நுகர்வோர் கடன்நுகர்வோர் கடன் என்பது பொருட்களையும் சேவைகளையும் நுகர்வதற்காக பெறப்பட்டு, திரும்பி செலுத்தப்படாத கடன் ஆகும். அளவுநுகர்வுப் பண்பாடு நுகர்வின் அளவைப் பல்மடங்கு பெருக்கி உள்ளது. வீடு, வாகனம், உடை, ஆடம்பரங்கள், தளபாடங்கள், சுற்றுலா என எல்லாதரப்பட்ட பொருட்களும் சேவைகளும் கடன் வாங்கி நுகரப்படுகின்றன. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் நுகர்வோர் கடன் பெருந்தொகையாக உள்ளது. இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நுகர்வோர் கடன் அதிகரித்து வருகிறது. பொருளாதார விளைவுகள்ஒரு குறிப்பிட்ட அளவு நுகர்வோர் கடன் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்று என்று கூறப்படுகிறது. கடன் கிடைத்தால், நுகர்வோர் கூடிய பொருட்களையும் சேவைகளையும் நுகருவர். இவற்றை வழங்கள் வணிக நிறுவனங்கள் தமது உற்பத்தியைக் கூட்டும். ஆகவே ஒரு நாட்டின் உற்பத்தியை இது பெருக்கும். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், தென் கொரியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியோடு நுகர்வோர் கடன் அதிகரித்தமை இதற்கு சான்றாக கொள்ளப்படுகிறது.
இவற்றையும் பாக்க |
Portal di Ensiklopedia Dunia