நீ உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால் (Nee Unnai Arindhaal) 2009 இல் வெளிவந்த தமிழ்ப்படமாகும், இதை இயக்கியவர் வி. ரிஷிராஜ் மற்றும் இந்தியன் பாஸ்கர். இப்படத்தில் முரளி, வி. ரிஷிராஜ், அறிமுக நடிகை குஷி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்திருந்தனர், இவர்களுடன் ரிஷா, டி. கே. கலா, டி. ஹரிகிருஷ்ணன், இந்தியன் பாஸ்கர் மற்றும் தாதா முத்துகுமார் போன்றோரும் உடன் நடித்திருந்தனர், இப்படத்தை இசட். டி சௌத்ரி தயாரித்திருந்தார். இதன் இசை ஆர். கே. சுந்தர், இப்டம் 2009 ஜூலை 3 அன்று வெளிவந்தது.[1][2] கதைசடை (வி. ரிஷிராஜ்) ஒரு அனாதை, சிறு வயதிலிருந்தே கோபாலின் தாயாரால் தனது மகனைப் போலவே வளர்க்கப்பட்டு வருகிறான். கோபால் (முரளி) நல்ல எண்ணம் கொண்டுள்ளவராகவும், அதற்கு நேர்மாறாக சடை இருக்கிறான். கோபால் வள்ளியை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். சடைக்கு திருமணம் செய்து வைக்க கோபாலும் அவரது தாயாரும் முயற்சி செய்கின்றனர். ஆனால், அந்தப் பெண் சடையின் நடத்தையினால் மறுத்து விடுகிறார்., இதற்கிடையில் கோபாலின் தாயார் இறந்துவிடுகிறார். வள்ளி தனது கணவன் கோபாலிடம் சடையின் மோசமான செயல்களைப் பற்றி தெரிவிக்கிறார். ஆனால் , கோபால் அதை மறுக்கிறார். சடையின் நிலைமை மேலும் மோசமாகிறது. கடைசியில் சடை வள்ளியிடமே தவறுதலாக நடந்து கொண்டு அவளை கொலையும் செய்து விடுகின்றான். கோபாலுக்கு சடையைப் பற்றி உண்மையை தெரிந்து கொண்டு எவ்வாறு தனது மனைவியின் இறப்பிற்கு பழி வாங்குகிறான் என்பது படத்தின் முடிவாகும் நடிகர்கள்
சித்ரா
தயாரிப்புமுரளி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், நடிகை குஷி இப்படத்தில் அறிமுகமானார் இவர்களுடன் ரிஷா, டி. கே. கலா, டி. ஹரிகிருஷ்ணன், இந்தியன் பாஸ்கர் மற்றும் தாதா முத்துகுமார் போன்றோரும் உடன் நடித்திருந்தனர், இப்படத்தை 24 பிரேம்ஸ் புரடக்ஸன்ஸ் சார்பில் இசட். டி சௌத்ரி தயாரித்திருந்தார். இதன் இசை ஆர். கே. சுந்தர், பாடல்கள் எழுதியது இந்தியன் பாஸ்கர், இப்படம் 2009 ஜூலை 3 அன்று வெளிவந்தது .[2][3][4] ஒலித்தொகுப்பு
ஆறு பாடல்கள் கொண்ட இதன் ஒலித்தொகுப்பினை ஆர். கே. சுந்தர் மேற்கொள்ள 2009இல் வெளிவந்தது பாடல்களை எழுதியது இந்தியன் பாஸ்கர், நடிகர் நரேன், இயக்குநர் ராம நாராயணன், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின், முரளி, வி. ரிஷ்ராஜ் , நடிகை குஷி ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்..[2][3][5][6]
வெளியீடுசூலை 2009 இல் தமிழ்நாடு அளவில் குறைந்த திரையரங்குகளிலேயே இப்படம் திரையிடப்பட்டது. தினமலர் இதழானது முரளி, ரிஷியைவிட நன்றாக நடித்திருந்தார் ஆனால் திரைக்கதை நன்றாக இல்லை என விமர்சனம் செய்தது.[7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia