நேரு நினைவுக் கல்லூரி (Nehru Memorial College), தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள புத்தனாம்பட்டியில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதனை 1967-ல் அன்றைய தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை திறந்து வைத்தார். இதன் நிறுவனர் மூக்கப்பிள்ளை. இதில் மொத்தம் 13 துறைகள் உள்ளன.இக்கல்லூரியில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் விடுதி வசதி உள்ளது. தமிழ்நாட்டுக் கல்லூரிகளுள் முதலில் கணினித் துறை இக்கல்லூரியிலும் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியிலும் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. (1983-1984 கல்வி ஆண்டில்).[1] இக்கல்லூரி மாவட்டத் தலைநகர் திருச்சியுடனும் துறையூருடனும் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கும் போது சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று பின்னர் 1983ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பெற்றது. 2004 ஆம் ஆண்டு இக்கல்லூரி தன்னாட்சி பெற்றது.
கல்லூரி மேலாண்மை
- நிர்வாகம்
- தி நேரு மேமொரியல் காலேஜ் கமிட்டி (1975 ஆம் ஆண்டு தமிழ்நாடுச் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது)
- கல்லூரிக்குழு
- தன்னாட்சி
- ஆட்சிக்குழு
- கல்வி அலுவல் குழு
- நிதிக்குழு
- பாடத்திட்டக்குழு
கல்லூரியில் நடத்தப்படும் வகுப்புக்கள்
இளம்நிலை
|
முதுநிலை
|
பட்டயப்படிப்பு [2]
|
கணிதம்
|
கணிதம்
|
|
வேதியியல்
|
வேதியியல்
|
|
இயற்பியல்
|
இயற்பியல்
|
கருவி மயமாக்கல்
|
கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள்
|
கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள்
|
கணிப்பொறி பயன்பாடுகள்
|
விலங்கியல்
|
விலங்கியல்
|
மூலிகைப்பண்ணை
|
வணிகவியல்
|
வணிகவியல்
|
மின்னணு மற்றும் மின்சாரக் கருவிகள் பராமரிப்பு
|
பொருளியல்
|
உயிரியியல் தொழில்நுட்பம்
|
உயிரின உரங்கள் மற்றும் மண்புழு வளர்ப்பு
|
தமிழ்
|
|
|
ஆங்கிலம்
|
|
|
வணிக மேலாண்மை நிர்வாகவியல்
|
|
|
வரலாற்று மைல்கற்கள்
- 1967 - நேரு நினைவுக்கல்லூரி துவக்கம்
- 1983 - முதுகலை வகுப்புகள் ஆரம்பம்
- 1983 - கணினி அறிவியல் இளங்கலை வகுப்பு ஆரம்பம்
- 2000 - வணிகவியல் துறை பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சித்துறையாக அங்கீகரிக்கப்பட்டது
- 2001 - இயற்பியல் துறை பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சித்துறையாக அங்கீகரிக்கப்பட்டது
- 2004 - பல்கலைகழக மான்ய குழுவினால் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது
- 2005 - விலங்கியல் துறை பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சித்துறையாக அங்கீகரிக்கப்பட்டது
- 2010 - இயற்பியல் துறைக்கு இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை - அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பு மேம்படுத்த ரூ 35.5 இலட்சம் நிதியுதவி அளித்தது.[DST -FIST]
நிகழ்வுகள்
12,13,14-09-2012: தேசிய தர நிரணயம் மற்றும் மதிப்பீட்டுக் கழகத்திலிருந்து (NAAC) தர மதிப்பிட்டுக் குழு (PTV) வருகை புரிந்தது.
5-01-2013: தேசிய தர நிரணயம் மற்றும் மதிப்பீட்டுக் கழகம் நேரு நினைவுக் கல்லூரிக்கு "A" Grade வழங்கியது
மேற்கோள்கள்
- ↑ சுஜாதா (1993) அப்பா அன்புள்ள அப்பா, பாரதி பதிப்பகம், சென்னை
- ↑ பல்கலைக்கழக மான்ய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது [2001,2002,2007]
வெளி இணைப்புகள்