நுழைவு இசைவு![]() ![]() ![]() ![]() ![]() விசா ( இலத்தீன் மொழியின் சார்ட்டா விசாவிலிருந்து, பொருள்: "பார்க்கப்பட்ட தாள்")[1] என்று பரவலாக அறியப்படும் நுழைவிசைவு அல்லது நுழைவாணை ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு ஒருவர் செல்வதையும் அல்லது அங்கிருந்து வெளியேறுவதையும் அனுமதிக்கும் ஆவணமாகும். இந்த அனுமதி ஒருவர் நுழைகையில் நுழைவெல்லையில் உள்ள குடியேற்ற அதிகாரியால் மேலும் கட்டுப்படுத்தப்படும். இந்த அனுமதி ஓர் ஆவணமாக இருக்கலாம்; ஆனால் பெரும்பாலான நேரங்களில் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டில் (அல்லது கடவுச்சீட்டிற்கு மாற்றான ஆவணத்தில்) முத்திரையாகப் பதிக்கப்படுகிறது. சில நாடுகள் சிலருக்கு நுழைவிசைவு இன்றியே உள்ளே செல்ல அனுமதிக்கின்றன; இவை இருநாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் இருக்கும். நுழைவிசைவை வழங்கும் நாடு பொதுவாக தங்குவதற்கு பல நிபந்தனைகளை இடலாம்; நுழைவிசைவு பெற்றவர் செல்லக்கூடிய நாட்டின் பகுதிகள் (அல்லது செல்லக்கூடாத பகுதிகள்), தங்கக்கூடிய நாட்கள், நுழைவிசைவின் காலக்கெடு, ஒருமுறை அல்லது பலமுறை சென்றுவர இசைவு ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பின் செலவிற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விசா அல்லது நுழைவிசைவு குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினருக்கு ஒரு நாட்டினுள் செல்லவும் அங்கு குறிப்பிட்ட நாட்கள் தங்கவும் அனுமதிக்கிறது. நுழைவதற்கான காலக்கெடு, எவ்வளவு நாட்கள் தங்கலாம் மற்றும் அங்கு வேலை செய்ய அனுமதி அல்லது தடை ஆகியவற்றை இந்த ஆவணம் வரையறுக்கிறது. விசா கிடைக்கப்பெற்றது அந்நாட்டிற்குள் நுழைய உறுதி வழங்குவதில்லை; எந்நேரமும் வழங்கப்பட்ட இசைவு இரத்து செய்யப்படலாம். வருகைக்கு முன்னதான விசா விண்ணப்பம் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளுக்கு வருகையாளரின் நிதி நிலை, வருகைக்கான காரணம், அந்நாட்டிற்கு வந்த முந்தைய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள வழி செய்கிறது. நுழைகின்ற நாளன்று நிலவுகின்ற பல்வேறு அரசியல்/சமூக/தீவிரவாத நிகழ்வுகளுக்கேற்ப நுழைவிசைவு பெற்றிருந்தாலும் நுழைவு மறுக்கப்படலாம். இவற்றைத் தவிர வருகையாளர் எல்லையில் பாதுகாப்புச் சோதனைகளிலும் உடல்நலச் சோதனைகளிலும் தேர்வுற வேண்டும். சில நாடுகளில், காட்டாக சோவியத் ஒன்றியத்தில், அந்நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அந்நாட்டை விட்டு வெளியேற "வெளியேற்ற விசா" தேவைப்படுகிறது.[2] வழங்கலுக்கான விதிமுறைகள்சில நாடுகளில் அந்நாட்டில் நுழைகையிலேயே உட்புகும் துறையில் நுழைவிசைவு வழங்கப்படும். பொதுவாக அந்நாட்டு தூதரகம் அல்லது பேராளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில் இப்பணி மூன்றாம்நிலை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். தூதரகம் இல்லாதநிலையில் அஞ்சல் மூலமோ அல்லது தூதரகம் உள்ள வேறொரு நாட்டிலோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்நாட்டுக் குடிமகன், தங்கும் நாட்கள், அங்கு ஆற்றவுள்ள பணிகளைக் கொண்டு ஒருவருக்கு நுழைவிசைவு தேவையா அல்லவா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இவை மேலும் பலவகை விசாக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகை விசாவிற்கும் வெவ்வேறு வரைக்கட்டுக்கள் விதிக்கப்படுகின்றன. சில நாடுகள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிரெதிர் விசா முறைமைகளைக் கொண்டுள்ளன; ஏ என்ற நாட்டிற்கு செல்ல பி என்ற நாட்டு குடிமக்களுக்கு விசா தேவைப்படின் பி நாடும் ஏ நாட்டு குடிமக்களுக்கு விசா பெறுதலைத் தேவையாக்குகிறது. இதேபோல ஏ நாடு பி நாட்டு குடிகள் விசாவின்றி நுழைய அனுமதித்தால் பி நாடும் அத்தகைய சலுகையை ஏ நாட்டு குடிகளுக்கு வழங்குகிறது. இத்தகைய எதிரெதிர் விசா முறைமையைக் கொண்டுள்ள சிலவற்றின் எடுத்துக்காட்டுக்கள்:
விசா வழங்குவதற்கு பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும்; இதுவும் பொதுவாக எதிரெதிர் தன்மையுடையது. காட்டாக ஏ நாடு பி நாட்டு மக்களுக்கு 50 அமெரிக்க டாலர்கள் வசூலித்தால் பி நாடும் ஏ நாட்டு விசாக்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்கும். மேலும் இந்தக் கட்டணத்தை நிர்ணயிப்பது ஒவ்வொரு தூதரகத்தின் விருப்புரிமை ஆகும். இதேபோல விசா செல்லுபடியாகும் காலம், எத்தனை முறை உட்புகுலாம் என்பதும் எதிரெதிர் நிலையில் அமைகின்றன. விசாவை விரைவாகப் பெற சில நாடுகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. விசா வகைகள்வழமையான விசா வகைகள்:
வழமையிலா விசா வகைகள்:
மேற்கோள்கள்
மேலும் தகவல்களுக்கு
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia