நெம்புகோல்

நெம்புகோலைப் பயன்படுத்திச் சிறிய விசையைக் கூடிய தூரம் நகர்த்துவதன்மூலம், பெரிய சுமைகளைச் சிறிய தூரங்களுக்கு நகர்த்தலாம்.
தராசில் ஒரு நெம்புகோல்
நெம்புகோலின் சில வகைகள்.
இது ஒரு செதுக்கிய சித்திரம். இது 1824 இலண்டனில் இயக்கவியல் இதழில் வெளியிடப்பட்டது.

இயற்பியலில், நெம்புகோல் என்பது, இன்னொரு பொருளின் மீது பயன்படுத்தக் கூடிய பொறிமுறை விசையை பலமடங்குகள் ஆக்கக்கூடியதாக அமைக்கப்பட்ட ஒரு விறைப்பான பொருள் ஆகும். திருப்புதிறன் கொள்கைக்கான ஒரு எடுத்துக்காட்டான இது ஆறு எளிய பொறி வகைகளுள் ஒன்று.

இயக்கக் கோட்பாடு

நெம்புகோல் கொள்கைப்படி, F1D1 = F2D2 ஆக இருப்பின், தொகுதியின் எல்லா விசைகளும் சமநிலையில் இருக்க அது நிலையியல் சமநிலையில் இருக்கும்.

நெம்புகோல் கொள்கை நியூட்டனின் இயக்க விதிகளில் இருந்தும், தற்கால நிலையியலில் இருந்தும் பெறப்படலாம். ஒரு விசைக்கு எதிராகச் செய்யப்படும் வேலையின் அளவு அவ்விசையின் அளவை அது நகர்ந்த தூரத்தால் பெருக்குவதன் மூலம் பெறப்படும். நெம்புகோலொன்றின் மூலம் ஓரலகு எடை கொண்ட பொருளொன்றை அரை அலகு விசையைப் பயன்படுத்தி உயர்த்த வேண்டுமாயின், சுழலிடத்தில் இருந்து விசை பயன்படுத்தப்படும் இடத்துக்கான தூரம், சுழலிடத்துக்கும் உயர்த்தப்படும் பொருளுக்கும் இடையிலான தூரத்தின் இரண்டு மடங்காக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக சுழலிடத்தில் இருந்து ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள 50 கிலோகிராம் எடை கொண்ட பொருளை 25 கிலோகிராம் விசையைப் பயன்படுத்தி உயர்த்த வேண்டுமானால் அவ்விசையைச் சுழலிடத்தின் எதிர்ப் பக்கத்தில் அதிலிருந்து 2 மீட்டர் தூரத்தில் பயன்படுத்த வேண்டும். சுழலிடத்திலிருந்து விசை பயன்படுத்தப்படும் தூரத்தைப் பொறுத்து விசையின் அளவு மாறுபடும். தூரத்தைக் கூட்டும்போது பயன்படுத்த வேண்டிய விசையின் அளவு குறையும். எனினும், இக்குறைவான விசையைக் கூடிய தூரம் நகர்த்தவேண்டி இருப்பதால் செய்யப்படும் வேலையின் அளவு மாறுபடுவதில்லை.


ஆக்கிமிடீசு என்பவரே நெம்புகோல் கொள்கையை முதலில் விளக்கியவர். இவர் பின்வருமாறு கூறினார்:

சமமான தூரத்தில் இருக்கும் சமமான எடைகள் சமநிலையில் இருக்கும். சமனான எடைகள் சமனற்ற தூரத்தில் இருக்கும்போது சமநிலையில் இராமல் தொலைவில் இருக்கும் எடையின் பக்கம் சரியும்.

நெம்புகோலின் பயனை விளக்குவதற்காக, நிற்பதற்கு ஒரு இடம் இருந்தால், நெம்புகோலைப் பயன்படுத்திப் புவியையே நகர்த்திக் காட்டுவேன் என்று ஆக்கிமிடீஸ் கூறினாராம்.


நெம்புகோல் ஓரிடத்தைப் பற்றிச் சுழலக்கூடியதாக அமைந்திருக்கும். இவ்விடம் சுழலிடம் எனப்படும். எப்பொருளின்மீது விசை பயன்படுத்தப்பட உள்ளதோ அப்பொருள் சுமை எனவும் அதன் மீது பயன்படுத்தப்படும் விசை முயற்சி எனவும் அழைக்கப்படும். சுமைக்கும் சுழலிடத்துக்கும் இடையில் உள்ள தூரம் சுமைப் புயம் எனவும், முயற்சிக்கும் சுழலிடத்துக்கும் இடையிலுள்ள தூரம் முயற்சிப் புயம் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையிலான தொடர்பு பின்வருமாறு சமன்பாடாகக் குறிக்கப்படலாம்.

சுமை x சுமைப் புயம் = முயற்சி x முயற்சிப் புயம்

நெம்புகோல் வகைகள்

நெம்புகோல்களை மூன்று வகைகளாகப் பிரிக்கமுடியும். இவை, முதல்வகை நெம்புகோல், இரண்டாம் வகை நெம்புகோல், மூன்றாம் வகை நெம்புகோல் என அழைக்கப்படுகின்றன.

முதல் வகை நெம்புகோல்

முதல் வகை நெம்புகோல்

இவ்வகை நெம்புகோல்களில் சுழலிடம், சுமைக்கும், முயற்சிக்கும் இடையில் அமைந்திருக்கும். இதில் முயற்சி விசை தள்ளுவதன் மூலம் அல்லது இழுப்பதன் மூலம் கொடுக்கப்படும். இவ்வகை நெம்புகோல்கள் சிலவற்றில் சுழலிடம், சுமைக்கும், முயற்சிக்கும் இடையில் சமதூரத்தில் நெம்புகோலின் மையப் பகுதியில் அமைந்திருக்கக் காணலாம். ஆனால், இது சுமைக்கும் முயற்சிக்கும் இடையில் எப்புள்ளியிலும் அமையலாம்.

எடுத்துக்காட்டுகள்:

இரண்டாம் வகை நெம்புகோல்

இரண்டாம் வகை நெம்புகோல்

இவ்வகையில் சுழலிடம் ஒரு முனையிலும், முயற்சி மறு முனையிலும் இருக்க, சுமை இவ்விரண்டுக்கும் இடையில் இருக்கும்.

எடுத்துக்காட்டுகள்:

மூன்றாம் வகை நெம்புகோல்

மூன்றாம் வகை நெம்புகோல்.

மூன்றாம் வகையில் சுழலிடம் ஒரு முனையிலும் சுமை மறு முனையிலும் இருக்க முயற்சி அவற்றுக்கு இடையில் இருக்கும். இவ்வகையில் சுமையிலும் முயற்சி விசை அதிகமாக இருக்கும். எனவே குறைந்த விசையுடன் கூடிய சுமையை நகர்த்தும் நோக்கில் இது பயன்படுத்தப்படுவதில்லை மாறாக, முயற்சி விசையை வசதியான இடமொன்றில் கொடுக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், இதன் மூலம் முயற்சி விசையிலும் கூடிய வேகத்துடன் சுமையை நகர்த்த முடியும்.

எடுத்துக்காட்டுகள்:

இவற்றையும் பாருங்கள்

மேலும் நேம்புகொலைப் பற்றி அறிய

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya