நுரை (தாவரம்)
தேன்கூழாஅல்லது நுரை [3] (Longan; Dimocarpus longan) என்பது உண்ணத்தக்க பழங்களைத் தரக் கூடிய ஒரு அயனமண்டல தாவரம் ஆகும். இது சபின்டேசியே (Sapindaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. விபரிப்புநுரை மரம் என்றும் பசுமையாகக் காணப்படும் இடைத்தர உயரமுள்ள மரம் ஆகும். இது சுமார் 6 மீட்டர்கள் (20 அடி) முதல் 7 மீட்டர்கள் (23 அடி) வரையான உயரத்தில் வளரக் கூடியது. மணல் பாங்கான தரையில் வளரக் கூடியது. இது 4.5 °C (40 °F) வரையான வெப்பநிலையில் சிறப்பாக வளரக் கூடியது. சுமார்−2 °C (28 °F) அளவு வரையான வெப்பநிலை மாற்றத்தைத் தாங்கும்.[4] வரலாறுமியன்மாருக்கும் தெற்கு சீனாவுக்குமிடையிலான மலைத்தொடர்களில் இது உற்பத்தியானதாக நம்பப்படுகின்றது. மற்றொரு அறிக்கையின்படி இந்தியா, இலங்கை, உயர் மியன்மார், வட தாய்லாந்து, கம்போடியா, வடக்கு வியட்நாம் மற்றும் நியூ கினி ஆகியவற்றில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது. .[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia