நெளிகோதுமை
![]() நெளிகோதுமை (Buckwheat) ( பேகோபைரம் எசுக்குலென்டம்), அல்லது இயல்பு நெளிகோதுமை [2] அதன் கூலம் போன்ற விதைகளுக்காக பயிரிடப்படும் தாவரமாகும். இது ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. இதையொத்த மேலும் கார்ப்பான பேகோபைரம் டாட்டாரிகம் ஆசியாவில் வீட்டினமாக்கப்பட்டு உணவுப் பயிராக வளர்க்கப்படுகிறது. நெளிகோதுமை என வழங்கினாலும் இது புல் தாவரம் அல்ல என்பதால் கோதுமையோடு எந்தவகையிலும் உறவு கொண்டதன்று. மாறாக, புளியாரைக் கீரைப் பயிரோடும் பாலிகோனம் முடிச்சுக்களையோடும் உரூபார்புடனும் தொடர்புள்ளதாகும். நெளிகோதுமை அதில் அமைந்த சிக்கலான மாவுப்பொருளால் ஒரு போலிக் கூலமாக அமைகிறது. இருபதாம் நூற்றாண்டில் நெளிகோதுமை விளைச்சல் காலக உரப் பயன்பாட்டால் பிற முதன்மை கூலங்கள் பேரளவில் விளைந்தமையால் வேகமாக வீழ்ச்சி கண்டது. வேர்ச்சொல்லியல்"நெளிகோதுமை " அல்லது "பீச் கோதுமை" எனும் பெயர் அதன் முக்கோண வடிவத்தாலும் கோதுமையைப் போல பயன்படுத்துவதாலும் ஏற்பட்டதாகும். இது இதைவிட பெரிய பீச் விதைகளை ஒத்திருப்பதால் பீச் கோதுமை எனப்படுகிறது இந்தச் சொல் இடைக்கால டச்சு மொழிச் சொல்லாகிய boecweite: boec (புத்தியற் டச்சு beuk) என்பதன் மொழிபெயர்ப்பான "பீச்" அல்லது கோதுமை எனவும் கருதப்படுகிறது அல்லது டச்சு மொழிச் சொல்லைப் போன்ற வடிவமுள்ள தாயக மொழிபெயர்ப்புச் சொல்லில் இருந்தும் உருவாகியிருக்கலாம்.[3] வரலாறு![]() ![]() இயல்பு நெளிகோதுமையின் காட்டுவகை பே. எசுக்கொலென்டம் ssp. ஆன்செசுட்டிரேல் ஆகும். பே. ஓமோட்ரோப்பிகம் வகை பே. எசுக்குலென்டம் வகையுடன் இணைந்த்ருவானது. இந்தக் காட்டுவகைகள் சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள யுன்னானில் பரவலாக ஒன்றாகப் பரவியுள்ளன. டார்ட்டாரி நெளிகோதுமையின் காட்டுவகை பே. டாட்டாரிகம் ssp. பொட்டானினி ஆகும்.[4] இயல்பு நெளிகோதுமை கிமு 6000 ஆண்டளவில் ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் வீட்டினமாக்கப்பட்டு பயிரிடப்பட்டுள்ளது. பிறகு இது நடுவண் ஆசியாவுக்கும் திபெத்துக்கும் பரவி, அதற்குப் பின் நடுவண்கிழக்குப் பகுதிக்கும் ஐரோப்பாவுக்கும் வந்தடைந்துள்ளது. வீட்டினமாக்கம் சீனா, யுன்னானின் மேற்குப் பகுதியில் பெரும்பாலும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.[5] இதன் மிகப் பழைய எச்சங்கள் கிமு 2600 ஆண்டளவில் சீனாவிலும் பூந்துகள்கள் கிமு 4000 ஆண்டளவில் யப்பானிலும் கிடைத்துள்ளன. உலகின் மிக உயரத்தில் வளரும் வீட்டினமாக்கத் தாவரம் இது திபெத்து மேட்டுச் சமவெளி ஓரமுள்ள யுன்னானிலோ அல்லது அந்தச் சமவெளியிலேயோ பயிரிடப்பட்டுள்ளது. நெளிகோதுமை ஐரோப்பா வட அமெரிக்காவில் முதலில் அறிமுகப்படுத்திய தாவரங்களில் ஒன்றாகும். இது 2006 இல் கனடா உருவாக்கிய ஒரு பயிரிடும்வகை சீனாவில் பரவலாகப் பயிரிடப்பட்டதும் உலக முழுவதும் பரவி விட்டது. இது இந்தியாவில் மாக்கோதுமை எனப்படுகிறது. இது நவராத்திரி விழாவுடன் பண்பாட்டியலாகத் தொடர்புள்ளது. அப்போது அனைத்துப் பண்டங்களும் நெளிகோதுமையிலேயே செய்யப்பாட்டு உண்ணப்படுகின்றன.[6] ![]() ![]() பயிரிடல்நெளிகோதுமை ஒரு குறும்பயிராகும். குறைவான மண்வள்ப் பகுதிகளில் நன்கு வளரும். ஆனால், மண்ணில் நீர் தேங்காமல் வற்றச் செய்யவேண்டும். டுதல் உரம், குறிப்பாக காலக உரம் விளைச்சலைக் குறைக்கும். வெப்பக் காலநிலைகளில் கோடையின் இறுதியில் குளிர்வானிலையில் பூக்குமாறு பயிரிடவேண்டும். பொலன்சேர்க்கை முகமை உயிரிகள் விளைச்சலைக் கூட்டும். நெளிகோதுமை பூக்கள் கருந்தேனைத் தருகின்றன. இது சிலவேளைகளில் தழையுரமாகவும் அரிப்புகாப்புத் தாவரமாகவும் காட்டுக் கவிப்புவகையாகத் தீவனமாகவும் பயன்படுகிறது. உட்கூறுகள்மாவுப்பொருள்
புரதம்முருட்டுப் புரதம் 18% ஆகவும் உயிரியல் மதிப்புகள் 90% ஆக அமையும்.[10] மிகத் தேவையான அமினோ அமிலங்களின் உயர்செறிவால் இதை விளக்குகின்றனர்.[11] இவற்றில் குறிப்பாக இலிசைன், திரியோனைன், டிரைப்டோபான், கந்தகம் கொண்ட அமினோ அமிலங்கள் அடங்கும்.[12] கனிமச் சத்துகள்பாலிபீனால்கள்
பேகோபைரின்ஒரு கிராம் நெளிகோதுமையில் 0.4 to 0.6 மிகிராம் பேகோபைரின்கள் ( ஆறுவகைகள்) உள்ளன.[17][18][19] விளைச்சல்
வரலாற்றியலாக நெளிகோதுமை விளைச்சலில் உருசியப் பேரரசு தான் முன்னணியில் இருந்தது.[21] மேற்கோள்கள்
![]() விக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Buckwheat உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia