நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை
நெட்டூர் டெக்னிகல் டிரெயினிங் பவுண்டேசன் (NTTF) என்னும் நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை என்பது இந்தியாவில் உள்ள தனியார் கல்வி அறக்கட்டளை ஆகும். இந்தப் பயிற்சியகத்தின் கிளைகள் தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளது. இது நல்ல வேலைவாய்ப்புகளை பெறத்தக்க தரமுள்ள கல்வி வழங்கும் குறிக்கோளுடன், சுவிஸ் கூட்டுறவு மூலம் 1963 இல் நிறுவப்பட்டது. என் டி.டி.எஃப் கல்வியானது தன்கையே தனக்குதவி என்பது போன்ற நடைமுறை பயிற்சிகள் கொண்ட பட்டையப் படிப்பாகும். என் டி.டி.எஃப் பட்டதாரிகள் தொழிற்துறையில் அவர்களது நடைமுறை திறமைகளுக்கு புகழ்பெற்றவர்கள்.[சான்று தேவை] என்.டி.டி.எஃப் தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தில் இயந்திர பொறியியல், மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பொறியியல், மெக்கட்ரோனிக்ஸ் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்புகள், பிந்தைய பட்டையப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளுடன் பெங்களூர், பட்டி, பெல்லாரி, கோயம்புத்தூர், தார்வாடு, கன்னவரம்,, கோபால்பூர்-ஒடிசா, ஐதராபாத், ஜம்சேத்பூர், கும்பகோணம், கூட்டிப்புரம், மலப்புறம், முர்பாத், தலச்சேரி, தும்கூர், தூத்துக்குடி, வடக்கச்சேரி, வேலூர். ஆகிய இடங்களில் 20 க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களைக் கொண்டு இது செயல்படுகிறது.[1] ![]() வரலாறு![]() நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளையானது - சி.எஸ்.ஐ. தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 12 ஏப்ரல் 1958 இல், தென்னிந்திய திருச்சபை மற்றும் ஹெச்.கே.எஸ் (ஹில்ஸ்ப்வர்ஸ்க் டெர் எவன்ஜெலிஸ்கோன் கிர்சென் டெர் ஸ்விஸ்), சுவிட்சர்லாந்து, ஆகியவை இணைந்த ஒரு கூட்டு முயற்சியாக, தொழில்நுட்ப கல்விக்கு ஊக்குவிக்கும் விதமாக நிறுவப்பட்டது. ஒவ்வொரு எச் கே எஸ் வலைத்தளமும், திட்டத்திற்கான ஆரம்ப நிதிகள் ஜூரிச், ஆர்கோவ், பாசெல், ஷாஃபாஹெசென் ஆகிய பிராந்தியங்களில் நிறுவப்பட்ட தேவாலயங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவை விரைவாக தொழில்மயமாக்கலை விரிவுபடுத்துவதற்காக துல்லியமான கருவியில் (டூல் அண்ட் டை மேகிங்) பயிற்சியளிக்கும் ஒரு நிறுவனத்திற்கான தேவையும் அவசியமும் உள்ளது உணரப்பட்டது. 1959 நவம்பர் 24 அன்று, கண்ணூர் வள்ளப்பள்ளனையைச் சேர்ந்த வெஸ்டன் இந்தியா பிளேஉட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான திரு. கடகூட்டி, நேட்டூரில் பயிற்சி மையத்தை முறைப்படி திறந்து வைத்தார். 1959 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி டூல் அண்ட் டை மேகிங் பயிற்சியை பெறுவதற்காக 16 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 1962 சனவரியில் முதல் தொகுதி மாணவர்கள் என்சிடிவிடி( NCTVT) (தற்போது NCVT என்று அழைக்கப்படும் தொழிற்பயிற்சி கழகங்களில் தேசிய கவுன்சிலிங் பயிற்சி) பயிற்சிக்காக சேர்கப்பட்டு 1964 ஆம் ஆண்டு நான்கு ஆண்டு படிப்பை நிறைவுசெய்தனர். தொடக்கத்தில் பயிற்சிக் காலமானது 3.5 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் அது பின்னர் நான்கு ஆண்டுகளாக முதல் தொகுதி மாணவர்களுக்கே நீட்டிக்கப்பட்டது. கேரளத்தின் நெட்டூரில் அமைக்கப்பட்ட முதல் பயிற்சி மையத்தில் சுவிஸ் தொழில்நுட்ப நிபுணர், ஆல்ஃபிரெட் ஃபிர்ஷ்க்க்னெக்ட் பணியமர்த்தப்பட்டார். இவர்தான் நெட்டூர் மையத்தின் முதல் துணைவேந்தராவார். இந்தியாவில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, சுவிட்சர்லாந்திலுள்ள சுச்சீரில் ஹெக்ம்ஸ் தலைமை அலுவலகத்தில் வளர்ச்சி திட்டத்திற்கு பொறுப்பேற்கச் சென்றார். இந்த கல்வி நிறுவனம் துவக்கப்பட்டதிலிருந்து மிகுந்த நிதி தேவையும், தொடர்ந்து பராமரிப்பதற்கு தொடர்ந்து அதிக பணம் தேவைப்பட்டதாகவும் இருந்தது. தென்னிந்தியத் திருச்சபையானது அதன் நிலம் மற்றும் கட்டிடங்கள் சிலவற்றை கல்வி நிலையத்துக்க நெட்டூரில் அளித்தது, சில கட்டிடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன, சில என் டி டி எஃப்க்காக புதியதாக நிர்மாணிக்கப்பட்டன. போதுமான இயந்திர கருவிகளையும், உபகரணங்களையும் மேலும் வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியை அளிக்க நன்கொடை முகமைகளால் உறுதியளிக்கப்பட்டன. 1964 தர்வாட்டில் ஒரு பயிற்சி மையம் நிறுவப்பட்டது, கர்நாடகத்தின் சி.எஸ்.ஐ தேவாலயத்தால் மீண்டும் ஒரு சொத்தை கல்வி நிலையத்துக்கு அளித்தது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பயிற்சி மையம் நிறுவப்பட்டது. பெங்களூருவில் 1978 இல் உலக தரம்வாய்ந்த கருவி அறை மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டது. காலக்கோடு
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia