நெற்றிப் பட்டம்![]() நெற்றிப் பட்டம் (Fillet) என்பது தலையில் அணியும் ஒரு வகை அணியாகும். இது முதலில் பாரம்பரியக் காலத்தில் அணியப்பட்டது. குறிப்பாக எலனியப் பண்பாடு உட்பட மத்திய தரைக்கடல், லெவண்ட், பாரசீகப் பண்பாட்டில் அணியப்பட்டது. அந்த காலத்தில் நெற்றிப் பட்டம் என்பது மிகவும் குறுகிய துணி, தோல் அல்லது சில வகையான மாலைகளால் ஆனதாகும். இது விளையாட்டு வீரர்களால் அடிக்கடி அணியப்பட்டது. அரச குடும்பத்தின் அடையாளமாகவும் அணியப்பட்டது. இது ஒரு பகட்டான துணியால் ஆனது. கிரேக்கர்கள் இதை டயடெமா (διάδημα) என்று அழைத்தனர். இது பிற்காலத்தில் ஒரு உலோக வளையமாக மாறியது. யூலியசு சீசருக்கு நெற்றிப்பட்டத்தை மார்க் ஆண்டனி வழங்கியபோது அதை அணிய மறுத்ததுவிட்டார். பின்னர் வந்த உரோமைப் பேரரசர்கள் பொதுவாக உரோமப் பேரரசை கிறித்தவமயமாக்கிய கான்ஸ்டன்டைன், வரை இந்த நடைமுறையை பின்பற்றினர். அவர்களின் அரச குடும்பத்தினர் கிரேக்கச் சின்னத்தை ஏற்றுக்கொண்டவர்களாக இருந்தனர். அதன்பிறகு, உரோமானியப் பேரரசர்களால் இறையாண்மையின் அடையாளமாக மகுடம் அணியப்பட்டது. முன்னதாக, இது உரோமானிய பெண்களால் தலை ஆடையாக பயன்படுத்தப்பட்டது.[2] பின்னர், இடைக்காலத்தில், நெற்றிப் பட்டை என்பது திருமணமாகாத பெண்கள் அணியக் கூடியதாகவும், சில துறவிகளின் தலைமறைப்பாகவும் இருந்தது.[3] தமிழர் திருமணச் சடங்குகளில் மணமகன், மக்கள் என இருவரும் நெற்றிப் பட்டம் அணியும் பழக்கம் உள்ளது. மணப் பெண்ணுக்கு அவளது தாய்மாமன் நெற்றிப்பட்டம் அணிவிப்பது வழக்கம். அதை கொங்கு மங்கலவாழ்த்தும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:
காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia