நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1] அமைவிடம்இக்கோயில் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ளது.[2] மூலவர்அழகிய இராஜகோபுரத்தையும், உள் திருச்சுற்றையும் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் மாரியம்மன் நான்கு கரங்களைக் கொண்டு அமைந்துள்ளார். சிறந்த பிரார்த்தனைத் தலம் என்ற பெருமையினை இக்கோயில் பெற்றுள்ளது.[2] செடில் உற்சவம்ஒவ்வோர் ஆண்டும் இங்கு நடைபெறுகின்ற செடில் உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] அவ்விழா சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. குழந்தை வரம் வேண்டுகின்றவர்கள் தம் பிரார்த்தனை நிறைவேறியபின்னர் நேர்த்திக்கடனை நிறைவேற்றும்பொருட்டு தங்கள் குழந்தைகளை செடில் உற்சவத்தில் பங்கேற்கவைக்கின்றனர். ஏற்றம் போல அமைந்துள்ள செடிலில் குழந்தைகளைத் தாங்கிய படியானது பூசாரியால் சக்கரம் போல சுழற்றப்படுவதே நேர்த்திக்கடனாகக் கருதப்படுகிறது.[2] பராமரிப்புஇக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia