நூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம்பொருள் சேவை வரி (Goods and Services Tax) அல்லது (GST) தற்போதைய மத்திய, மாநில மறைமுக வரிகளுக்கு மாற்றாக இந்தியா முழுமையும் ஏப்ரல் 2016 முதல் விதிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு மதிப்புக் கூட்டு வரியாகும். [1] [2] இது இலங்கையில் உத்தியோகப் பூர்வமாக பண்டங்கள், சேவைகள் வரி (Goods and services Tax) எனப்பட்டது. இதற்குப் பகரமாக, தற்போதுள்ள வரி முறை 'பெறுமதி சேர் வரி (Value Added Tax) எனப்படுகிறது. இந்தியாவில் தயாராகும் அனைத்துப் பொருட்களுக்கும், வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் இது பொருந்தும். உலகின் பிற நாடுகளில் வழங்கும் பொருள் சேவை வரிகளுக்கொப்ப இது வரிவிதிப்பைச் சீராக்கும். இதனை இந்தியாவின் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கூட்டாகச் செயல்படுத்தும். இந்திய அரசியல் சட்டத்தின்படி, இவ்வகையில் ஒரே நேரத்தில் இரு அரசுகள் சரக்கு அல்லது சேவை மீது வரி விதிக்க வழி இல்லாததால், மார்ச் 22, 2011 அன்று 'பொருள் சேவை வரி மசோதா 2011' என்ற 115-ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமையை உருவாக்க, பீகாரின் நிதி அமைச்சர் சுசில்குமார் மோடி தலைமையில் மாநிலங்களின் நிதி அமைச்சர்களின் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் முதன்மையான நிதி வருவாயாக அமைந்துள்ள விற்பனை வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரிக்கு மாற்றாக இந்த வரி அமைகிறது. இவ்வரி செயலாக்கத்தினால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யுமாறு ஒன்றிய-மாநில அரசு நிதி பகிர்வு குறித்த உடன்பாடு எதுவும் இன்னமும் எட்டாத நிலையில் [3] [4] ஏப்ரல் 2016 முதல் செயலாக்கத்திற்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறுஇந்தியாவில் பொருட்களுக்கான மறைமுகவரியாக ஒன்றிய அரசு கலால் வரி மற்றும் ஒன்றிய அரசு விற்பனை வரியையும் சேவைகளுக்குச் சேவை வரியையும் வசூலித்து வருகிறது. மாநில அரசுகள் விற்பனை வரியையும் சேவைகளுக்குக் கேளிக்கை வரி, உல்லாச வரி எனவும் வசூலித்து வருகின்றன. இவை விதிக்கப்படும் பொருட்களும் சேவைகளும் அவற்றிற்கான வரிவிகிதமும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது. அண்மையில் பெரும்பாலான மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரிக்கு மாறியபோதும் வணிகர்கள் இத்தகைய குறைபாடுகளை வெளிப்படுத்தி வந்தனர். பொருளியல் வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் 2007-2008ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது அப்போதைய ஒன்றிய அரசு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இத்தகைய வரி ஏப்ரல் 2010 முதல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்கான செயலாக்கத் திட்டத்தினை வரையறுக்க மே 10, 2007 அன்று கூட்டப்பட்ட மாநில நிதி அமைச்சர்களின் குழு, ஒன்றிய அரசு நிதி அமைச்சரின் ஆலோசகர், மாநில நிதி அமைச்சர்கள் குழுவின் செயலாளர், ஒன்றிய அரசு நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை கூட்டுச்செயலர், மாநில நிதி அமைச்சகங்களின் செயலர்கள் ஆகியோர் அடங்கிய 'கூட்டுச் செயற்குழு' வை ஏற்படுத்த பரிந்துரைத்தது. இந்தக் கூட்டுச் செயற்குழு தனது ஆய்வுகளுக்குப் பின்னரும் பிற வல்லுனர்களுடனும் வணிகச் சங்கங்களுடன் கலந்தாய்வுகளுக்குப் பின்னரும், தனது அறிக்கையை நவம்பர் 19, 2007 அன்று அமைச்சர் குழாமிற்கு அளித்தது. இந்த அறிக்கையை நிதி அமைச்சர்கள் குழாம் நவம்பர் 28, 2007-இல் கூடி விவாதித்தது. இந்த கலந்தாய்வு மற்றும் சில மாநிலங்களின் எழுத்து ஊடான கருத்துக்களின் அடிப்படையில் கூட்டு நிதி அமைச்சர்களின் குழு தனது அறிக்கையில் ஏப்ரல் 30, 2008-இல் ஒன்றிய அரசுக்குச் சில மாற்றங்களைப் பரிந்துரைத்து அனுப்பியது. ஒன்றிய அரசின் கருத்துக்கள் திசம்பர் 12, 2008-இல் பெறப்பட்டு கூட்டு நிதி அமைச்சர்கள் குழாம் இதனைத் திசம்பர் 16, 2008-இல் பரிசீலித்தது. மாநிலங்களின் முதன்மைச் செயலர்கள் இக்கருத்துகளை மேலும் ஆய்வு செய்வர் எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கருத்துரைகளின்படி சனவரி 21, 2009-இல் அனைவராலும் உடன்படக்கூடிய வரைவொன்று கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்புடைய மாநில அரசு அதிகாரிகளும் ஒன்றிய அரசு அதிகாரிகளும் கலந்தாய்ந்து, இதனை நிர்வகிக்கும் அமைப்பு குறித்த பரிந்துரைகளை வழங்கினர். அக்டோபர் 19, 2009 அன்று நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜி கூட்டு மாநில நிதியமைச்சர்கள் குழாமுடன் உரையாடினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களுக்கான இழப்பீடு, வரி நிர்வாக கட்டமைப்பு போன்றவை குறித்த விவரமாக உரையாடப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய முதல் விவாதத் தாளை இந்த வரி குறித்து எழும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலை அனுபந்தத்துடன், பொதுமக்களின் கருத்துகளுக்காகவும் தொழில், வணிக அமைப்புகளின் கருத்துக்களுக்காகவும் வெளியிட்டார். முதல் விவாதத் தாள்பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட இந்தத் தாள் மூன்று பகுதிகளை அடக்கியது. முதல் பகுதியில் மதிப்புக்கூட்டு வரி அறிமுகப்படுத்தி, எங்கெல்லாம் இது மேம்படக்கூடியது என விவரிக்கப்பட்டுள்ளது. பொருள் சேவை வரி விதிப்பு இக்குறைபாடுகளை எங்ஙனம் நீக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் இந்த வரிவிதிப்பிற்குத் தயாராகும் செயல்முறைகள்குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் பொருள் சேவை வரிக் கட்டமைப்புகுறித்த முழுமையான விவரங்கள் தரப்பட்டுள்ளன. எந்த வரிகளுக்கான மாற்று ?ஒன்றிய அரசு:
மாநில அரசுகள்:
சரக்கு மற்றும் சேவை வரியின் நலன்கள்அரசுகளுக்குவணிகர்களுக்குவிமரிசனங்கள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia