து குடும்பத்தினருக்கும் பிலிப்பையா குடும்பத்தினருக்கும் இரத்த உறவு முறையான சொந்தமுண்டு. இதன் பொருட்டே நீ.பி.அருளானந்தம் பெற்றோனிலாவை திருமணம் செய்தார். நீ. பி. அருளானந்தத்தின் தடையற்ற எழுத்துப் பயணத்திற்கு ஊக்குவிப்பாக திருமண வாழ்வும் அவருக்கு பெரும் பேறாகவே அமைந்ததாக இருந்தது. இவர் இதுவரை ஆறு நாவல்களை எழுதியுள்ளார் அவற்றில் மூன்று நாவல்கள் இலங்கையின் அரச சாஹித்திய விருது பெற்றவையாகும். இவரின் “கறுப்பு ஞாயிறு” என்கின்ற சிறுகதை தொகுதி நூலும் அரச சாஹித்திய விருது பெற்ற நூலாகும். இவரது கவிதைத் தொகுதி நூல், வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் சாஹித்திய விருதைப் பெற்றுள்ளது. இவர் எழுதிய சிலநூல்களானவை, அரச இலக்கிய விருதுக்கான இறுதிச் சுற்றிலே தெரிவாகி விதந்துரைக்கப்பட்டதாகி சான்றிதழ்களும் பெற்றிருக்கின்றன. அத்துடன் கொடகே சாஹித்திய விருது, இலங்கை இலக்கிய பேரவையின் விருது, எழுத்தாளர் சின்னப்ப பாரதியின் விருது, ஞானம் சஞ்சிகை வழங்கிய பரிசு, ஆகியவற்றினையும் பெற்றுள்ளார். தமிழ் நாட்டில் அன்புப்பாலம் சஞ்சிகை நடத்திய வல்லிக் கண்ணன் ஞாபகார்த்த சர்வதேச சிறுகதைப்போட்டியில் இவரது சிறுகதையான “இரத்தம் கிளர்த்தும் முள் முடி” முதற்பரிசினை பெற்றுள்ளது. (2008 இல் போட்டிக்காக உலகெங்கிலும் இருந்து அனுப்பப்பட்ட 900 கதைகளுக்குள் தெரிவான கதை இதுவாகும்). இதற்கான பரிசினை, பாலம் மாத சஞ்சிகை இதழின் சிறப்பசிரியரான ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் திரு.த.ஜெயகாந்தனே இவருக்கு அதனை வழங்கி கௌரவித்திருந்தார். நீ. பி. அருளானந்தம் இதுவரை 6 சமூக மேடை நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவைகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் இவரே நடித்தும் இருக்கிறார் அந்நாடகங்களை இவரே இயக்கியுள்ளார். பல சரித்திர வரலாற்று நாடகங்களிலும் இவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். அந்நாடகங்களையும் இவரே இயக்கியுள்ளார். இவர் கலையுலகிற்கு கலைச்சேவையை வழங்கி வருவதை கௌரவித்து, 2019 இல் அரச விருது வழங்கும் வைபவத்தில் அரசின் “கலைமாமணி” விருது வழங்கப்பட்டது. நாடகம் இலக்கியம் சார்ந்த துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக 2015 ஆம் ஆண்டு “கலாபூஷணம்” அரச விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நீ. பி. அருளானந்தம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட அளவிலாக, இலங்கையின் முக்கிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் கட்டுரை ஆக்கங்களையும் எழுதி வந்தவண்ணம் இருக்கிறார். இவர் வெளியிட்ட “துயரம் சுமப்பவர்கள்” எனும் நாவல் நூலானது உயர் பட்டப் படிப்பிற்கும் உதவியாக அமைந்துள்ளது. கலை முதுமாணி பட்டத்திற்கான பகுதித் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு உயர் பட்டப்படிப்புகள் பிடத்திற்கு துயரம் சுமப்பவர்கள் எனும் நாவல் - திருமதி.கலையரசி திருமாவளவன் (ஆசிரியை) என்பவரால் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இது குறித்த இவரது ஆய்வு சம்பந்தமான நிறைவில் பேராசிரியர்களால் பாராட்டப்பட்டு உயர் பேறான சித்தியடைந்த நிலையில் ஏ(A) தகுதியினை திருமதி.கலையரசி திருமாவளவன் பெற்றார். இந்த வித ஆய்வின் பெறுபேறாக அவருக்கு “முது கலைமாமணி” எனும் உயரிய பட்டம், உயர் பட்டப்படிப்புகள் பீடம், யாழ் பல்கலைக்களகமானது (தமிழ்த்துறை) வழங்கி கௌரவித்திருக்கிறது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 8 மாணவர்களுக்கான பாடநூலில் “ஆசிரியரின் நாணயம்” என்னும் சிறுகதையும் உள்வாங்கப்பட்டதாய் அமைந்து இருக்கிறது. நீ. பி. அருளானந்தத்தின் மூத்த மகனான சுரேஸ் ஜோக்கிம் என்பவர், பல கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்தவர். கனடாவில் வசிக்கின்ற இவர் இதுவரை 68 கின்னஸ் சாதனைகளை புரிந்து உலகிலேயே அதிகூடிய எண்ணிக்கையான கின்னஸ் சாதனையாளர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை வகிப்பவராக கணக்கிடப்பட்டவராகி கின்னஸ் சாதனை உலகின் பெருமைக்குரியவராகவும் உள்ளார். இவர் அண்மையில் புரிந்த கின்னஸ் சாதனையான உலக சமாதான ஓட்டம் (7 கண்டங்கள் அதன் 123 நகரங்கள் ) என்பது மிகப் பிரபலமானதாக உலகெங்கிலுமாக கவனிக்கப்பட்டதாகினது. கையில் சமாதான ஒளியினை ஏந்தியபடி குறிக்கப்பட்ட நகரங்களிலெல்லாம் 20 கிலோ மீட்டர்கள்வரை ஓடியதாக வலம் வந்தமை உலக சாதனை ஏடான கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதியப்பட்டதாக இருக்கிறது. (LOUIS POOTHATHAMBY (1608 - 1658) AND OTHERS FROM THESE WERE DESOENDED VARITHAMBY ARACHIYAR ETC. MENTIONED IN “MANIAMPATHIYAR SANTHATHI MURAI”. THE NOS. REFER TO SETIONS IN THAT BOOK. THE “YALPANA VAIPAVA MALAI” STATES THAT PRINCE THIDAWEE - RASINGHAM BROTHER OF PRINCESS VETAVALLI WAS GIVEN THE VILLAGE OF ATCHUVELY, WICH WAS INHERITED BY THE THAMBIMUTTUS AND THEIR KINSMEN) நீ.பி.அருளானந்தத்தின் சிறுகதைகள் பல தென்னிந்திய கலை இலக்கிய சஞ்சிகைகளான கணையாழி, தாமரை, தீராநதி, அன்புப்பாலம், இனிய நந்தவனம், ஆகியவைகளிலும் வெளிவந்ததாக இருக்கின்றன. படைப்புக்கள்:
நாடகங்கள் (சமூக மேடை நாடகங்கள் )
ஆசிரியரது நூல்களில் எழுதப்பட்டிருக்கின்ற முன்னுரைகளின் சுருக்கம்கவிதை1. வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து (2008) 2. கடந்து போகுதல் (2010) 3. மௌனமான இரவில் விழும் பழம் (2014) 4. இலைகளே என் இதயம் (2018) சிறுகதை1. மாற்றங்கள் மறுப்பதற்கில்லை - 12 சிறுகதைகள் 2. கபளீகரம் (2003) - 22 சிறுகதைகள் 3. கறுப்பு ஞாயிறு (2005) [அரசின் சாஹித்திய விருது பெற்றது - 2006] -13 சிறுகதைகள் 4. அகதி (2007) - 10 சிறுகதைகள் 5. அம்மாவுக்குத் தாலி (2008) 6. ஒரு பெண்ணென்று எழுது (2008) - 16 சிறுகதைகள் 7. வெளிச்சம் (2010) [ 2010ஆம் ஆண்டு அரச இலக்கிய விருதுக்காக கருத்திற்கொள்ளப்பட்ட சிறுகதைத் துறையிலான நூலகளில் இறுதிச்சுற்றிற்காக விதந்துரைக்கப்பட்ட இந்நூலுக்கு சானறிதழ் வழங்கபபடடது ] - 12 சிறுகதைகள் 8. சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள் (2010) 9. ஆமைக்குணம் (2011) - 23 சிறுகதைகள் 10. ஓ! அவனால் முடியும் (2011) - 12 சிறுகதைகள் 11. எதிர்மறை (2023) - 23 சிறுகதைகள் 12. CHANGES CANNOT BE DENIED (2012), SHORT STORY COLLECTION, AUTHER: N.P.ARULANANTHAM, TRANSLATOR: M.JAMES PULLE (TAMIL INTO ENGLISH) நாவல்1. வாழ்க்கையின் நிறங்கள் (2006) [2007ம் ஆண்டு அரசின் சாகித்திய விருது பெற்றது. மற்றும் வடமாகாணக்கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் சாகித்திய விருது பெற்றது.] 2. துயரம் சுமப்பவர்கள் (2009) [2010ம் ஆண்டு அரசின் சாகித்திய விருது பெற்றது. மற்றும் கொடகே தேசிய சாகித்திய விருது- இலங்கை இலக்கிய பேரவையின் விருது- எழுத்தாளர் சின்னப் பாரதியின் அறக்கட்டளை விருதும் பெற்றது.] [ஞானம் சஞ்சிகை நடத்திய நாவல் குறுநாவல் போட்டியில் 3ம் பரிசு பெற்றது] 3. பதினான்காம் நாள் சந்திரன் (2012) [2012ம் ஆண்டு அரச இலக்கிய விருதுக்காக கருத்திற் கொள்ளப்பட்ட நாவல் துறையாலான நூல்களில் இறுதிச்சுற்றிற்காக விதந்துரைக்கப்பட்ட இந்நூலுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது] 4. இந்த வனத்துக்குள் (2014) - [அரசின் சாகித்திய விருது பெற்றது 2015] 5. ஒன்றுக்குள் ஒன்று (2016) 6. யோகி (2018) 7. . புண்ணியபுரம் கவிதைவேருடன் பிடுங்கிய நாளிலிருந்து (2008) கவிதைத்தொகுதிநீண்ட கால வாசிப்பின் தேறலாய் சொல்வளம் மிக்க ஒரு சிறந்த படைப்பாளி நீ.பி.அருளானந்தம். அவருடைய கவிதைகள் அதனை நிரூபணம் செய்கின்றன. சொற்பஞ்சம் இவருக்கு இல்லை என்பது கவிதைகளில் சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைளால் புரிந்து கொள்ள முடிகிறது. விளங்காத இருண்மைக்குள் புரியாத வார்த்தைகளைக் கோர்த்துஇ பிறருக்கு மட்டுமன்றி பிறிதோர் போழ்து படித்தால் தமக்கும் விளங்கிக்கொள்ள இயலாத சோக வெளிப்பாடுகளாக இவர் கவிதைகளில் ஒன்றும் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை. இலகு மொழியில் முகம் சுழிக்கும் வார்த்தைகளின்றி அழகிய சொற்களால் ஆனவை இவரது வரிகள். அழகியலும் இவரது அவதானிப்புக்கள் அவ்வாறே கூடி நிற்கின்றன. மீண்டும் புதுப்பொலிவு புலர வேண்டும் என்பதன் ஆதங்கம்இ அவற்றை நேர்த்தியாக அவர் தன் கவிதை வரிகளில் சொல்லி இருக்கிறார். துரத்தப்பட்டும்இ தாமாகப் புலம்பெயர்ந்தும்இ துன்பத்தின் எல்லையைத் தொட்டுத் தொடர்ந்தும் அனுபவித்தும் வரும் தம்புல மக்களின் அகதி வாழ்வை தானும் அனுபவித்துத் தௌ;ளு தமிழில் சொல்லியிருப்பது எதிர்காலத்துக்கான ஆவணமாகும். - கவிஞர் னுசு.ஜின்னாஜ் ஷரிபுத்தீன் கடந்து போகுதல் (2010) - கவிதைத்தொகுதிகடந்து போகுதல் எனும் தலைப்பு ஆழமானது. மிக மிக ஆழமானது. ஒருவர் கவிஞராக இருப்பதற்கு படிம மொழி அவசியம். அருளானந்தத்தின் கவிதைகளில் படிமங்கள் எங்களை அதிர வைக்கின்றன. ஏனெனில் அவை அடிப்படையில் நமது அனுபவங்களே! இதனாலேதான் நாம் அருளானந்தத்துடன் ஒன்றி விடுகின்றோம். நாமும் அறிந்த அனுபவங்களுக்குள்ளே சென்று விடுகின்றோம். விமர்சன முறையில் பார்க்கும்பொழுது அருளானந்தத்தின் எழுத்தின் பிழிவை அவரது உருவக ஆக்கத்திலேயே காணலாம். கவிதைகள் வாக்கியங்கள் பெரிய மணி ஒன்று அடிக்கப்படும் ஓசை போன்றது. மணியின் ஓசையிலும் பார்க்க அந்த ஓசை ஏற்படுத்தும் தாக்கமே முக்கியமாகும். மணி அடித்து முடிந்ததன் பின்னர் பல நிமிடங்களுக்க அந்த அதிர்வொலி நிற்கும் நல்ல கவிதைகளும் அப்படித்தான். என்றோ நடந்து முடிந்த என்றோ அனுபவித்த சுக துக்கங்களின் அதிர்வலைகள் கவிதைகளிலே தொடர்ந்து ஒலிக்கின்றன. அருளானந்தத்தின் இக் கவிதைத் தொகுப்பில் நான் அதனையே காண்கின்றேன். - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மௌனமான இரவில் விழும் பழம் (2014) கவிதைத்தொகுதி“மௌனமான இரவில் விழும் பழம்” - தொகுதிக்கான கவிதைகளைப் படிக்க ஆரம்பித்ததும் ஒவ்வொரு கவிதையும் எனது சிந்தனையை வெவ்வேறு கோணங்களுக்கு இழுத்துச் சென்றது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். நீ.பி.யின் கவிதைகள் யாவும் அவரது நுண்ணிய அவதானிப்பு மற்றும் எண்ணங்களில் தோற்றம் பெறுவதாகத் தோன்றுகின்றது. அவற்றைத் தன்னுணர்வு மூலம் அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். எந்த ஒரு விடயத்திற்கும் யாரையும் நோகாமலும் ஆர்ப்பரிக்காமலும் அந்த விடயத்தில் அவரது உணர்வு என்ன என்பதே அவரது கவிதைகள் பேசும் மொழியாக இருக்கிறது. சலசலத்து ஓடும் ஒரு வாய்க்காலாக அல்லாமல் மிக அமைதியாக ஆனால், அதிக நீர் பாய்கின்ற ஒரு நீரோட்டத்தின் வலிமையுடன் அவரது கவிதைகள் நகர்கின்றன. இவரது நிறைந்த அனுபவமும், சமூகம் மீதும் வாழ்வின் சூழல் மீதும் இவருக்குள்ள அவதானமும் ஆச்சரியப்படுத்துகிறது. பொதுவாகக் கலைஞர்கள் கவனத்தக்குட்படுகின்ற அம்சங்களைத் தாண்டியும் இவரது பார்வையின் எல்லை விரிவானதாக அமைந்துள்ளது. அஷ்ரப் சிஹாப்தீன் ஆசிரியர் - “யாத்ரா” இலைகளே என் இதயம் (2018) கவிதைநீ.பி.அருளானந்தம் அவர்கள் நாடறிந்த ஒரு பெரிய எழுத்தாளர். புனைக்கதை, நாவல் சிறுகதை, கட்டுரைகள் எழுதிப் பல தடவை பல சாகித்திய விருதுகளைப் பெற்றுள்ளார். “இலைகளே என் இதயம்” என்ற ஆக்கத்தை தந்து அபிப்பிராயம் கூறும்படி பணித்துள்ளார். நீ.பி.அருளானந்தம் அவர்கள் ஒரு பெரிய இலக்கிய பாரம்பரியத்தைச் சேர்ந்தவராவர். இலங்கையின் முதன்மை, ஆங்கில கவிஞராக விளங்கியவரும் உலகளாவிய விதத்தில் POETRY LONDON போன்ற இலக்கிய ஏடுகள் மூலம் உலகின் சில ஆங்கில கவிஞர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவருமான கவிஞர் மியேரி ஜேம்ஸ் துரைராசா தம்பிமுத்து, அவரது தம்பியார் போலினாஸ் தம்பிமுத்து போன்றவர்களின் வாரிசு நீ.பி.அருளானந்தம் அவர்கள். அவருடையதை PERSONAL POEMS ON SUBJECTS HE WAS INTERESTES என்று ஆங்கிலத்தில் கூறலாம். கவிதைகளை வசதியை முன்னிட்டு பொதுமான கதைக்கான சமூக வெளிப்பாடுகளுக்கான PUBLIC POEMS என்றும், தனி மனிதன் ஒருவரின் சுயதிருப்திக்காக எழுதப்பட்ட PRIVATE POEMS என்றும் அழைப்பதுண்டு. இவை அவருக்குரிய ஆவணத்திரட்டு ஆகும். வருங்கால ஆய்வாளர்கள் நீ.பி.அருளானந்தம் அவர்களின் எழுத்துப் பங்களிப்பை இனங்கண்டு, அவரது இலக்கியப் பார்வை எப்படி இருந்தது என மதிப்பிட இந்த ஆவணங்கள் பெரிதும் பயன்படும். நீ.பி.அருளானந்தத்தின் பல் பரிமாணப் பங்களிப்பின் ஒரு கூறாக இந்த நூல் இருப்பதையும் நாம் கருத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். - கே.எஸ்.சிவகுமாரன் சிறுகதைமாற்றங்கள் மறுப்பதிற்கில்லை (2002)நீ.பி.அருளானந்தம் நாதாரண மனிதரின் கதையை எவ்வித பாசாங்குமின்றி சொல்ல முனையும் கலைஞராக இக்கதைகளில் தெரிகிறார். அவரது கற்பனை வானத்தில் பறக்காமல் மண்ணைத் தளமாக கொண்டு விசாலிக்கிறது. அடித்தட்டு மக்களினதும் உதிரித் தொழிலாளரினதும் வாழ்பனுபவங்களை அவரது பேனாவில் ஆசிரியர் தொட்டு எழுதியுள்ளார். தன்னெதிரே விரிந்த சம்பவங்களை அந்த உறுத்தலின் விளைவாக அவர் படைப்பாக்கி இருக்கிறார். -செ.யோகநாதன் கபளீகரம் (முதற்பதிப்பு 2003 - இரண்டாவது பதிப்பு 2011)சாதாரண மக்களின் வாழ்க்கை அவதிகளையும் துயரங்களையும் ஏமாற்றங்களையும் அருளானந்தம் அவரது கதைகளில் சித்திரித்தக் காட்டுகிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனேக கதைகள் தற்கால வாழ்க்கைச் சித்திரங்களாக அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பில் வசிக்க வந்தவர்கள் தங்கள் பழைய இருப்பிடங்கள் நாடிச் செல்லத் தவிப்பதையும் சிரமப்பட்டு சொந்தக்கிராமங்களை சேர்கிறவர்கள் அங்கே காணப்படுகிற சிதைவுகளையும் பாழ்மைகளையும் கண்டு மனம் குமைந்து உளம் கொதித்து வெம்புகிற நிலையையும் இக்கதைகளில் அவர் திறமையாக எடுத்துக் காட்டுகிறார். - வல்லிக்கண்ணன் (சென்னை) கறுப்பு ஞாயிறு (2005) சிறுகதைத் தொகுதிநல்ல சிறுகதைகள் எழுதி, கவனிப்புக்கு உரிய சிறுகதைத் தொகுதிகள் பலவற்றை வெளியிட்டிருக்கிற எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் புதிய சிறுகதைத் தொகுப்பான இந்த நூல் அவருடைய வளர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியினையும் நன்கு புலப்படுத்துகின்றன. கதைக் கலையில் அவர் பெற்றுள்ள தேர்ச்சியையும் இக்கதைகள் வெளிப்படுத்தகின்றன. நீ.பி.அருளானந்தம் இனிய நடையில் கதைகளை எழுதி இருக்கிறார். பாத்திரவர்ணனை, சூழ்நிலை விபரிப்பு, இயற்கை அழகுகளை வர்ணித்தல் முதலியவற்றை சிறப்பாக செய்திருக்கிறார். அங்கங்கே உவமைகளை எடுத்தாள்கின்ற போது, கற்பனை நயமும் புதுமை அழகும் மிளிர அவற்றை அமைந்திருக்கிறார். வாழ்க்கையின் துன்ப துயரங்களையும், மனிதர்களது இயல்புகளையும், போராட்டங்களையும், சகிப்புத்தன்மையையும் உரிய முறையில் சிறுகதைகளில் பதிவு செய்கின்ற அருளானந்தம் மனித மனம் குறித்தும், மனிதர்களது உணர்வுகள், எண்ணங்கள், சிந்தனைகள் பற்றியும் திறமையாக சித்திரித்திருக்கிறார். சூழ்நிலை விபரிப்பை தேவைக்குத்தக்கபடி, அளவாகவும் அழகாகவும் அமைத்து, அது கதை மாந்தரின் மனதில் ஏற்படுத்தும் உணர்வுச் சலனங்களைத் திறமையாக எடுத்துச் சொல்கிறார் அவர். - வல்லிக்கண்ணன் சென்னை அகதி (2007) சிறுகதைத்தொகுதிஇவரின் எழுத்துக்கள், மொழியை வலையாக மாற்றி வீசிப்பிடிக்கும் யதார்த்தத்தின் பதிவுகள். யுத்தத்தால் வாழ்வின் பெரும் பகுதியைத் தொலைத்து வாடி வதங்கி நிற்கும் மக்களின் மனக்குமுறல்கள். கற்பனைகளின் வார்ப்புக்களல்ல, மாறாக காலம் கிழித்த காலத்தின் வடுக்கள். அம் மண் இழந்து வரும் அடையாளங்களின் மீள் பதிவுகள். காலச்சக்கரத்தால் பின் நோக்கிப்போய்விட்ட எம் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், மொழிவழக்குகளை முன்னிறுத்தும் முயற்சி. மனங்களின் புகைச்சல்கள் கோணலான எண்ணங்கள், தவறுதல்கள், யுத்தத்தால் சரிந்து செல்லும் சமநிலை, கலப்பற்ற சுதந்திரம் நோக்கிய அலசல்கள், அண்மையில் கிடைத்த சாஹித்திய மண்டலப்பரிசு இவரின் எழுத்துக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமே. இவரின் கதைகளில் அலசப்படும் விடயங்கள் இன்றுள்ளவர்களால் உணரப்பட முடியாது போகலாம். ஆனால் எதிர்காலம் இதனை ஏந்தி எடுக்கும் என்பதில் ஐயமில்லை. - ஏ.எஸ்.சற்குணராசா அம்மாவுக்குத்தாலி (2008) சிறுகதைத்தொகுதிவாசகரின் செயலூக்கம் குன்றிய கலை நுகர்ச்சியை நவீன கல்விச் செயல்பாடுகள் சிதறுதலுக்கு உள்ளாக்கி வருகின்றன என்ற புலக்காட்சியை தெளிவுபடுத்திப் புனைகதை ஆக்கங்களை மேற்கொள்ளும் எழுத்தாளர் வரிசையில் திரு.நீ.பி.அருளானந்தம் அவர்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. தாமரை, கணையாழி முதலாம் சஞ்சிகைகளில் வெளிவந்த இவரது கதைகள் சமூக அதிர்வுகளுக்கும் அழகியல் வினைப்பாடுகளுக்குமிடையேயுள்ள இடைவெளிகளைச் சுருக்கி விடுகின்றன. சமூகம் தொடர்பான அகக் காட்சிகளை ஏற்படுத்தும் கலப்புச் செழுமையை ஏற்படுத்துகின்றன. சமூகத்தை மீளக் கொலிப்பிக்கும் பொழுது தமக்குரிய விரிந்த ஆக்க மலர்ச்சியைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். மத்திய தர வகுப்பினரின் “இருமை இயல்புகள்” - இவரது சிறுகதைகளிலே ஆங்காங்கு துளாவல் கொள்கின்றன. இந்தத் துளாவலுக்குரிய மொழித் தளத்தில் உராய்வின்றி நடந்து நூலாசிரியர் வருகிறார். இவரது கதையாக்கங்களின் பிறிதொரு பரிமாணம் சமகாலத்தைய வாழ்வை கதை எண்ணக்கருவுக்குள் கொண்டு வருகையில் எதிர்கொள்ளும் “மீண்டும் நடப்பியலுக்குத் திரும்பும்” நேர்விசைகளையும் எதிர்விசைகளையும் சந்தித்தலாகும். இவ்வாறான விசை மோதல்களின் இருப்பில் மானிடநேயத்தை மீள் வலியூட்டும் செயல்பாடுகளை இவர் முன்னெடுத்துள்ளார். ஒரு நீண்ட கால யாத்திரையை மேற்கொள்ளும் இந் நூலாசிரியர் தமது அனுபவங்களைச் செப்பனிட்டு வெளிப்படுத்தும் முயற்சியில் மானுட நேயத்தின் பதிவுகளே மேலோங்கியுள்ளன. - பேராசிரியர் சபா.ஜெயராசா ஒரு பெண்ணென்று எழுது (2008) - (சிறுகதைத் தொகுதி)தன்னைச்சூழ உள்ள உலகை ஆழமாக அவதானித்து, தான் காணும் சமூகப் பாத்திரங்களின் உளநிலை, அவை வாழும் சமூக, பொருளாதாரச் சூழமைவு என்பவற்றை முழுமையாகக் கருத்திற் கொண்டு, அணுவின் சூழற்சி, கடல் அலைகளின் எழுச்சி என வர்ணிக்கப்படும் சிறு கதைக்கான கருப்பொருளை பக்குவமாக உருவாக்கித் தமிழ்ப்பேசும் மக்களிடம் சமர்ப்பித்திருக்கிறார் திரு.நீ.பி.அருளானந்தம். அவருடைய எழுத்துக்களின் உள்ளடக்கம், நடை எவ்வாறு கால இட வர்த்தமானங்களுக்குப் பொருத்தமானது என்பவற்றை இனங்கண்ட இலங்கையின் சாஹித்திய மண்டல நடுவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, அவருடைய சிறுகதை நூலிற்கும் நாவலுக்கும் விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். இக் கௌரவத்திற்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர்கள் திரு.அருளானந்தம் என்பது எமது கருத்து. - பேராசிரியர், சோ.சந்திரசேகரன் வெளிச்சம் (2010) சிறுகதைத்தொகுதிஇச்சிறுகதைத் தொகுதியின் பலம் மிகப்பெரிய பலம். இது அண்மைக்காலத்தில் வடபகுதி மக்கள் உள்ளுர் போர் காரணமாகப் பட்ட துன்ப துயரங்களைச் சொல்வதாகும். நாம் பட்ட இன்னல்கள் அத்தனையும் அருளானந்தம் மிகத்துல்லியமாக எடுத்துக் கூறியுள்ளார். இச்சிறுகதைத் தொகுதியை வாசிக்கும்பொழுது அருளானந்தம் பற்றி ஏற்கனவே எனக்கிருந்த மதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கிறது. பட்ட இன்னல்களின் துயரங்களை அச்சொட்டாக விபரிக்கும் அதே வேளையில் அதை ஏற்படுத்தியவர்களின் பின் புலங்கள் பற்றிய காழ்ப்புணர்வு எதுவுமில்லாமல் எழுதியிருப்பது அவரது படைப்புத்திறனுக்கு சுட்டியாக அமைகிறது. இவ்வாறு சொல்லும்பொழுது யுத்த இன்னல்களை எடுத்துக்கூறும் முறையிலேதான் அருளானந்தத்தின் எழுத்துத்திறமை தங்கியுள்ளதென்று கூறிவிடமுடியாது. அருளானந்தத்திற்கு ஒரு அகண்ட பார்வையுண்டு. அருளானந்தம் இலங்கையின் அனுபங்கள் பலவற்றை இலக்கியச் செழுமை குன்றாது தருகின்றார். இறுதியில் இலக்கிய நிலைப்பட்ட ஒரு குறிப்பினைக் கூற வேண்டும். எத்தகைய விவாதத்திற்கும் இடமில்லாத வகையில் நாவலே இக்காலத்துக்குரிய பிரதிநிதித்துவ இலக்கிய வகை என்பது உண்மை என்றாலும் கூட தனிமனித இன்னல்களை முனைப்புருத்தி அவை சுட்டும் மனிதாயத நிலைகளைக் காட்டும் வளம் சிறுகதைக்கு இன்னும் உண்டு என்பதற்கு இவரது கதைகள் சில நல்ல உதாரணம் ஆகும். சுருங்கச் சொன்னால் ஏற்கனவே வந்த ‘துயரம் சுமப்பவர்கள்’ நாவலும் இச்சிறுகதைத் தொகுதியும் நீ.பி.அருளானந்தத்ததை இலங்கையின் சமகால தமிழ் எழுத்தாளர்களுள் முதன்மை இடம் பெறக்கூடியவர்களிலே சேர்ந்து விடுகிறது. - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள் (2010) சிறுகதைத்தொகுதிஅருளானந்தத்தின் எழுத்து முழுத்தமிழகத்தினதும் சொத்து நீ.பி.அருளானந்தத்தின் புனைகதைகளுக்கான பொருள் தெரிவே அவரது ஆக்க ஆளுமைக்கான திறவு கோலாக அமைகிறது எனக் கருதுகிறேன். அருளானந்தத்தின் எழுத்துக்கள் அவரை இலங்கையினுள்ளே மாத்திரமன்றி தமிழகத்து நிலையிலும் கணிக்கப்பட வேண்டியவொருவராக ஆக்குகின்றன எனலாம். தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றைய நாட்டுத் தமிழிலக்கியப் படைப்புக்களில் இப்போது காட்டும் சிரத்தையிலும் பார்க்க மேலதிகச் சிரத்தை காட்ட வேண்டும் என்பது என் கருத்தாகும். அப்பொழுதுதான் அருளானந்தம் போன்றவர்களின் திறமை தமிழகம் முழுவதினதும் சொத்தாகும். - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ஆமைக்குணம் (2011) சிறுகதைத்தொகுதிவெறும் பொழுது போக்கிற்கான கதைகளை நீ.பி.அருளானந்தம் எழுதுவதில்லை. வாழ்க்கை யதார்த்தங்களை படிக்கிறவர் மனதில் பதியும்படி சுட்டிக்காட்டி, அவருள் சிந்தனை ஒளியை தூண்டும் விதத்தில் அவர் கதைகள் எழுதுகிறார். அதே சமயம் காலத்தினால் ஏற்படுகின்ற பலவித மாற்றங்களையும் மறைந்துபோன (அல்லது மறைந்து கொண்டிருக்கின்ற) மரபுகளையும், புதிய போக்குகளையும், சிதைவுகளையும், சீரழிவுகளையும் கூட, வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அவர் கதைகள் படைக்கிறார். இந்த விதமான அகண்ட நோக்குடனும் ஆழ்ந்த கூரிய பார்வையுடனும் மனிதர்களின் இயல்புகளையும் வாழ்க்கை யதார்த்தங்களையம் சீர்தூக்கி, சிந்தனை ஒளியும் கற்பனை வர்ணமும் ஏற்றி, நல்ல கதைகளை உருவாக்கி இருக்கிறார் நீ.பி.அருளானந்தம். ஆமைக்குணம் எனும் இந்நூல் அவருடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு என்று எண்ணுகிறேன். இதே ரீதியில் அவர் மேலும் பல சிறந்த கதைகளை எழுதி இன்னும் பல தொகுப்புகளை வெளியிடுவதற்குக் காலம் துணை புரியட்டும் வாழ்த்துக்கள். - - வல்லிக்கண்ணன் சென்னை இயல்பான-சரளமான மொழிநடை, கதையொன்றை வாசிப்பது போலல்லாமல் கதையொன்றை ஒருவர் கூறக் கேட்பது போன்ற ஓர் இலகுவான கதையோட்டம் பேச்சுவழக்குத் தமிழே கையாளப்படுவது இச்சிறுகதைகளுக்கு இத்தன்மைகளை வழங்குகிறது எனலாம். நவீன சிறுகதை உத்தி எனும் பெயரில் வேண்டத்தகாத உத்திகளையெல்லாம் வில்லங்கமாகப் புகுத்தி விரும்பத்தகாத பரிசோதனைகளிலெல்லாம் இறங்கி வாசகர்களை சிரமப்படுத்தாமல் சிக்கலற்ற கதையோட்டம் இத்தொகுப்பிலுள்ள இடத்திலிருந்து சிறுகதைகளின் இன்னுமொரு சிறப்பு. முடிகின்ற வாசகனைச் சிந்திக்க வைப்பதே நல்லதொரு சிறுகதை. இப்பண்பு இத்தொதியிலுள்ள எல்லாச் சிறுகதைகளிலுமே காணப்படுகின்றது. - த.கோபாலகிருஸ்ணன் (செங்கதிரொன்) ஓ! அவனால் முடியும் (2011) சிறுகதைத்தொகுதிநமது அண்மைக்கால புனைகதை இலக்கிய வரலாற்றில் அருளானந்தத்தை விட்டுவிட்டு எழுதுவதென்பது மிக மிக சிரமமாகவே இருக்கும். அருளானந்தத்தின் வலு அவர் சித்திரிப்பதற்கு தெரிந்தெடுத்துக் கொள்ளும் விடயங்களான வாழ்க்கை மட்டமும் மனிதர்களும் ஆகும். நமது சமூகப்பரப்பிலே கண்டதுண்டு கேட்டதில்லையாகவுள்ள மனிதர்களை இவர் தனது புனைகதைகளின் பிரச்சினை மையங்களாக கொள்கிறாரென்று கூறலாம். ஏற்கனவே பல விடயங்களிலே எடுத்துக் கூறிவந்துள்ள கருத்தொன்றினை இங்கும் வலியுறுத்த விரும்புகின்றேன். அருளானந்தம் தனது எடுத்துரைப்புக்கு பயன்படுத்தும் மொழிநடை எத்தகையதென்பது நுணுகி ஆராய வேண்டும்போல தோன்றுகின்றது. புனை கதையின் மொழிநடையென்பது குறித்த புனைகதை ஆசிரியர் தன்னைச்சூழ உள்ளவற்றைத் தான் கற்பனை செய்பவற்றைத் தனக்குள்ளே எவ்வாறு கண்டு கொள்கிறாரென்பதாகும். இவ்விடயத்தில் அருளானந்தத்தின் எடுத்துரைப்புத்திறன் நிச்சயமாக அவதானிக்கப்பட வேண்டியதாகும். ‘வருணனை’ - என மரபு வழியாகச் சொல்லப்படும் விஸ்தாரங்களுக்கு இடம் கொடுக்காது பொருளும் அது பற்றிய புரிவும் தனக்குள் இயைந்து நிற்கும் முறையினை இவரது எழுத்துக்கள் காட்டுகின்றன. - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எதிர்மறை (2023) சிறுகதைத்தொகுதிசிறுகதை என்பது ஒன்றை விபரிப்பது, ஒரு புள்ளியில் பேருருவம் காட்டுவது, கருத்துக்களமும் தொடக்கமும் முடிவும் தலைப்பும் மொழிநடையும் சிறந்திருந்தால் கால வெள்ளத்தில் சிறுகதையின் அடிப்படைப் பண்புகள் நிலைபெறும். எங்கே தொடங்கி எப்படி முடிக்க வேண்டும், எவற்றைக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும், மையப்பொருளைப் புலப்படுத்தும் வகையில் தலைப்பினைச் சுட்ட வேண்டும் என்பவை எல்லாவற்றிலுமாக நூலாசிரியர் மிகவும் நுட்பமுள்ள கவனத்தைச் செலுத்தியுள்ளார். மூத்த எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் எழுதிய எதிர்மறை என்கிற சிறுகதைத் தொகுப்பின் கதைகள் யாவும் எம் மக்கள் பட்ட வேதனைகளின் வெளிப்பாடுகள் என்றுதான் குறிப்பிடவேண்டும். வாழ்க்கையில் பல விதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து துன்பத்தில் வாழும் மக்களைக் கொண்டது எமது சமூகம். இச் சமூகத்தின் பிரச்சினைகளை கருப்பொருளாகக் கொள்ளாமல் யாரும் எழுதிடலே முடியாது என்பதை நன்குணர்ந்து தனது “எதிர்மறை” சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் நீ.பி.அருளானந்தம். - ந.பார்த்திபன் (ஓய்வுநிலை உப பீடாதிபதி தேசிய கல்வியியற்கல்லூரி வவுனியா) நாவல்வாழ்க்கையின் நிறங்கள் (2006) நாவல்ஒவ்வொருவருடைய வாழ்க்கையும், காலத்துக்கும் சூழ்நிலைக்குமேற்ற வெளிச்சம் பரப்புகிற நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது. மனிதரின் இயல்புகளும் பொதுவான போக்குகளும் வாழ்க்கையை நிறம் இழக்கச் செய்கின்றன. என்றாலும் மனிதர்கள் நம்பிக்கையோடு ஒளிமயமான எதிர்காலம் வரும் என்ற மன உறுதியோடு வாழ்ந்து செயல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை இந்த “வாழ்க்கையின் நிறங்கள்” என்ற நாவல் நன்றாக உணர்த்துகிறது. பலரக மனிதர்களின் உணர்ச்சி நாடகங்களைத் திறமையாக எழுத்தில் வர்ணித்திருக்கும் அருளானந்தம் மனித வாழ்க்கையில் விசேஷ நிறங்கள் பூசுகிற கோயில் விழாக்கள் (அந்தோனியார் கோயில் விழா நிகழ்ச்சிகள், கந்தசாமி கோயில் சூரசம்காரத்திருவிழா) கிராமங்களில் காவல் தெய்வ வழிபாடு (வைரவர் வழிபாடு, வண்டில் றேஸ் முதலியவற்றையும் உரியமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.) எழுத்தாளர் நீ.பி.அருளானந்தத்தின் எழுத்தாற்றலை சிறப்பாக எடுத்துக் காட்டுகிற இந்த நாவல் மனித வாழ்க்கையின் விதம் விதமா போக்குளையும், மனிதர்களின் உணர்ச்சிகரமான செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் யதார்;தமாகவும் அழகாகவும் பிரதிபலிக்கும் படைப்பாக விளங்குகிறது. - வல்லிக்கண்ணன் துயரம் சுமப்பவர்கள் (2009) - நாவல்அண்மைக்காலத்தில் நான் புனைகதை இலக்கிய வாசிப்பினைப் பெரிதும் மேற்கொள்வதில்லை. இருப்பினும் அருளானந்தத்தின் இந்த நாவலை வாசிக்கும் பொழுது ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி பற்றி சிந்திக்காதிருக்க முடியவில்லை. அருளானந்தம் தான் கணிக்கப்பட வேண்டிய தமிழ் நாவலாசிரியர்களுக்குள் ஒருவரென்பதை துயரம் சுமப்பவர்கள் மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். உண்மையில் பாத்திரங்கள் அருளானந்தத்தையும் மீறி உயிரோடும் சதையோடும் எம் முன்னே உலாவுகின்றன. அவர் இந்த நாவலுடன் இலங்கையின் முக்கிய தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவராகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார். என்னைப் பொறுத்த வரையில் இந்த நாவலின் பிரதான விடயம் பொருள், அல்லது பிரச்சனை மையம், அது மனிதர்கள் மனிதர்களாக வாழுவதற்கு மேற்கொள்ளும் போராட்டமேயாகும். இந்தப் போராட்டங்களில் வெற்றிகளிலும், தோல்வியிலும் நாங்கள் வாழ்க்கையின் யதார்த்தங்களை பார்க்கிறோம். இந்த நாவலின் பாத்திரங்கள் உங்கள் மனதில் சில நாட்களுக்காவது நின்று நிலைக்கப்பபோகின்றன. உங்களை சிந்திக்கவைக்கப் போகின்றன. - பேராசிரியர், கார்த்திகேசு சிவத்தம்பி பதினான்காம் நாள் சந்திரன் (2012) நாவல்ஊசி நூலெடுத்துக் கோர்த்தாற்போல இந் நாவலின் கதையோட்டம், உடைப்பெடுக்காவண்ணம் நகர்த்தியிருக்கும் பாங்கு நூலாசிரியரின் அனுபவ முதிர்ச்சியை வெளிக்காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட கதைப்புலத்தின் கனதி குறையாமல், எங்கும் பிசிறு ஏற்படாது நகர்த்தியிருப்பதை உணர முடிகிறது. வன்னிப் பிரதேசத்து மக்களின் கிராமியப்பேச்சு வழக்கு, நடையுடை பாவனை என்று அனைத்துமே இந்நாவலில் அப்பட்டமாக வெளிப்படுவது கதைக்கு உரமாகிறது. அம்மக்களின் மத்தியில் காத்தவராயன் கூத்து பிரசித்தி பெற்றிருப்பது உலகறிந்தது. அக்கூத்தினை அடியொற்றி இந்நாவல் நகர்வதும் குறிப்பிடத்தக்கது. காத்தவராயன் கூத்து வன்னி மக்களின் வாழ்வில் இரண்டறக்கலந்தது என்ற செய்தியை முன்னிலைப்படுத்தி, எம்மினத்தின் அறுபடாத வாழ்வியல் கோலத்தையும், அதில் உயிர்ப்புடன் துலங்கும் இக்கூத்தின் உத்தம திறத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் இந்நாவல் 14ம் நாள் பௌர்ணமியைத் தொட்டு விடும் தூரத்தில் ஓர் சமுதாயத்தின் அறுபடாத சத்தியமாக விளங்குகின்றது. - க.பிரபாகரன் இது ஒரு கிராமத்துக்கதை கிராமத்து மக்களின் வாழ்வியலை நன்கு பிரதிபலிக்கும் நல்ல படப்பிடிப்பு! இந்நாவலின் கதைக்களமும் கதாபாத்திரங்களும் உயிர்த்துடிப்புடன் அமைவதைப் பார்க்கலாம். கதைக்களம் எப்படி உயிர்த்துடிப்புடன் அமையும்? அதுதான் இவரின் திறமை! சம்பவம் நடக்கும் இடத்துக்கு வாசகர்களை அப்படியே கொண்டு போய்விடுவார். ஏளியநடை, சிக்கலில்லாத வர்ணனை இவையே இந்நாவலாசிரியரது சிறப்பம்சமாகும். விளங்காத நடையில் எழுதித் தம் மேதாவிலாசத்தைக் காட்டும் எழுத்தாளர் மத்தியில் நீ.பி.அருளானந்தம், தெளிவான நடையில் எழுதி, ஈழத்து இலக்கிய உலகில் வெற்றி பெற்றுள்ளார். - இரா.அன்புமணி இந்த வனத்துக்குள் (2014) நாவல்விளிம்பு நிலை இலக்கு மாந்தருடன் இணைந்து வாழ்ந்து அனுபவங்களைத் திரட்டி அவற்றை நாவல் வெளிக்குள் கொண்டு வரும் முயற்சியை முன்னெடுத்து வருபவர்களுள் தனித்துவமானவர் நண்பர் நீ.பி.அருளானந்தம். “இந்த வனத்துக்குள்” - என்ற ஆக்கத்தை வாசிக்கும்பொழுது நீ.பி.அருளானந்தம் அவர்கள் ஒரு நிலையில் இனக்குழும வரையியல் ஆய்வாளர்களாகவும் இன்னொரு நிலையில் அந்த ஆதாரங்களை அடியொற்றிய புனைவுகளோடு மொழிப்பின்னலை மேற்கொள்பவராகவும் இருத்தல் குறிப்பிடத்தக்கது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள விளிம்பு நிலையினரை நாவல் வீச்சுக்குள் கொண்டுவரும் வேளை கதையும்;, நடப்பு நிலைவரங்களும் என்ற இருதளங்களையும் பராமரிக்கக்கூடிய எடுத்தியம்பலுடன் நாவல் கட்டமைப்புச் செய்பட்டுள்ளது. - பேராசிரியர் சபா.ஜெயராசா வரலாற்று ரீதியாக இலங்கை நாட்டின் பழங்குடி மக்கள் வேடுவர்களே என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட இன்றைய இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்வியல் சூழலில் உரிய கவனத்துக்கு உள்ளாகாமலும் புறக்கணிப்புக்கு உள்ளாகியும் விளிம்பு நிலைக்குக் கீழும் வனமும் வனம் சார்ந்த சூழலிலும் வாழ்கின்ற வனக்குறவர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் வண்ணம் இந்நாவல் பின்னப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நீர்ப்பாசன பிரிவின் கீழ்வரும் சாகாமம், றூ}லஸ்குளம், கஞ்சிக்குடிச்ச ஆறு போன்ற பாரிய நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய பிரதேசப்பிரிவொன்றுக்கு பொறுப்பான தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் (ரி.எ) பணியாற்றிய மட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத்தின் தென்கோடிக் கிராமமான பொத்துவிலில் சிறுவயது முதலே வளர்ந்து கல்விகற்று வாழ்ந்தவன் என்ற வகையிலும் இந்நாவலின் ஒரு பகுதிக்கதை நிகழும் களங்கள் என் காலடி பட்டவை மட்டுமல்ல கதைமாந்தர்களும் எனக்கு மிகவும் பரிச்சயப்பட்டவர்களே. இந்த நாவலின் கதாபாத்திரங்களான வனக்குறவர்களுக்கிடையே நடைபெறும் நீண்ட உரையாடலைக் கூட தெலுங்கு மொழி ஓசை கலந்த அவர்களின் பேச்சு வழக்கிலேயே நீ.பி.அருளானந்தம் அச்சொட்டாக பதிவு செய்திருப்பது என்னை ஆச்சரியப்பட வைத்தது. இம்மக்கள் கூட்டத்தினரின் வாழ்வியலின் அத்தனை அம்சங்களும் அச்சொட்டாக இந்நாவலில் பதிவாகி இருப்பது கண்டு உண்மையிலேயே நான் பிரமித்துப் போனேன். - செங்கதிரோன்.த.கோபாலகிருஸ்ணன் ஆசிரியர், செங்கதிர் ஒன்றுக்குள் ஒன்று (2016) நாவல்பெண் விடுதலை பெண் சமத்துவம் பெண்ணியம் என்றெல்லாம் பெரும் பெரும் வார்த்தைகளை உபயோகித்து பெண்ணின் சுதந்திர வெளிக்கான போராட்டங்கள் முனைப்புற்றிருக்கும் இக்காலகட்டத்திலே சாதாரண பனை வடலிகளும் பனங்காட்டுப் பற்றைகளும் நிறைந்த கிராமப்புறச் சூழலில் பிறந்து வளர்ந்த றெஜினா என்ற இளம் பெண்ணின் அர்ப்பணிப்பும் தியாக சிந்தனையும் எத்தனை உன்னதமானவை என்பதை வெகு லாவகமாக உணர்த்தும் ஆசிரியரது எழுத்துக்குப் பின்னால் நிச்சயம் ஒரு அதீதமான ஆற்றல் உந்தி நிற்பதை வாசகர் உணரவே செய்வர். ஆசிரியர் எமது சமுதாயத்தில் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள், பிறந்த நாள் தொட்டு சொந்தமான வாழ்வே கிடைக்காத பெண்களின் அவலங்கள், எனப் பெண்கள் தொடர்பான ஏராளம் பிரச்சனைகளை நினைத்துப் பார்ப்பதற்கேற்ற விழிப்புணர்வுக்கான கதவுகளை ஒன்றுக்குள் ஒன்று என்ற இந்நாவல் மூலம் திறந்து வைத்துள்ளாரென்றே கூறவேண்டும். அற்புதமான எழுதப்பெற்ற இந்நாவல் இலக்கியத்திற்கூடாக எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் ஆற்றியுள்ள தமிழ்ப்பணியினைத் தமிழ் கூறும் நல்லுலகம் இன்முகத்துடன் வரவேற்று ஆதரிக்கும் என்பதில் எட்டுணையும் சந்தேகமே இல்லை. - திருமதி. புத்மா சோமகாந்தன் யோகி (2018) - நாவல்சமயத்தத்துவ வாதிகளால் சைவ நாற்பாதங்கள் என்று உரைக்கப்படும், சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் இறைவனை அடைவதற்கான நான்கு வழிகளில் ஒன்றான யோகம் என்பதனை, இந் நாவலின் கருப்பொருளால் ஆக்கமுயன்று, புத்திலக்கியங்களின் பாதையில், ஒரு புதிய முயற்சியை செய்திருக்கிறார் நண்பர் அருளானந்தம் அவர்கள். யோகம் பற்றி கூறும் பெரும்பான்மையான நூல்கள் ஆன்ம ஞானமும் ஆழ்ந்த அறிவும் பெற்றவர்க்கன்றி உள்நுழைய முடியாத இரும்புக் கோட்டையாம். அத்தகு அரியபெரிய விடயத்தை தன் நாவலின் கருப்பொருளாக ஆக்கி மற்றையயோருக்கு வழங்க முன்வந்தமை ஒன்றுக்காக மட்டுமே நீ.பி.அருளானந்தம் அவர்களை மனம் நிறைய பாராட்டலாம். யோகக்கூறுகள் பற்றிய நுட்பமான விபரங்கள், ஆலயங்கள் பற்றிய பல வரலாற்றுச் செய்திகள், தமிழர் தம் மருத்துவ ரகசியங்கள், விவிலிய நூல் கூறும் பல ஆழ்ந்த செய்திகள் போன்ற பல விடயங்களை இந்நூலில் பதிவாக்கி தனது விரிந்த அறிவுப்புலத்தை இனங்காட்டியிருக்கிறார் எழுத்தாளர். நுண்மையான இயற்கை அவதானிப்பே ஒரு மனிதனை இலக்கியவாதி ஆக்குகிறது. திரு.அருளானந்தம் அவர்களின் இயற்கை அவதரிப்பும் அதனோடு அவர் காணும் தத்துவார்த்தப் பதிவுகளும் ஆசிரியரின் ஆழத்தை எடுத்தியம்புகின்றன. அவர் தனது எழுத்தின் கற்பனைப் பகுதிகளில் கூட ஆழமான தத்துவார்த்தக் கருத்துக்களை பதிவு செய்திருப்பது வியக்க வைக்கிறது. ஆழ்ந்த ஒரு விடயத்தை தனது நாவலின் பின்னணியாக்கி பல நுட்பமான விடயங்களை வாசகருக்குள் புகுத்த முயன்றிருக்கும் ஆசிரியரின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. - கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆங்கிலமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுதிCHANGES CANNOT BE DENIED (2012) SHORT STORY COLLECTION AUTHER: N.P.ARULANANTHAM TRANSLATOR: M.JAMES PULLE (TAMIL INTO ENGLISH)His social thoughts have enriched the content value of the stories. Descriptions of persons and events were often faithful to reality and so easy to identify. He developed his characters and situations along distinctively moral lines. It is very easy to find his social perception and cognition. Social contradictions were reflected inn conflicting characters in real situation. The stories reflect tension between tradition and modernity in the Tamilian environment. The First hand experiences of social life provided him with resource for his creative life. His message grown out from the structure of human experience, subjectivity and eclecticism. - Prof.SabaJayarajah மணிமேகலைப்பிரசுரம் வெளியிட்ட நூல்கள் (சிறுகதை)1. அம்மாவுக்குத்தாலி [கணையாழி தாமரை சஞ்சிகைகளில் வெளியான தெரிந்தெடுக்கப்பட்ட 14 சிறுகதைகள் அடங்கலான நூல்] 2. அப்பிள் பழவாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும் [19 சிறுகதைகள்] 3. சொர்க்கத்தில் முடிவான பந்தங்கள் [32 சிறுகதைகள்] திருமகள் பதிப்பகத்தில் வெளியான வரலாற்று நூல்1. யார் இந்த புலவர் ச.தம்பிமுத்தப்பிள்ளை மேலும் இவர் பெற்ற பரிசுகளும் விருதும் வேறு பங்களிப்புக்களும்அன்பு பாலம் சஞ்சிகை நடத்திய வல்லிக்கண்ணன் ஞாபகார்த்த சர்வதேச சிறுகதைப்போட்டியில் இவரது சிறுகதையான இரத்தம் கிளர்த்தும் முள்முடி முதற்பரிசினைப் பெற்றது. (2008 போட்டிக்காக அனுப்பப்பட்ட 900 கதைகளுக்குள் இருந்து முதல் பரிசுக்குத் தெரிவான சிறுகதை இது. இதற்கான பரிசை, பாலம் மாத இதழின் சிறப்பாசிரியரான ஞானபீட விருது பெற்ற த.ஜெயகாந்தன் அவர்கள் இவருக்கு வழங்கி கௌரவித்தார்) பூபாள ராகங்கள் 2004 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடத்திய உலகளாவிய ரீதியான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் 2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்மொழியும் இலக்கியமும் தரம் 8 மாணவருக்கான பாடநூலில் ஆசிரியரின் “நாணயம்” எனும் சிறுகதையும் உள்ளடங்கி இருக்கிறது. நாடகம் இலக்கியம் சார்ந்த துறைகளில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக 2015ம் ஆண்டு கலாபூஷணம் அரச விருது இவருக்கு வழங்கப்பட்டடிருக்கிறது. கலையுலகிற்கு கலைச்சேவையை வழங்கி வருவதனைக் கௌரவித்து 2019 இல் அரச விருது வழங்கும் வைபவத்தில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. லண்டன் புதினம் சஞ்சிகை உலகளாவிய ரீதியில் நடத்திய சிறுகதைக்கான பரிசு போட்டியில் இவரது மூன்றும் குரங்குகள் என்ற சிறுகதையானது ஆறுதல் பரிசைப் பெற்றுக்கொண்டது. ஆசிரியர் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட அளவில் இலங்கையின் முக்கிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் கட்டுரை ஆக்கங்களையும் எழுதியிருக்கிறார். தமிழ்ச்சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம் 2003ம் ஆண்டு அதன் பவளவிழாவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் சிறப்பு இடம் பெற்றமைக்காக இவரது சிறுகதைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விபவி 2003ம் ஆண்டு நடாத்திய சிறுகதைப்போட்டியில் சான்றிதழ் பெற்றார். சக்தி T.V தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்திருக்கின்றார். ஆசிரியர் இதுவரை 6 சமூகமேடை நாடகங்களை எழுதியிருக்கிறார். அவைகளில் முக்கியமான பாத்திரங்களிலே நடித்தும் இருக்கிறார். அந்நாடகங்களை இவரே இயக்கியும் இருக்கிறார். இந்நாடகங்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பல இடங்களில் மேடையேற்றம் கண்டிருக்கிறது. பல சரித்திர நாடகங்களையும் இவர் இயக்கியுள்ளார். அவற்றில் முக்கிய பாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பித்து வவுனியா நகரசபை பொது நூலகத்தின் மூலமாக நடாத்தப்பட்ட விழாவின் பரிசளிப்பு நிகழ்வில் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தத்திற்கு மேன்மையான கௌரவிப்பு அளிக்கப்பட்டது.(2023) அறிவியல் மாற்றம் சமூகமேம்பாட்டு நிறுவனம், SCSDO இன் துறைசார் இளைய மூத்த ஆளுமைக்கான விருது 2023 மூத்தகலைச்சிற்பி விருது நீ.பி.அருளானந்தத்திற்கு வழங்கப்பட்டது. இலங்கைத்தமிழ் இலக்கிய நிறுவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வவுனியாவில் நடத்தும் பெருவிழாவில் (இரா.உதணயன் இலக்கிய விருது 2023) நீ.பி.அருளானந்தம் -அவர்களுக்கு நீண்ட கால இலக்கிய பணியை கௌரவித்து அதி உயர் இலக்கிய விருது வழங்கப்ட்டது. நீ.பி.அருளானந்தத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வுதமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெறுவதற்கான பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இவரது சிறுகதைகளை ஆய்வு செய்து தமிழ்த்துறை கலைப்பீடம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்ததில் செல்வி யென்சியா செபஸ்ரியன் சுரேஸ் அவர்களுக்கு தமிழ்ச் சிறப்புக் கலைமாணி என்ற பட்டம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. (2002-2023) உயர் பட்டப்படிப்புக்கு ஆசிரியரின் “துயரம் சுமப்பவர்கள்" நாவல்ஆசிரியர் திருமதி.கலையரசி திருமாவளவன் (B.A, M.A, P.G.D) அவர்கள் நீ.பி.அருளானந்தத்தின் துயரம் சுமப்பவர்கள் நாவலை ஆய்வு செய்ததில் பெற்றுக்கொண்ட கல்வித்தகைமை சால உயர்தகு பெறுபேறு முதுகலைமாணி பட்டத்துக்குரிய பகுதித் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு உயர் பட்டப்படிப்புகள் பீடத்திற்கு துயரம் சுமப்பவர்கள் என்ற நாவல் திருமதி. கலையரசி திருமாவளவள் என்பவரால் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. இதுகுறித்த இவரது ஆய்வு நம்மந்தமான நிறைவில் பேராசிரியர்களால் பாராட்டப்பட்டு உயர்பேறான சித்தியடைந்த நிலையில் ஏ(யு) தகுதியினை இவர் பெற்றிருக்கிறார். துயரம் சுமப்பவர்கள் நாவலுக்குள் அடங்கலாக உள்ள கதைப் பரிமாணங்கள் பூராக பகுதி பகுதியாக்கி பிரித்த எடுத்து அத்தனை விசயங்களையும் தன் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் விபரங்கள் பூராகவும் தெள்ளத் தெளிவாக அவர் ஆய்வு செய்து சமர்ப்பித்திருக்கிறார். இந்தவித ஆய்வின் பெறுபேறாக இவருக்கு முதுகலைமாமணி எனும் உயரிய பட்டம் இவருக்க உயர்பட்டப் படிப்புகள் பீடம், யாழ் பல்கலைக்கழகமானது (தமிழ்த்துறை) வழங்கி கெளரவித்திருக்கிறது. இதையடுத்து இவர் எம்பில் பட்டம் பெறுவதற்கும் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் எழுதிய நான்கு நாவல் நூல்களை ஆய்வு செய்யும் நிலையிலும் தற்பொழுது ஈடுபட்டிருக்கிறார். நீ பி அருளானந்தம் அவர்களின் “ புண்ணியபுரம் ”முன்னுரைதமிழ் இலக்கிய வடிவங்களிலே புதுவதாகப் புகுந்து கோலோச்சும் இலக்கிய வடிவங்களிலே நாவல் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உணடு. 1876ம் ஆண்டு தோன்றிய பிரதாப முதலியார் சரித்திரத்துடனேயே தமிழுக்கு நாவல் இலக்கியம் அறிமுகமாகின்றது. மேலைப்புலஙகளிலேயே அரசோச்சிய நாவல் வடிவம் தமிழிலே வரும் பொழுது ‘ சரிததிரம ’ என்ற பெயருடனேயே வருவது மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. குhலப்போக்கிலே சமூக நாவல், பிரதேச நாவல், வரலாறறு நாவல் முதலான கிளைகளை நாவல் இலககியம் பரப்பி வளரத் தொடஙகியது. நீ.பி.அருளானநதம் அவரகளின் புணணியபுரம் வரலாற்று நாவல் எனற வகையிலேயே அமைந்துள்ளது. எல்லா வகை நாவல்களுக்கும் பின்னணியிலே அதன் ஆசிரியன் இருப்பான. நாவல்களை வாசிப்பவனுக்கு அதன் ஆசிரியரின் குணாம்சங்கள், விருப்பு வெறுப்புக்கள், மொழிப்புலமை முதலான அம்சங்கள் மெல்ல மெல்ல மேற்கிளம்பத் தொடங்கும். சமூக நாவலகளில் மாத்திரமனறி வரலாற்று நாவல்களிலும இததகைய அம்சங்கள் ஏதோ ஒரு அளவில், ஏதோ ஒரு வகையில் உள்ளடங்கி உறங்கு நிலையிலே என்றாலும இருக்கும் என்பதை அனுபவம் மிக்கவாசகன் விரைவாகக் கண்டுபிடித்துவிடுவான். கல்கி, மணிவண்ணன், சாண்டில்பன் முதலியோரின் வரலாற்று நாவல்களை மிக இளமைக் காலத்திலே வாசித்திருக்கிறேன். கற்றும் கேட்டும் அறிவு முதிரும்பொழுதுதான் முற்கூட்டிய கருத்துக்களைக் காணமுடிந்தது. வரலாற்று நாவல் ஒன்றை எழுதுபவனுக்குச் சமூகநாவல் எழுதுபவனை விடத் தான் எடுத்துக்கொண்ட விடயத்துக்கு ஏதுவான பல விடயங்களை அறிந்து தெரிந்து மனத்திருத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். வுரலாற்றுச் செய்திகளை வெறுமனே வரிசைபபடுததினால் அது நாவலாகவும அமையாது. ஆயவாகவும் அமையாது. வுரலாற்று நாவலை எழுதுபவனுககுப் பலதுறை அறிவு அவசியம் என்று கூறுவார். அது நீ.பி.அருளானந்தம் அவர்களுக்கு வாய்த்திருக்கின்றது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் நீ.பி.அருளானந்தம் எழுதிய ‘புண்ணியபுரம்’ என்னும் வரலாற்று நாவலை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த நாவலை வாசிக்கும்பொழுது ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நாவல்களை வாசித்த அனுபவம் மெல்ல மெல்ல இடையிடையே தலைகாட்டி மறைந்தது. எமது வாசிப்பு அசுரப்பசி எடுத்த காலப்பகுதியிலே இந்திய சஞ்சிகைகளிலே வெளிவந்த தொடர் நாவல்களே தீனியாக அமைந்தமையை இந்த நாவலை வாசிக்கும் போது நினைந்து கொண்டேன். வரலாற்று நாவலை எழுதுபவருக்கு பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்;. இந்த இடர்பாட்டுக்கு இந்த நாவலாசிரியரும் முகங்கொடுத்திருப்பார். உண்மையான வரலாறு எது? அங்கீகரிக்கப்பட்ட வரலாறு என்று ஒன்றைத் தீர்மானிக்கலாமா? எழுத்திலே பதிவாகியவையாகவும் உண்மையா? செவிவழிக்கதைகளை ஏற்கலாமா? தவிர்க்கலாமா? முதலான வினாக்கள் நாவல் ஆசிரியரைக் குடைத்திருக்கும் என்று நிச்சயமாக நம்பலாம். வுரலாற்றுப் பதிவுகளை உள்வாங்கியும் வாய்மொழி மரபுகளை முற்றாக நிராகரிக்காமலும் இந்த நாவலை நகர்த்திச் செல்கின்றமை பாராட்டிற்குரியது. வரலாற்று நாவல்களிலே ஆசிரியன் ‘அண்ணாவி’ போலச் செயற்படும் இடங்களும் இருக்கும். காவியங்களிலே குறிப்பிடப்படும் ‘கவிக்கூற்றுப்போல’ பல விடயங்கள் நாவல்களிலே இடம்பெறுவது தவிர்க்க முடியாததே. இந்த நாவலாசிரியர் பல பாத்திரங்களின் பின்னாலே கரந்துறைந்து கதையை நகர்த்துவதையும் அவதானிக்கலாம். ஐம்பத்து நான்கு அங்கங்களிலே அமைந்துள்ள புண்ணியபுரம் தொடங்கி முடியும் வரை வாசகனையும் தன்னோடு பிணைத்துக் கொண்டு பயணித்துள்ளமை நாவலாசிரியரின் ஆற்றலையும் ஆளுமையையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றது. இந்த வயதிலும் இந்த நாவலின் பினனால் போனேனே என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. இதற்குக் காரணம் அவர் கதையை நகர்த்திச் செல்லும் முறைமையே எனலாம். இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் உணர்வோடு உலாவருவது போலவே ஆசிரியர் காட்டிச் செல்கின்றார். ஒரு கமராவை இவரின் கையிலே கொடுத்தால் அசையும் உருவங்களை இவர் அற்புதமாகப் படம்பிடிததுக்காட்டுவார் என எணணினேன். உதாரணங்கள் பலவற்றைக் காடடலாம். இயற்கை வருணனைகள் வாசகர்களை கரு, உரி என்று பழந்தமிழ் இலக்கியங்களிலே இடம்பெறும் பல விடயங்களை இந்த நாவலை வாசிக்கும் பொழுது நினைந்து கொண்டேன். நிலமும், பொழுதும், இயற்கையும் இயல்பாகவே இடமபெறும் இடஙகள் பலவாகும். வடபகுதிக்குரிய பனந்தோப்புக்கள் மருதமரங்கள் இவ்வாறான பலவற்றைக் குதிரை தாண்டிச் செல்லும் பொழுது வாசகனின் மனமும் அவற்றின் பின்னே செல்லும் வகையிலே காட்சிப்படுத்தி நகர்த்துவதை நாவலின் சிறப்புகளில் ஒன்று எனத் துணிந்து கூறலாம். தமிழ் நாட்டையும் வட இலங்கையையும் அருகருகே வைத்துக் கதையினூடாகக் கலாசாரத் தொடர்பினையும் பின்னிச் செல்வது நாவலின் சிறப்பம்சம் எனலாம். நாவலுககு ஏற்ற மொழிப்பிரயோகத்திலும் ஆசிரியர் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கின்றார். இந்த நாவலின் முக்கியமான ஒரு பகுதியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். புண்ணியபுரம் நாவல் நகர்ந்து கொண்டு வருகையில் (95 ஆம் பக்கம்) வாசகனை இடைநிறுத்தி இருக்கையில் இருத்திவிட்டு சிறுவிளக்கம் ஒனறைத் தருகின்றார். இது வரலாற்று நாவலிலே இடம்பெறும் ஒரு புதிய உத்தி. வரலாற்று நாவல் ஒன்றை எழுதும் ஆசிரியனின் சத்திய நேர்மையை இந்த இடைநிறுத்தல் காடடி நிற்கின்றது. நாவலாசிரியர் இந்த இடத்திலே ஒரு நேர்மையான ஆய்வாளனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றார். நாவலாசிரியரின் பரந்த படிப்பும் ஆய்வுத்தேடலும் ஆற்றலும் இநத இடைநிறுத்தல் ஊடு தெளிவாகத் தெரிகின்றது. இலங்கையின் வடபகுதி வரலாறு முழுமையான தெளிவுடன் இல்லை என்பதை ஆய்வாளர்கள் அறிவார்கள். அப்படியிருந்தும் வரலாறு “ நோகாமல் நொடியாமல் ” பயணிக்க வேண்டும் என்பதிலே ஆய்வாளர் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருந்துள்ளார் எனபதை நாவலை வாசிப்போர் உணர்வர். இந்த நாவலின் இறுதியிலே இடம்பெறும் உசாத்துணைப்பட்டியல் ஆசிரியரின் குன்றா உழைப்பையும், குறையா ஊக்கத்தையும் காட்டி நிற்கின்றது. சிறந்த நாவல் ஒன்றைத் தந்த நீ.பி.அருளானந்தம் அவர்களைப் பாராட்டுகின்றேன். ஒரு பிற்குறிப்புஎந்த ஒரு நூலையும் நான் படிக்கும் பொழுது அதன் ஆசிரியரின் பின்னணி, கல்வி, பணி முதலியவற்றையும் கூடியவாறு அறிய முயல்வேன். அந்த வகையிலே நீ.பி.அருளானந்தம் அவர்களின் புலமைப்பின்னணி எனக்கு அவர்மேல் அளவு கடந்த அன்பினை உருவாக்கியது. அச்சுவேலி.ச.தம்பிமுத்துப்பிள்ளையின் மரபினர் என்பதை அறிந்ததும் அவரின் பாதங்களைத் தொட்டு வணங்க வேணடும் என்ற எண்ணம் உருவாகியது. வணக்கமும் வாழ்த்தும் ஒருங்கே தந்து அமைகின்றேன். எஸ்.சிவலிங்கராஜா மதிப்பீட்டுரைவாழ்ககையின் ஏற்றத்தாழ்வுகளை மனித அவலங்களை, வாழ்வின் செழுமைகளை, வாழ்வியல் கோட்பாடுகளை தனது சிறுகதைகள், நாவல்கள் மூலம் வெளிப்படுத்தி தன்னை மிகச்சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொண்டவர் அருளானந்தம். இதுவரையில சமூக கருவை மையமாக வைத்து கதை புனைந்தவர், இம்முறை முதன்முதலாக சரித்திரக் கதையை கருவாக வைத்து ‘புண்ணியபுரம்’ என்ற தலைப்பில் நாவல் படைத்திருக்கிறார். வரலாற்றுக் கதைகளை எழுதுவதற்கு இலக்கிய நூற்பயிற்சியும், வரலாற்று அறிவும் கற்பனைத்திறனும் இருத்தல் அவசியமாகும். கதைக்கரு, சம்பவம் நடைபெற்ற இடஙகள், பாத்திரங்கள், உரையாடல்கள் அக்கால சூழலை கண்முனனே நிறுத்த வேணடும். அத்துடன் வரலாற்றுத் தகவல்களை முரண்படாத வகையில் தெரிவிக்க வேண்டும். மேலும், தாம் எழுதும் வரலாற்று நாவலுக்குரிய ஆதாரங்களை, நூல்களை, சரித்திரச் சான்றுகளை கற்றுணர்ந்து தெளிவு பெற்றவராக இருத்தல் வேண்டும். நூலாசிரியர் வரலாற்றுத்தகவல்களை திரிவுபடுத்தாமல் தமது கற்பனைத்திறனுடன், வர்ணனைகளுடன் ‘புண்ணியபுரம்’ கதை புனைந்திருப்பது பாராட்டத்தக்கதாகும். கதைக்களம் தமிழக சோழ நாட்டில் தொடங்கி, ஈழநாட்டின் வடபுலத்தில் கீரிமலையை மையமாக வைத்து நகர்கின்றது சோழநாட்டு மன்னன் திசையுக்கிரசிங்கன், தன்மகள் இளவரசி மாருதபுரவீகவல்லியின் குதிரை முகம் கொண்ட தீரா குன்ம நோய் குறித்து கவலையுடன் ஆழ்ந்திருக்கிறார். அமைச்சர் பெருங்குமரனாருடன் இளவரசியின் நோய் நீங்கும் உபாயம் குறித்து கலந்துரையாடுவதாக கதை ஆரம்பிக்கிறது. ஆரம்பமே அதிரடியாகத் தொடங்குகிறது. சரளமான நடையில், வாசகர்களைக் கவரும் வகையில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. சரித்திரப்பின்னணியும், வர்ணனைகளும் கதைக்கு மெருகூட்டுகின்றன. அமைசசரின் ஆலோசனைப்படி இராமேஸ்வரம் புனித தீரத்தத்தில் நீராட மாருதப்புரவீகவல்லி தனது தோழி மற்றும் பரிவாரங்களுடன் புறப்படுகிறாள். புனித தீர்தத்தில் நீராடியதில் அவளது தோ~ங்கள் நீஙகுகின்றன. ஆனால், அவளது குன்மநோய் நீங்கவில்லை. இராமேஸவரத்திலுள்ள சாந்தலிங்க சன்னியாசி, இளவரசி தனது பரிவாரங்களுடன் பாய்மரப்படகில் அதன் அருகில் உள்ள குமாரத்தி பள்ளம் என்ற இடத்தில் பாளையம் அமைத்து தங்குகிறார்கள். இளவரசியின் எளிமையான வாழ்க்கை பொதுமக்களிடம் கொண்ட பரிவு, இறைபக்தி முதலியவற்றை கதாசிரியர் விபரமாக விபரிக்கிறார். அத்துடன் வடபுலத்து மக்களின் வாழ்வியலை, இயற்கை வளங்களை, பனைமரக்காடுகளின் வனப்புக்களையும் எடுத்தியம்புகிறார். கீரிமலை நன்னீர்த்தீர்த்தத்தில் நீராடிவரும் சோழ இளவரசி, நகுல முனிவரின் தரிசனம் பெறுகிறார். நகுலமுனிவர், தனது கீரிமுகம் நீங்க மலையருவித்தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றமை பற்றி தெரிவிக்கிறார். இளவரசி தீர்த்தத்தில் நீராடிவர குன்மநோய் நீங்கும் என உறுதிபட உரைக்கிறார். இளவரசியும் புனித தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெறுகிறார். நோய் நீங்கிய இளவரசி முருகனுக்கு கோயில் கட்டி குடமுழுக்கு செய்ய தீரமானிக்கிறாள். இவ்விடத்தில் தில்லைவாழ் அந்தணர் தீட்சிதர்களின் இறைபக்தி, வாழக்கை முறைகள கோட்பாடுகளைப் பற்றி விபரமாக தெரிவிக்கிறார் எழுத்தாளர் அருளானந்தம். மாருதப்புரவீகவல்லியினால் கோயில் கடவை என்னுமிடத்தில் அமைக்கப்பெற்ற முருகன் கோவில், சூழல் பினனாளில் மாவிடடபுரம் என அழைக்கப்பட்டது. இலங்கை மன்னன் உக்கிரசிங்கன் கதிர மலையில் ஆட்சி செய்பவன். கதிரமலை தற்போது கந்தரோடை என வழங்குகிறது. இம்மன்னன் காலத்தில் தமிழர்கள் பௌத்த மதத்தை தழுவ ஆரம்பித்தனர். காயாத்துறைமுகம் ஊடாக புத்தகாயாவிற்கு பாய்மரப்படகில் பயணித்ததை அருளானந்தம் கோடிட்டுக் காட்டுகிறார். காயாத்துறைமுகம் தற்போது காங்கேசன்துறை என மாற்றம் பெற்றுள்ளது. ஈழமன்னன் உக்கிரசிஙகன் சோழ இளவரசி மாருதபபுரவீகவல்லியின் அழகில் மயங்கி அவளை சிறைபிடிக்கிறான். பின்னர் அவளின் ஒப்புதலுடன் திருமணம் செய்து பட்டத்துராணியாக்குகிறான். ஏராளமான வரலாற்றுத்தகவல்களை கதையோடு எமக்குத் தெரியப்படுத்துகிறார். அத்தோடு வாசகர் விரும்பும் வண்ணம் கதையை நகர்ததிச் செனறு வெற்றிபெற்றிருககிறார். சரித்திர நாவலுக்குரிய எல்லா அம்சங்களுடன் புதிய கோணத்தில் ‘புண்ணியபுரம’ வீறுநடை போடுகிறது. இச்சரித்திர படைப்பின் மூலம் மிகச்சிறந்த சரித்திர நாவலாசிரியராக உயர்ந்திருக்கிறார் நீ.பி.அருளானந்தம். அருட்கலைவாரிதி, கலாபூசணம். ஸ்தபதி சு.சண்முகவடிவேல்
வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிக்கும் நீ பி அருளானந்தத்தின் “ புண்ணியபுரம் ”தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈரப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன. வரலாற்று நாவல்கள் என்பவை கடந்த காலத்தை மீட்டுப் பார்ப்பதற்கும் வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிபபதற்கும் ஓர் உத்தியாகவே எழுத்தாளர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று நாவல்களின் எழுச்சி என்பது போதுமான அளவுக்கு நிகழவிலலை என்றே கூறலாம். மாறாக, சமூக பண்பாடடு அரசியல் வரலாறுகளுக்கே ஈழச்சூழல் பெரிதும் இடங்கொடுத்து வந்துள்ளது. இதற்குப் பல்வேறு அகப்புறக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை நாம் அறிவோம். ஈழத்தின் முதல் வரலாற்று நாவலாகிய தி.த சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895) மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது. “மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால் வரலாற்றைச் சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே அதன் தனிச்சிறப்பு” என்று அருண்மொழிவர்மன் குறிப்பிடுவதும் இதனாற்தான். இந்நிலையில் சமூக அரசியல் பண்பாட்டுக் கூறுகளின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டனவாக ஈழத்து நாவல்கள் அமைந்திருபபதைப் புரிந்துகொள்ளமுடியும். ஈழத்தில் மோகனாங்கியின் தொடர்ச்சியாக அவ்வப்போது பலர் வரலாற்று நாவல் எழுதுகையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சி.வை சின்னப்பபிள்ளையின் விஜயசீலம் (1916), செங்கை ஆழியானின் நந்திக்கடல் (1969), வ.அ. இராசரத்தினத்தின் கிரௌஞ்சப் பறவைகள் (1975), முல்லைமணியின் வன்னியர் திலகம் (1998), செங்கை ஆழியானின் குவேனி (2001), மு. சிவலிங்கத்தின் பஞ்சம் பிழைக்க வந்த சீமை (2015) முதலானவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால் தனியே வரலாற்று நவீனம் என்று அல்லாவிட்டாலும் சமூக வரலாற்றைப் பதிவு செய்தவர்களும் வரலாறு பற்றிய பிரக்ஞையுடன் இயங்கியதையும் இங்கு மனங் கொள்ளவேண்டும். மங்களநாயகம் தம்பையாவின் நொருங்குண்ட இருதயம் (1914) வெளிவந்தபோது கல்வியின ஊடாக பெண்களின் முன்னேற்றமும் அவர்களின் எழுச்சியும் தெரியவந்தது. டானியலின் எழுத்துகள் வந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கலகக் குரல்கள் வெளித்தெரிந்தன. அருளரின் லங்காராணி (1988) வந்தபோது இனமுரண்பாட்டின் காரணமாக, தமிழர்தம் உரிமைகள் பற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டனர். இவ்வாறுதான் ஈழத்து நாவல்களின் ஊடாக சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. நீ.பி.அருளானந்தம் அவர்கள் புனைகதை இலக்கியத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர். தனது எழுத்துப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். அவர் சோழப் பேரரசின் வரலாற்றுக் காலத்தைப் பகைப்புலமாகக் கொண்டு வரலாற்று நூல்களில் நமக்கு உதிரியாகச் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளை, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் அடிப்படையாகக் கொண்டு மாருதப்புரவீகவல்லி- உக்கிரசிங்கன் வரலாற்று நாவலாக ‘புண்ணியபுரம்’ என்ற புனைவைத் தந்திருக்கிறார். திசையுக்கிரசோழன் தன் புத்திரியாகிய மாருதப்புரவீகவல்லிக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்துவதற்கு எத்தனையோ பரிகாரங்களைச் செய்துங்கூட மகளின் துன்பந் தீராமை கண்டு மனங்கலங்கி வெதும்புகிறார். பின்னர் மந்திரியாரின் ஆலோசனைப்படி பிணி தீர்க்கும் புனித தீர்த்தத்தில் நீராடினால் மகளின் குறை தீரும் என்றறிந்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கிறார். இராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவிலுக்கு உள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் நலம்பெற முடியும் என்று நம்பப்படுகிறது. மாருதப்புரவீகவல்லி இராமேஸ்வரம் வந்தபோது ஒரு மூதாட்டி வழிப்படுத்துகிறார். அவர் ஊடாக சாந்தலிங்கம் என்ற சந்நியாசியைச் சந்திக்கிறாள். “அந்த இலங்கா துவீபத்தின் வடபாகத்திலுள்ள ஒரு சிறு குறு நாட்டினுக்குள்ளே கீரிமலை என்கிற இடத்தின் பக்கம் ஒரு சிற்றாறு இருக்கிறது. அந்த இடத்திற்கு நீ யாத்திரை பண்ணி நற்தீர்த்தமாடினால் உன் ரோகமெல்லாம் மாறி நீ பழையபடி சௌந்தரவதியாகிவிடுவாய்” என்று சாந்தலிங்கம் சந்நியாசி கூறுகிறார். இராமேஸ்வரத்திலிருந்து ஈழத்திற்கு வந்து கீரிமலை அருகிலுள்ள குமாரத்திபள்ளம் என்ற இடத்தில் தங்கியிருந்து கீரிமலைக் கேணியில் நீராடி நகுலேஸவரத்தில் வழிபாடு இயற்றுகிறாள் இளவரசி. அதன்போது நகுலமுனிவர் பற்றி அறிந்து அவரைக் காணுகிறாள். நகுலமுனிவரால் அவளுக்கு நம்பிக்கை ஊட்டப்படுகிறது. அந்த இடத்தின் மகிமையும் முன்னோர் கதைகளும் முனிவரால் சொல்லப்படுகின்றன. நகுலேசுவரம் வரலாற்றுக் காலங்களில் முனனோர் வழிபட்ட தலம் எனபதும் நளன் முதலான அரசரகள் நோய் நீங்கப் பெற்றார்கள் முதலான வரலாறுகளும் அவளுக்கு சொல்லப்படுறது. அப்புனித நீரின் மகிமையாலும் வழிபாட்டாலும் இளவரசியின் நோய் படிப்படியாக நீங்கிவருகிறது. ஆதனால் பிரதியுப்காரமாக மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை அமைக்கும் கைங்கரியத்திலும் ஈடுபடுகிறாள். இக்காலத்தில் கதிரமலையிலிருந்து அரசாண்ட உக்கிரசிங்கனின் வரவு நிகழ்கிறது. அதன் காரணமாக மாருதப்புரவீகவல்லி இலங்கை அரசனின் பட்டத்து ராணியாகும் நிலைமை ஏற்படுகிறது. குழப்பகரமான நிலை பின்னர ஒருவாறு நீங்கப் பெறுவதோடு புனைவு முற்றுப் பெறுகிறது. இப்புதினத்தில் இராவணன் ஆடசி, அவனின் முன் இருந்த அரசர்கள் பற்றிய சரித்திரச் சம்பவங்கள், நாகர்கள் பற்றிய கதைகள், குமரிக்கணடம், பாண்டியர் ஆட்சி முதலானவை கூறப்படுகின்றன. இராவணன் பற்றி மிக விரிவான உரையாடல் மாருதப்புரவீக வல்லிக்கும் நகுலமுனிவருக்கும் இடையில் இடம்பெறுகிறது, நகுலேசர ஆலயத்திற்கு அருகில் உள்ள கண்டகி தீரத்தத்திற்குச சென்று அங்கு நீராடி நகுலேசர பெருமானையும தரிசித்ததால் நளனின் கலி இடர் நீங்கப் பெற்றான் என்ற கதையும் முனிவரால் சொல்லப்படுகிறது. இவ்வாறான புராண இதிகாசக் கதைச் சம்பவங்களினடியாக இப்புனைவு பயணிக்கின்றது. ஈழத்தில் மக்களின் வாழ்வு முறை, பௌத்தமதச் செல்வாக்கு, இந்துககளின் வழிபாடு முதலானவற்றை கதைப்போககில் சம்பவங்களின் அடியாக ஆசிரியர் சொல்கிறார். ஈழத்து வரலாறு சம்மந்தமாக எழுதப்பட்ட நூல்களை நன்கு ஆராயந்து அவற்றில் வருகின்ற வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில் உரையாடல் ஊடாக எடுத்துக்காட்டி கதையை நகர்த்துகிறார். திசையுக்கிரசோழன் - அமைச்சன், மாருதபபுரவீக வல்லி மாருதபபுரவீக வல்லி – கயல்விழி, மாருதபபுரவீக வல்லி -நகுலமுனிவர்,- குயிலி, மாருதபபுரவீகவல்லி உக்கிரசோழன் ஆகியோரின உரையாடல்களுக்கு ஊடாக புராண மற்றும் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகின்றன. அதிகமும உரையாடல்கள் ஊடாகவே கடந்தகாலங்கள் மீடகப்படுகின்றன. எழுத்தாளர் நீ பி அருளாந்தம் அவர்கள் ஈழத்துச் சூழலில் மங்கிப்போயிருந்த வரலாறறுச் சமபவம் ஒனறினைப் புனைவினூடாகச் சொல்லியிருக்கிறார். நினைவுகளும் வரலாறுகளும் மறக்கடிக்கப்படும் இக்காலகட்டத்தில் இதுபோன்ற புனைவுகள் இளையவர்களை மாத்திரமன்றி பெரியவர்களையும் சென்று சேரவேண்டும். ஏங்கள் புராதன வரலாறுகளை மீட்டுப்பார்ப்பதற்கும் அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்பதற்கும் ஒரு வழியாக இதுபோனற புனைவுகளின வருகை அவசியமாக உள்ளது. எழுததாளர் நீ. பி அருளானந்தம் அரிதில் முயன்று இப்பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார். அவரின் முயற்சிகள் மேலும் தொடரவேணடும். கலாநிதி சு. குணேஸ்வரன் என்னுரைஈழத்து தமிழர்களாகிய எமக்கென்று உள்ளதான தனித்துவமான வரலாறு என்பது முக்கியமானது. அவை யாவற்றையும் நாம் காப்பாற்றியாக வேண்டிய கடமையும் நம் எல்லோருக்கும் உள்ளதாகவே இன்றளவில் இருக்கிறது. அப்படி காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலம் வருங்காலம் மட்டுமல்ல அதனுடன் நடந்த கால வரலாறையும் தான் நாம் கரிசனையுடன் காப்பாற்றியே ஆக வேண்டும். இதற்கானதொரு காரணம் இன்றைய சூழ்நிலையிலே நம் வரலாற்றை திட்டமிட்டு குலைப்பதற்கும் அதை இனிமேல் இல்லாமலும் செய்வதற்காக பலர் நம் வரலாற்றிலே மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறதாக உள்ளார்கள். இந் நிலையில் நம் தமிழ் இனத்தின் முன்னைய வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரத்துடனான அடிப்படையாகக் கொண்டு “உறுதியாகவும் விளக்கிட வேணடுமென சில காலமாகவே எனக்கு அவா உணரவு இருந்து வந்தது. சரித்திர வரலாற்று நாவல்தனை எழுதும்போது வரலாற்றுப் பொருத்தங்களோடு முரணாகாத வகையில் பிற கற்பனைகளை அதனுடன் சேர்த்துக் கொள்வது என்பது அமைய வேணடும். இவ்வகையில் இந்த புண்ணியபுரம்” எனும் வரலாற்று நாவலை நான் எழுதி முடிப்பதற்கு ஆதாரமாக பல வரலாற்றுச்சான்றுகள் கூறும் நூல்களிலிருந்து சொல்லப்பட்டிருந்த சம்பவங்களை அப்படியே நான் உள்வாங்கிக் கொணடேன். இவ்வாறு யாழ்ப்பாண சரித்திர நூல்களை படித்து எனக்குள் நான் உள்வாங்கிக் கொண்ட அன்றைய சரித்திர சம்பவங்களிலே சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியுடையதும் இடவிலங்கையை அரசாண்ட மன்னானவிருந்த உக்கிரசிங்கன் என்பவனதும் வரலாற்று சம்பவம் யாழபபாண சரிததிரததிலே முககியமாக தெரிந்தெடுத்து சொல்லவேண்டிய தேவை இருப்பதாக எனக்குப்பட்டது. காரணம் கைலாயமாலை எனும் சரித்திரநூல் மாருதப்புரவீகவல்லியின் கதையில் இருந்தே தொடங்கி சரித்திரத்தைச் சொல்லி இருக்கிறது. அதைப்போன்று பின்னர் நூல் செய்வோர் அனைவரும் எழுதப்புகுந்த யாழ்ப்பாண சரித்திர நூலகளில் மாருதப்புரவீகவல்லி உக்கிரசிங்கமன்னன் சரித்திரக்குறிப்பையே தொடங்கியதாக தங்கள் வரலாற்று ஆய்வு நூல்களில் கூறியதாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பழமை வாய்ந்த சரித்திர வரலாறுகளை ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கான சான்றுகள் இங்கே கல்வெடடுககளில் காணப்பட்டதாக இல்லை. ஆனாலும் எழுதப்பட்டதாயுள்ள அனேகம் வரலாற்று நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக சோழதேசத்து இளவரசி மாருதப்புரவீகவல்லி என்பவள் கடடியதாக உள்ள மாவிட்டபுரம். கந்தசுவாமி ஆலயம் இன்னும் கண்காணக்கூடிய சாட்சியாக நமக்கெல்லாம் இருந்து வருகிறது. திசையுக்கிரசிங்கசோழ அரசனின் புதல்வி மாருதப்புரவீகவல்லியினது மாறா நோயதனை தீர்த்து குணம் பெறச் செய்த புண்ணிய தீர்த்தம்கீரிமலைத் தீர்த்தம் என்பதாகவே அறியப்பட்டிருக்கிறது. இவ்வுண்மையான வரலாற்றுச் சான்று வலியுறுத்தப்பட்டதாக இருக்க மாருதப்புரவீகவல்லி உக்கிரசிங்கன் வரலாற்றை “புணணியபுரம” எனும் இந்நாவலூடாக நான் சொல்ல முனைந்தேன். வடவிலங்கையில் உறுதிப்பட்டதாயிருந்த இந்த சரித்திரத்தை நாவலாக நான் வடிவமைக்கும்போது எனக்குள் ஒரு மனத்திருப்தியும் சந்தோ~மும் இருந்தது. அதன் காரணம் இந்த வரலாற்றை கையிலெடுத்து எவருமே இதுவரை இங்கு என போன்று விபரமாக சொல்லத் துணியாததேயாகும். யாழ்ப்பாண பண்டைய நாள் வரலாற்றினை தடயங்களை ஆய்வு செய்ய முனைபவர்களுக்கு அவர்களது ஆராய்ச்சியின் மேல் ஊக்கத்தை கிளர்த்து விடுவதற்கு “புணணியபுரம்” எனும் இந்நாவலும் சிறிதேனும் உதவும் என்பதும் என நம்பிக்கையாக உள்ளது. இந்நாவலை வாசித்தறிந்தவர்க்கு புண்ணிய தீரத்தமான கீரிமலை தீரத்தத்தில் சென்று நீராட வேண்டும் என்ற ஆவலும், நகுலேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டு மாவிட்டபுரம் கந்தன் ஆலயத்திற்கும் சென்று அவன் அருளையும் பெற வேண்டும் என்கிற பக்தி உணர்வும் இருந்ததை விட அவர்களிடம் இன்னமும் மெலெழும் என்றதாகவும் நான் நினைத்து என்னுள் ஆன்ம திருப்தி பெறக்கூடியதாகவும் இருக்கிறது அந்தப் புண்ணிய ஸ்தமான இடம்தனுக்கு சென்று அவைகளை அவரகள் தரிசிக்கும் போது நான் எழுதிய இந்த “புணணியபுரம்” எனும் நாவலும் அவரகள் ஞாபகத்தில் வந்து வெளிச்சம் காட்டி நிற்கும் என்பதும் என நம்பிக்கை. இந்நாவலுக்கு பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்கள் அருமையானதொரு முன்னுரை தந்திருக்கிறார். அப்பெருந்தகையின் முன்னுரைதனை நான் படித்தப் பார்த்தபொழுது அப்படியே நான் சிறுபொழுது சநதோ~ததில மனம திளைததிருநது விடடேன. என நாவலை நன்றாக வாசித்து நினைவிலிருத்தி அவர் எவ்வளவோ சிறப்புச் சொல்லிவிட்டார். அவரது முனனுரையை வாசிக்கும்போது எளிமையான தமிழ் அவரிடம் வாழ்வதாகவே நான் கணடேன். இந்நூலுக்கு அற்புதம் வாய்ந்ததோர் முன்னுரை எழுதித்தநதமையிட்டு என் இதயத்தை விட்டு நீஙகாது நிலைத்திருக்கும் நன்றியை அவருக்கு நான் தெரிவிக்கிறேன். இன்னும் என்னுடைய இந்நாவலை முழுக்க வாசித்துச்சுவைத்த ஓர ஊற்று நீரின பரிசுத்தம் போன்று ஒரு தெளிவான சிறப்பு மதிப்பீட்டு உரையினை அருட்கலைவாரி கலாபூ~ணம் சு.சணமுகவடிவேல் அவரகள் எழுதித் தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நான் நன்றிதனை கூறிக்கொள்கின்றேன். இன்னும் இந்நாவலானது சக்தி பாய்ந்ததைப் போன்று வாசகனிடம் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு ரோசாப்பூவைப் போல் எளியதும் இனியதும் அழகானதும் என்றாலும் மிகக் கம்பீரமானதாயுள்ள பல விளக்கங்கள் செறிந்த ஒரு சிறப்பான உரையை எழுதித்தந்தமைக்காக கலாநிதி. சு. குணேஸ்வரன் அவர்களுக்கும் நான்என் நன்றியை தெரிவிக்கின்றேன். இந்நாவலை பூரணமாக எழுதி முடிந்ததாய் நிறைவு செய்ய பல இடர்கள் வந்துற்றதாய் இருந்த எனக்கு அதன்மூலம் மூன்று ஆணடுகள் கடந்ததாக இருந்தன என்றாலும் நூலுருவில் இன்றளவில் வெளிவந்ததாக அமைந்ததில் அதையிட்டு நான் மனம் நிறைவடைகிறேன். நீ.பி.அருளானந்தம் |
Portal di Ensiklopedia Dunia